logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
ஒவ்வொரு அம்மாவும் தெய்வம்தான்..சினேகாவின் பிரசவ வலி பற்றி மனம் திறக்கும் பிரசன்னா !

ஒவ்வொரு அம்மாவும் தெய்வம்தான்..சினேகாவின் பிரசவ வலி பற்றி மனம் திறக்கும் பிரசன்னா !

திரையுலக ஜோடிகளின் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருக்கும் ஒரே ஜோடி யார் என்றால் சினேகா பிரசன்னா ஜோடிதான். மற்ற நட்சத்திர தம்பதிகளிடம் காணப்படும் எந்த விட பந்தாவும் இவர்களிடம் இருக்காது.                                                       

எல்லா விழாக்களிலும் இவர்களை எளிதாக அணுக முடியும். அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தின் மூலம் பழக்கமான பிரசன்னாவை 8 வருடங்களாக காதலித்து மணம் முடித்தார் ஸ்னேகா. இவர்கள் திருமணம் ஊடகங்களில் வெளியாகி பல வரவேற்பை பெற்றது.                 

ஒரு சிறந்த காதலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. பிரேக்கப் பற்றி மனம் திறக்கும் ஸ்ருதி ஹாசன் !                                                  

ADVERTISEMENT

Youtube

ஏற்கனவே விஹான் எனும் மகனுக்குத் தாயாகி இருக்கும் ஸ்னேகா இப்போது மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார். ஐந்து மாதங்களில் வளைகாப்பு விசேஷமும் நடந்தேறிய நிலையில் சினேகாவின் (sneha) முதல் பிரசவ நேரங்கள் பற்றி மனம் திறந்திருக்கிறார் நடிகர் பிரசன்னா.                             

தான் சினேகாவின் எளிமையான பண்பு பெரியவர்களை மதிக்கும் தன்மை இதனைப் பார்த்தே சினேகா மீது காதல்வயப்பட்டதாக கூறியிருக்கும் பிரசன்னா (prasanna) முதல் மகன் விஹான் வந்த பிறகு அந்த காதல் இன்னும் அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார்.                           

ADVERTISEMENT

Youtube

விஹான் இவர்கள் இருவரையும் ஒன்றாக அமரவே விட மாட்டானாம். இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்து கொள்வானாம். ஆனாலும் காதல் அதிகரித்திருப்பதாக கூறும் பிரசன்ன முதல் பிரசவ நேரங்களில் சினேகா பட்ட சிரமங்களை நினைவு கூர்கிறார்.

சினேகாவிற்கு முதல் பிரசவத்தில் (first labour pain) பிள்ளை வலி ஏற்படவில்லை என்பதால் மருத்துவர் ஒரு பெரிய ஊசியை எடுத்துக் கொண்டு வந்தது இன்னும் தனக்கு நினைவிருக்கிறது என்றும் அதுவரைக்கும் சினேகாவின் கை பிடித்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த பிரசன்னா அந்த ஊசியைப் பார்த்ததுமே தலை சுற்றி போய் ஓரமாக உட்கார்ந்து விட்டதையும் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

Youtube

அதன் பிறகு சிசேரியன் முறையிலேயே சிநேகாவிற்கு பிரசவம் நடந்து விஹான் பிறந்திருக்கிறார். சாதாரண தலைவலியைக் கூடத் தன்னால் தாங்கிக்க கொள்ள முடியாத நிலையில் சினேகாவின் பிரசவ வலிகள் தன்னை மிகவும் ஆச்சர்யம் அடைய செய்தது என்றும் வலிகளைத் தாங்கி குழந்தைகளை பெற்றெடுக்கும் ஒவ்வொரு அம்மாவும் ஒரு தெய்வம்தான் என்றும் மன நெகிழ்வுடன் மனம் திறந்து கூறியிருக்கிறார் பிரசன்னா.

சரண்யா பொன்வண்ணனின் மகள்கள் இவ்வளவு அழகா ! வெளியாகாத புகைப்படங்கள் !

அந்த நாள் யாருக்கும் வரக்கூடாது, அவ்வளவு அழுகை..அவ்வளவு தவிப்பு-விவாகரத்து பற்றி சீதா…

ADVERTISEMENT

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
09 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT