logo
ADVERTISEMENT
home / Celebrity Life
4 வருட காதல்… திடீர் என திருமணம் செய்து கொண்ட  ‘பகல் நிலவு’ அன்வர் – சமீரா ஜோடி!

4 வருட காதல்… திடீர் என திருமணம் செய்து கொண்ட ‘பகல் நிலவு’ அன்வர் – சமீரா ஜோடி!

டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் நட்சத்திரங்கள் பலர் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சி பிரபலங்கள் பலருக்கு இந்த வருடம் அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது.

ராஜா ராணி சீரியலில் நடித்த ஆல்யா மானஷா – சஞ்சீவ் ஜோடி காதலித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த மைனா நந்தினியும், நாயகி, ராஜா ராணி, சத்யா உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வரும் யோகேஸ்வரனும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். 

instagram

ADVERTISEMENT

இவர்களது திருமணம் விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து பகல் நிலவு சீரியலில் ஜோடி அன்வர் – சமீரா திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். ரியல் காதலர்களான அன்வர், சமீரா இருவரும் இணைந்து நடித்த ‘பகல் நிலவு’ சீரியல் ஹிட்டான நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘பகல் நிலவு’ சீரியலில் இருந்து இருவரும் விலகினர். 

பின்னர் சமீரா ஜீ தமிழ் சேனலில் `றெக்க கட்டிப் பறக்குது மனசு’ தொடரைத் தயாரித்து அதில் ஹீரோயினாகவும் நடிக்கத் தொடங்கினார். `பொன்மகள் வந்தாள்’ தொடர் மூலம் அன்வர் மறுபடியும் தயாரிப்பு பக்கம் வந்தார். 

`றெக்க கட்டிப் பறக்குது மனசு’ தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்து.  அப்போது முதல் இவர்களின் திருமணப் பேச்சு அடிபட்டு வந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இருவரும் தங்களது காதல் குறித்து வெளிப்படையாகவே அறிவித்தனர்.

 

ADVERTISEMENT

மேலும் திருமணம் விரைவில் நடைபெறும் என கூறி இருந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது வெளியில் சுற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைத்துள்ளனர். 

அன்வர் – சமீரா ஜோடிக்கு ஹைதராபாத்தில் இஸ்லாமிய முறைப்படி இருவீட்டாரின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆடம்பரம் இல்லாத எளிமையாக நடந்த இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். 

சமூக வலைதளங்களில் ‘அன்வீரா’ என பிரபலமான இந்த ஜோடியின் திருமண புகைப்படங்களை அவர்களது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். புதுமண தம்பதி அன்வர் – சமீரா ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே திடீர் திருமணம் குறித்து பேசிய அன்வர், நானும், சமீராவும் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகிறோம். காதலர்களாகவே இருக்கிற லைஃப் ஜாலியாத்தான் இருந்தது. 

ADVERTISEMENT

instagram

ஆனால் எல்லாத்துக்குமே ஒரு காலம் இருக்கு. இப்ப கணவன் மனைவியாக வேண்டிய காலம் வந்திடுச்சு. அதனால திருமணம் செய்து கொண்டோம். திருமணம்கிற பேர்ல பணத்தை அவசியமில்லாம செலவு செய்றதை நானும் சமீராவும் விரும்பலை. 

ஆடம்பர திருமத்திற்கு ஆகும் செலவை நாலு பேருக்கு நம்மால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளை செய்யலாம்னு இருவரும் முடிவெடுத்தோம். அதன்படி சமீரா வீட்டுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என கூறியுள்ளார். 

ADVERTISEMENT

மேலும் நவம்பர் 15 சமீராவின் பிறந்தநாள். காதலர்களா இருந்த காலத்தில் சமீராவுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஏதாவதொரு வெளிநாட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன். ஆனால் இந்தப் பிறந்தநாளுக்கு எங்களோட திருமணம்தான் அவருடைய பரிசு என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

ADVERTISEMENT
12 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT