logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
விக்னேஷ் ஷிவனை பிரிகிறாரா நயன்தாரா? விருதுவிழாவில் உறவு முறிந்தது பற்றி மறைமுக விளக்கம்?

விக்னேஷ் ஷிவனை பிரிகிறாரா நயன்தாரா? விருதுவிழாவில் உறவு முறிந்தது பற்றி மறைமுக விளக்கம்?

சனிக்கிழமை அன்று பத்திரிக்கை உலகம் பரபரப்பாக இருந்தது. காரணம் தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் (zee awards) வழங்கும் சினிமா விருதுகள். இதனால் திரையுலகம் அங்கே திரண்டிருந்தது. 2019ன் சிறந்த படங்களாக விஸ்வாசம், சூப்பர் டீலக்ஸ், பேரன்பு ஒத்த செருப்பு போன்ற திரைப்படங்கள் பல பிரிவுகளின் கீழ் தேர்ந்தேடுக்கப்பட்டிருந்தன.

அதில் தமிழக ரசிகர்களின் அன்புக்குரிய நடிகை நயன்தாரா (nayanthara) இரண்டு விருதுகளை பெற்றார். முதல் விருது பிடித்த நடிகை என்கிற பிரிவின் கீழ் விஸ்வாசம் படத்திற்காக வழங்கப்பட்டது. இரண்டாவது விருது பெருமைக்குரிய நடிகை ஸ்ரீதேவி பெயரில் இந்திய சினிமாவில் கவனம் ஈர்க்கும் பெண் என்கிற விருது கொடுக்கப்பட்டது. அது நயன்தாராவிற்கு முதல்முறையாக வழங்கப்பட்டது.

இந்த விருதை கொடுத்து நயன்தாராவை கௌரவப்படுத்திய தயாரிப்பாளர் போனி கபூர் (bony kapoor) நயன்தாரா அதற்கு பொருத்தமானவர் என்று புகழ்ந்தார். இத்தனை சந்தோஷமான தருணத்தில் எப்போதுமே நயன்தாரா அருகிலேயே இருக்கும் விக்னேஷ் ஷிவன் ஆப்சென்ட் ஆகி இருந்தது அனைவருக்குமே உறுத்தலாக இருந்தது.

அப்படியே தாத்தா ரஜினி போலிருக்கும் யாத்ரா.. லைலா பசங்க இவ்ளோ க்யூட்டா.. பங்கமான லாஸ்லியா !

ADVERTISEMENT

 

Youtube

அதை போலவே நயன்தாரா இறுதியாக வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் அவர் தனியாக இருப்பது போன்றுதான் இருந்தது. இதுவரை விக்னேஷ் ஷிவன் (vignesh shivan) உடன் செல்பி மோடில் நயனை பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு நயன்தாரா மட்டும் தனியாக இருந்தது வித்யாசமாக இருந்தது.

ADVERTISEMENT

ஆனால் இந்த தனிமைக்கு பின்னால் காதல் முறிவு என்கிற காரணம் இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. கடந்த வருட இறுதியில் திருமணம்.. தர்பார் திரைப்படத்திற்கு பின்னர் திருமணம் என்றெல்லாம் விக்னேஷ் ஷிவன் நயன்தாரா திருமணம் பற்றி பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன் இருவருமே பல கோயில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் குறைவின்றி நடந்தது.

வழக்கம்போல விக்னேஷ் ஷிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைத்து புகைப்படங்களையும் பகிர்ந்து மகிழ்ந்தார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட வெளிநாடு சென்ற விக்னேஷ் ஷிவன் நயன்தாரா இடையே திருமணம் தொடர்பான வாக்குவாதங்கள் நிகழ்ந்ததாக சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

உனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி

திருமணம் பற்றி விக்னேஷ் ஷிவன் கட்டாயப்படுத்தியதாகவும் ஆனால் நம்பர் ஒன் நடிகை அந்தஸ்தை இழக்க விரும்பாத நயன்தாரா திருமணமே வேண்டாம் என நயன்தாரா கூறியிருக்கிறார். கூடவே என்னுடன் சுற்றி கொண்டு இருப்பதால் உன்னுடைய திறமைகளை வரும் வாய்ப்புக்களை நீ இழந்து விட வேண்டாம் என விக்னேஷ் ஷிவனுக்கு அறிவுரையும் கூறி இருக்கிறார்.

ADVERTISEMENT

இதனால் விக்னேஷ் ஷிவன் மனவருத்தத்தில் அங்கிருந்து தனியாக கிளம்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்ன உண்மை என்பது இன்னமும் விளங்காத நிலையில் விருது வழங்கும் விழாவில் நயன்தாராவின் பேச்சு இதனை மேலும் மர்மமாக மாற்றியிருக்கிறது.

கவனிக்க கூட யாருமற்ற நிலையில் நடிகை ஷர்மிளா.. அரசு மருத்துவமனையில் அனுமதிப்பு

Youtube

ADVERTISEMENT

நயன்தாரா விருது வாங்கியபின் பேசியதாவது..

ரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீபகாலமாக ஜோடியாக சந்தோ‌ஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோ‌ஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோ‌ஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.

உங்கள் பெற்றோர், வாழ்க்கைத் துணை, துணையாகப் போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவரது கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக வாழ்பவராக இருக்கலாம்.

புதுவருட சபதம் எதுவும் எடுக்கவில்லை. ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின் அன்பு போதும்.

ADVERTISEMENT

நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி.

சமூகவலைதளங்களில் நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களைக் காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும்?

எனக்குக் கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். அன்பாக இருங்கள் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.

மேலும் தான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை என்று கூறிய நயன் தாரா, சமூகவலைத்தளங்கில் அதிகம் நெகட்டிவிட்டி பரவி வருவதாகவும் கூறினார்.

ADVERTISEMENT

Youtube

இடையில் விக்னேஷ் ஷிவன் எங்கே என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட போது அதற்கான பதிலை அவர் சொல்லவில்லை. இந்த பேச்சுடன் கிளம்பி விட்டாராம்.

நயன்தாராவுடைய இந்த பேச்சு விக்னேஷ் ஷிவன் மீதான உறவு முறிந்தது பற்றி குறிக்கிறதா எனவும் ரசிகர்கள் கவலையடைந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த விழாவில் நயன்தாரா தனியாக வந்திருந்தாலும் ஹனி ப்ரவுன் நிற பட்டு புடவையில் பாந்தமாக வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. எப்போதும் நயனை விட்டு விலகாத விக்னேஷ் ஷிவன் முக்கியமான விருது பெறும் சமயம் ஏன் உடன் இருக்கவில்லை என பல உதடுகள் முணுமுணுத்து கொண்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட அவர்கள்தான் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

05 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT