இன்று வெளியாகி நல்ல விமர்சனம் பெற்றுக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் LUCIFER. இந்த திரைப்படம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் ப்ரித்விராஜிற்கு ஒரு நல்ல திருப்பு முனையைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரைத்துறையில் இரண்டு விதமான ஆட்கள் இருக்கிறார்கள். ஒன்று சம்பாதித்து செட்டில் ஆகும் ஆட்கள் இரண்டாவது சம்பாதித்ததை மீண்டும் திரையிலேயே பரிசோதனை செய்யும் ஆட்கள். இதில் நடிகர் ப்ரித்விராஜ் இரண்டாவது ரகம்.
நடிகராக ஆரம்பித்து தயாரிப்பாளர் ஆன இவர் இப்போது இயக்குனராகவும் ஆகியிருக்கிறார். மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள LUCIFER ல் நம் லாலேட்டா மோகன்லால் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தினம் ஒரு கதாபாத்திரத்தை புகைப்படத்தோடு அறிமுகம் செய்து ட்விட்டரில் இந்தப் படம் குறித்து தனி கவனத்தை ஈர்த்திருக்கிறார் பிரித்விராஜ்.
இறுதியாக மோகன்லாலின் மூலமாக தானும் அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியிட்டார். ப்ரித்விராஜிற்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படம் பற்றி சில தகவல்கள்.
இது அரசியல் சார்ந்த திரைப்படம் இதில் மோகன்லால் நாயகனாகவும் மற்றும் இவரோடு மஞ்சு வாரியார் , விவேக் ஓபராய், டோவினோ தாமஸ் போன்றோர் நடித்துள்ளனர்.
நம் சாதாரணக் கண்கள் தவற விடும் சில செயல்களை எடுத்து காட்டும் கதையாக இது இருக்கிறது. ஒரு விஷயத்தை சாதாரணக் கண்களால் பார்க்கும் நாம் அதனை ஆழமாக பார்ப்பது இல்லை. அரசியல் கதைக்கு இதை விட ஒரு நல்ல கதைக்கரு கிடைக்கவே கிடைக்காது.
ஒரு நாட்டின் ஆளும் கட்சி தலைவர் இறந்து போகிறார். அவரது இடம் வெறுமையாகிறது.அவரது கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே வெறுமை ஆகிறது. கட்சியின் வெற்றிக்கும் அதன் பின் ஏற்படும் சண்டைகளும் தான் கதை. எங்கோ அனுபவித்த மாதிரி இருக்கும் இந்தக் கதை இப்போது மலையாளத்தில் வெற்றி நடை போடுகிறது.
டு லெட் திரைப்படம் – தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி
ஸ்டீபன் நெடும்புள்ளியாக மோகன்லால் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றி அவரே கூறுகையில் நான் சினிமாவிற்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. 350 திரைப்படங்கள் நடித்துவிட்டேன். நான் சினிமாவை புரிந்து கொள்ள ஆரம்பிக்கையில் சினிமாவை நேசிப்பவர்களையும் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். நான் ப்ரித்வியுடன் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவரை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். ப்ரித்வியின் சினிமா ரசனைகள் எனக்கு பிடிக்கும் என்று அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த திரைப்படம் பற்றி சமீபத்தில் பேஸ்புக் லைவில் இயக்குனர் பிரித்விராஜ் கூறுகையில் LUCIFER ன் தாத்பர்யம் என்னவென்றால் இது நேரடியாகக் கதை சொல்லாது. சில வளைவுகள் மற்றும் திருப்பங்களோடு இந்தக் கதை பயணிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் ப்ரித்வி!
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.