ஒரு சிறந்த காதலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. பிரேக்கப் பற்றி மனம் திறக்கும் ஸ்ருதி ஹாசன் !

ஒரு சிறந்த காதலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. பிரேக்கப் பற்றி மனம் திறக்கும் ஸ்ருதி ஹாசன் !

ஸ்ருதி ஹாசன் வாரிசு நடிகை என்றாலும் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடி வரும் ஒரு இளம் நடிகை. நடிகர் கமல்ஹாசனின் வாரிசான இவர் ஏ ஆர் முருகதாஸ் திரைப்படமான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

நடிப்பு மற்றும் அல்லாமல் இசையமைப்ப்பாளர் , பாடகர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் எனப் பல்வேறு திறமைகளை ஒருங்கே கொண்டவர் ஸ்ருதி ஹாசன் (sruthi haasan) . தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சஸ்ருதி ஹாசன் திடீரென தன்னுடைய நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார்.

சங்கமித்ரா உள்பட பல படங்களில் இருந்து விலகிய ஸ்ருதி ஹாசனின் இந்த முடிவிற்கு பின்னால் ஒரு காதல் பிரிவின் காயம் இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் கார்செல் (michel karsel) என்பவரை ஸ்ருதி ஹாசன் (sruthi haasan) காதலித்தார். இவரும் ஒரு நடிகர் என்பதே காதலுக்கான மையப்புள்ளியாக இருந்திருக்கலாம்.

சரண்யா பொன்வண்ணனின் மகள்கள் இவ்வளவு அழகா ! வெளியாகாத புகைப்படங்கள் !

Youtube

இருவரும் இணைந்தே எங்கு சென்றாலும் காணப்பட்டார்கள். பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்றனர். மைக்கேல் கார்செல் கமல்ஹாசனை சந்தித்தது கூட பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என இவர்களின் ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இவர்களின் பிரேக்கப் நிகழ்ந்தது.

மைக்கேல் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய காதல் பிரிவைப் பற்றி பதிவிட ஸ்ருதி ஹாசன் அவர்கள் இருவரும் இணைந்திருந்த படங்களை நீக்கினார். என்னாயிற்று இவர்களுக்கு என்கிற குழப்பம் ரசிகர்கள் இடையே இருந்தது.

ஸ்ருதி ஹாசன் இதனைப் பற்றி தன்னுடைய வலைதள பக்கத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருப்பதாக பதிவிட்டார். மைக்கேல் கார்செல் நாங்கள் இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்கப் போகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த நாள் யாருக்கும் வரக்கூடாது, அவ்வளவு அழுகை..அவ்வளவு தவிப்பு-விவாகரத்து பற்றி சீதா...

Youtube

எந்தவித சங்கடங்களும் இல்லாமல் இருவரும் ஜென்டிலாக பிரிந்த நிலையில் அதற்கான காரணத்தை இப்போது ஊடகத்திற்கு தெரிவித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். ஒரு தெலுங்கு டிவி சேனலுக்கு பேட்டி அளித்த ஸ்ருதி தான் மிகவும் கூல் ஆனவர் என்றும் அதே சமயம் எமோஷனல் ஆனவரும் கூட என்று கூறியிருக்கிறார். காதல் ஒரு நல்ல அனுபவம் என்று கூறும் ஸ்ருதி இது ஒன்றும் சினிமா காதல் இல்லை என்பதை உறுதியாகக் கூறுகிறார்.

தன்னுடைய காதலை கற்றல் அனுபவமாகவே குறிப்பிடும் ஸ்ருதி ஹாசன் காதலைப் பற்றி தன்னிடம் எந்த பார்முலாவும் இல்லை என்கிறார். நல்லவர்கள் நன்றாகத்தான் நடந்து கொள்கிறார்கள் சில சமயம் தவறும் செய்கின்றனர். இதற்காக நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

பிக்பாஸ் டைட்டிலை விட இதுதான் எனக்கு சந்தோஷம்.. முகென் ராவ்..

 

 

Youtube

அது என்னிடம் வரும்போது இதற்காகத்தான் காத்திருந்தேன் என உலகிற்கு அறிவிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தன்னுடைய ப்ரேக்கப்பை ஸ்ருதி என்ன மாதிரி கையாள்கிறார் என்பது பற்றி மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

உண்மைதான். காதல், ஏமாற்றம் , சோகம் அதன் பின் நீ என் வாழ்வை நாசமாக்கி விட்டாய் என்கிற சாபம், காதல் திருமணத்தில் முடிந்திருந்தால் காவல்துறை மூலம் நீதி கேட்கும் வேதனை என ஒரு காதல் நம் வாழ்வில் பல கண்ணீர் கணங்களை பரிசளிக்கவே செய்கிறது. அதனை இனிமேல் நாம் இப்படியும் கடக்கலாம். ஒரு அனுபவம் மட்டுமே காதல் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு அடுத்த அத்தியாயத்தை எழுத ஆரம்பிப்பது உடைந்து போயிருக்கும் இதயத்திற்கான இதம் தரும் சிகிச்சை.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!