பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், என்ன செய்தால் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், பெண்களை கவருவதற்கு என்னென்ன காரியங்கள் செய்யவேண்டும், எப்படி உடையணிய வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன உணவு பெண்களுக்கு பிடிக்கும் என தேடி தேடி ஆராய்ச்சி செய்த ஆண்கள் எல்லாம் தோற்றுவிட்டதாக அநேக கதைகள் படித்திருக்கின்றேன். ஆம் பெண்களாகிய நம் மனதை ஆண்கள் அவ்வளவு எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது. சரி பிறகு எப்படித்தான் தெரிந்து புரிந்து கொண்ட பெண்களுக்கு ஏற்ற ஆணாக இருப்பது என்பது தானே உங்கள் கேள்வி அதற்கான பதிலை கட்டாயம் தருகிறோம்.
திருமண(Marriage) உறவில் பெண்கள் ஆண்களிடம் அப்படி எதை தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்பதை பார்ப்போம் ( What Women Want From Their Husband After Marriage)
1. உண்மையான காதல் மற்றும் அன்பு
2. அன்பான மரியாதையான வார்த்தைகள்
3. வீட்டு வேலைகளி்ல் உதவி செய்தல்
4. வெளியிடங்களில் மரியாதையுடன் நடத்துதல்
5. ரொமான்டிக் பாய்ஸ்
6. காதல் வசனம்
1. உண்மையான காதல் (True Love)
அதிகமான பெண்கள் ஆண்களிடம் மிகமுக்கியமாக எதிர்பார்ப்பது உண்மையான காதலை மட்டும் தான். காதலில் மிக முக்கியம் உண்மை தான். பொய் சொல்வது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. அப்படி நீங்கள் மீறி சொன்னாலும் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். மேலும் திருமணம் ஆன பிறகு நீங்கள் மற்றொரு பெண் சைட் அடிப்பது, மற்ற பெண்களை பற்றி புகழ்ந்து பேசுவது சுத்தமாக பிடிக்காது. மற்ற பெண்களிடம் போனில் அதிக நேரம் பேசுவதை தவிர்த்து விடுங்கள். இல்லையெனில் வீடு இரண்டாகிவிடும். அப்புறம் தினம் தினம் சண்டைதான் நடக்கும்.
உங்கள் திருமண உறவை மகிழ்ச்சியானது மாற்றியமைக்க சில வழிகள்
2. அன்பான மரியாதையான வார்த்தைகள் (Loving Darling Words)
திருமணமான பெண்கள் தன் கணவர் தன்னை அன்பாகவும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று விரும்புவார்கள். உங்கள் மனைவி வீட்டாரை ஒருநாளும் குறைத்த கீழ் தரமாகவோ திட்டியோ பேசாதீர்கள். இது பெண்களுக்கு மிகுந்த கோபத்தையும் உங்கள் மேல் இருக்கும் அன்பையும் நீக்கிவிடும். சிறு சிறு சண்டைகளில் கூட மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள். அன்பை பொழியும் வார்த்தைகளை சும்மா அள்ளிவிடுங்கள். கண்ணே, அன்பே, நீ தான் என் உலகம் என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி உங்கள் அன்பை வெளி்ப்படுத்துங்கள்.
3. வீட்டு வேலைகளி்ல் உதவி செய்தல் (Help In Household)
இருவரும் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால் வீட்டு வேலைகள் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். மாறாக எந்த வேலையும் செய்யாமல் அது சரியில்லை, இது சரியில்லை என்று குறைமட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. காலையில் கிட்சனில் இருக்கும் சிறு சிறு வேலைகளில் உதவியாக இருப்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எப்படி உங்கள் கணவருடனான காதலை அதிகப்படுத்துவது?
4. வெளியிடங்களில் மரியாதையுடன் நடத்துதல் (Respect)
திருமணம் ஆன புதிதில் வெளியிடங்களுக்கு அதிகம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அப்படி மால், பீச், ஷாப்பிங் போன்ற இடங்களுக்கு செல்லும் போது மனைவியை மாரியாதையுடன் நடத்துங்கள். மற்றவர்கள் முன்பு நீங்கள் மரியாதை குறைவான சொற்களை பயன்படுத்தினால் பெண்களுக்கு அவமானமாக நினைப்பார்கள். மேலும் கணவராகிய உங்கள் மேல் இருக்கும் மரியாதையும் குறைந்துவிடும்.
5. ரொமான்டிக் பாய்ஸ் (Romantic Boys)
கல்யாணம் ஆன புதிதில் எல்லா ஆண்களும் ரொமாண்டிக்கை சும்மா அள்ளி தெளிப்பார்கள். ஆனால் அதுவே நாட்கள் செல்ல செல்ல கொஞ்ச கொஞ்சமாக ரொமான்டிக் குறைந்துவிடும். நாட்கள் சென்றால் என்ன நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் அன்பால் மனைவியை நெகிழவிடுங்கள். வெளியில் புது இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். நீங்கள் ஒரு காதல் மன்னன் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்திக்கெண்டே இருங்கள்.
6. காதல் வசனம் (Words Of Love)
காதல் வசனம் பேசுவது ஒன்றும் ஆண்களுக்கு புதிதல்ல. சரளமாக வரும் என்றாலும் அலுவலக வேலை காரணமாக வீட்டில் இருக்கும் மனைவி மறந்துவிடாதீர்கள்.
பெண்கள் ஒன்றும் நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் டேபிள், ஷோபா, டீவி போன்ற பொருட்கள் இல்லை. உங்களது தேவையை மட்டுமே பூர்த்தி செய்வது அவர்கள் கடமை கிடையாது. அவ்வப்போது காதல் வசனம் பேசி பெண்கள் இருதயத்தில் தொடர்ந்து இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்க தான் ஹீரோ என உங்களையே சுத்தி சுத்தி வருவார்கள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.