அந்த நாள் யாருக்கும் வரக்கூடாது, அவ்வளவு அழுகை..அவ்வளவு தவிப்பு-விவாகரத்து பற்றி சீதா...

அந்த நாள் யாருக்கும் வரக்கூடாது, அவ்வளவு அழுகை..அவ்வளவு தவிப்பு-விவாகரத்து பற்றி சீதா...

நடிகை சீதா (seetha) எண்பதுகளின் கனவு நாயகிகளில் இவர் முக்கியமானவர். நடிகை ரேவதிக்கு திரையுலகம் எப்படியான இடத்தை கொடுத்து பத்திரமாக வைத்திருந்ததோ அதே போன்றதொரு இடத்தில் தான் நடிகை சீதாவையும் வைத்திருந்தது.

புதிய பாதை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பார்த்திபன். அந்த திரைப்படத்தின் முடிவில் நடிகை சீதா இயக்குனர் பார்த்திபனை காதல் மணம் புரிந்தார். திருமணத்திற்கு பின்னர் பார்த்திபனுக்கு விருப்பம் இல்லாததால் சீதா தனது நடிப்பை நிறுத்தி குடும்பத்தை கவனித்தார்.

சமீபத்தில் முன்னணி இதழுக்கு பேட்டி கொடுத்திருந்த நடிகை சீதா தன்னுடைய நடிப்பு பயணம் மற்றும் காதல் கசப்புகளை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

38 வருட தேடலை முதியோர் இல்லத்தில் முடித்து வைத்த காதல் - கண்கள் தளும்பும் ஓர் உண்மைக் கதை

Youtube

முதன்முதலில் நடித்த திரைப்படமான ஆண்பாவம் அனுபவத்தை கூறுகையில் இயக்குனர் பாண்டியராஜனை மிகவும் படுத்தி எடுத்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது எனும் சீதா முதல் ஷாட்டில் கால்களை ஆட்டியபடி படுத்திருக்க வேண்டும் என்றார்கள்.. நானும் காலை ஆட்டியபடியே இருந்தேன். ஷாட் முடிந்து எல்லோரும் போனது கூடத் தெரியாமல் என சிரிக்கிறார்.

முதல் படத்திற்கு சம்பளமாக ஒரு அம்பாஸடர் காரை தயாரிப்பாளர் பரிசளித்ததாக கூறிய சீதா அப்போது மிக சிறிய வயது தெலுங்கு தமிழ் படங்களில் நடித்த போது சரியா நடித்தால் சாக்லேட் ஐஸ்க்ரீம் போன்றவை கிடைத்ததாம். அதற்காகவே டாக்டராகும் கனவை மறந்து நடித்தாராம்.

குரு சிஷ்யன் திரைப்படத்தில் கிளாமர் பாத்திரத்தில் நடித்த போது இயக்குனர் கே பாலச்சந்தர் போன்றோர் அறிவுறுத்தியதால் கிளாமர் ரோலில் நடிப்பதை நிறுத்தி இருக்கிறார் சீதா.

முதலில் அம்மா டயானாவை இழந்தேன்.. இப்போது மனைவிக்கு குறி வைக்கிறார்கள்.. இளவரசர் ஹாரி

Youtube

புதிய பாதை திரைப்படத்திற்காக பார்த்திபன் சீதாவின் அப்பாவிடம் பேச வந்த போது அறிமுக இயக்குனர் என்பதால் அந்தப் படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று அப்பாவிடம் தெரிவித்திருக்கிறார் சீதா. ஆனால் கதை நன்றாக இருக்கிறது என்பதால் சீதாவின் அப்பாதான் இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தாராம்.

படப்பிடிப்பின் பாதியிலேயே நடிகை சீதாவிற்கு இயக்குனர் பார்த்திபனுக்கு காதல் வந்து விட சீதாவின் அப்பா கண்டித்திருக்கிறார். உன்னைக் காதல் பண்ணவா நடிக்க அனுப்பினேன் என்று அப்பா கேட்க நான்தான் அப்பவே நடிக்கமாட்டேனு சொன்னேன் கேட்டீங்களா என்று சீதா பதிலுக்கு அப்பாவிடம் பேசியிருக்கிறார்.

பார்த்திபன் நினைவில் இருந்து சீதா மனம் மாற சீதாவை பல திரைப்படங்களில் நடிக்க வைக்க சீதாவின் தந்தை முயற்சித்திருக்கிறார். ஆனால் .. அதனை அப்போது புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத சீதாவிற்கு அப்பாவின் மீது வெறுப்பு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறி பார்த்திபனை திருமணம் செய்திருக்கிறார்.

Youtube

நான் முழுமையாக நம்பி பெற்றோரை எதிர்த்துக் கொண்டு நான் செய்த திருமணம் எனக்குத் தீராத கசப்புகளை கொடுத்த போது திகைத்துப் போனேன் என்கிறார் நடிகை சீதா. திருமண விஷயத்தில் நான் எடுத்த முடிவு தவறானது என்று உணர்ந்த சீதா விவாகரத்து பெற்றார்.

அதுவரைக்கும் பெற்றோர் வீட்டிற்கே செல்லாமல் வைராக்கியமாக இருந்தார் நடிகை சீதா. திருமண பந்தத்தில் இருந்து இருவரும் விலகி விவாகரத்து பெற்றார். அந்த நாளை மறக்கவே முடியாது .. அது மாதிரி ஒரு நாளை யாரும் எதிர்பார்க்கவே கூடாது. அவ்வளவு அழுகை .. அவ்வளவு தவிப்பு.. அதன் பின்புதான் என் பெற்றோர் வீட்டிற்கே சென்றேன் என்கிறார் நடிகை சீதா.

அதன் பின்னரே தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்கி இருக்கிறார் நடிகை சீதா. தன்னிடம் வருமானம் எதுவும் இல்லாத நிலையில் சினிமா தவிர வேறு தொழில் தெரியாததால் திரும்பவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Youtube

வேலன் சீரியலில் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் நன்றாகவே வளர்ந்தது. திரைப்படங்களில் குணச்சித்திர நாயகியாக 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதற்கிடையே சிங்கிள் பேரண்ட் எனும் பாரம் வேறு. ஒரு மகள் அபிநயாவை நல்லபடியாக வளர்த்து திருமணம் செய்து கொடுத்த சீதாவிற்கு மற்ற இரு குழந்தைகளை வளர்க்க முடியாதது தன்னுடைய வாழ்நாள் துயரம் என்கிறார்.

இனி என்ன ஆனாலும் நடிப்பை கைவிடுவதில்லை என்பதை முடிவு செய்திருக்கும் சீதா மன அமைதிக்காக மாடி தோட்டம் ஓவியம் என நேரம் செலவழிக்கிறார். என் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் நான் யாரிடமும் போய் கையேந்தி நின்றதே இல்லை ஆனாலும் வதந்திகள் என்கிற பெயரில் என் வாழ்வை மேலும் வருத்தமாக்குகிறார்கள் எனும் சீதா.. உறுதி செய்யப்படாத வதந்திகளை பரப்பாமல் இருப்பதே மனித நேயம் என்கிறார்.

முடிந்த திருமண பந்தத்தில் இனி இணைவது என்கிற எண்ணமே எனக்கு இல்லை. இவ்வளவு நாள் வாழ்ந்தது போலவே இனியும் தனியாகவே நான் வாழ விரும்புகிறேன். இரண்டு மகள்களின் கல்யாணம் முடிந்தது. மகன் ராக்கிக்கும் நல்ல முறையில் திருமணம் நடந்தால் நிம்மதி அடைவேன் என்கிறார் நடிகை சீதா.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்