பிக் பாஸ் போட்டியாளரான லாஸ்லியா (losliya) எனும் இலங்கை தமிழ்ப்பெண் இப்போது அனைவரையும் ஒட்டுமொத்தமாக கவர்ந்து வருகிறார். தனக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் குடும்பத்தோடு ஒன்றுவதில் முதலாவதாக இருக்கிறார்.
இது நாள் வரைக்கும் லாஸ்லியா (losliya) ஒரு விளையாட்டு பெண் அல்லது சிறு பெண் என்கிற நினைப்பில் இருந்த பார்வையாளர்களுக்கு இரு தினங்களாக லாஸ்லியா மற்றவருக்கு அறிவுரை வழங்குவதன் மூலம் அவர் ஒரு பக்குவப்பட்ட பெண்ணும் கூட என புரியத் தொடங்குகிறது.
இப்படி அனைவர் மனதையும் தனது இயல்பான உணர்வுகளால் கவர்ந்த லாஸ்லியாவை பார்க்கும்போது காதல் கொண்டேன் திவ்யாவின் (divya) சாயலை உணர முடிகிறது. முதல் முறை பார்த்த போதே கவர்ந்த முகமாக இருந்தாலும் அவரது செயல்கள் காதல் கொண்டேன் திரைப்படத்தில் திவ்யாவாக வரும் சோனியா அகர்வாலை ஒத்த வண்ணம் இருக்கின்றன.
90ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் என அத்தனை கிட்ஸ்சையும் பாரபட்சமின்றி கவர்ந்த ஒரு சினிமா கதாபாத்திரம் யார் என்றால் அது காதல் கொண்டேன் திவ்யா கதாபாத்திரமாகத்தான் இருக்க முடியும்.
80ஸ் கிட்ஸ்க்கும் ஒரு திவ்யாவை பிடிக்கும். அது மௌனராகம் திவ்யா,. அது தனிக்கதை அதனை இதனோடு கலக்க வேண்டாம் என்பதால் இப்போதைக்கு விட்டு விடலாம்.
ஆனால் காதல் கொண்டேன் திவ்யாவின் மாண்டேஜ்களுடன் ஒத்து போனாலும் உண்மையில் இந்தக் கட்டுரைக்கான தலைப்பாக லாஸ்லியா vs சோனியா என்றுதான் கொடுத்திருக்க வேண்டும். காரணம் அப்பா மீதான பிரியம் லாஸ்லியாவிற்கு அதிகம் இருக்கிறது. குடும்பத்தின் மீதான பற்றும் அதிகம் இருக்கிறது. அப்படி பார்த்தல் சோனியா அகர்வாலின் அடுத்த படமான 7G ரெயின்போ காலனி அனிதாவையும் நினைவூட்டுகிறது அவரது செயல்கள். குடும்பத்தை நேசிக்கும் 7ஜி அனிதாவின் கதாபாத்திரத்தை அத்தனை எளிதில் மறந்து விட முடியாது.
இது வெறும் சந்தோஷமான ஒரு ஒப்பீடு மட்டுமே. லாஸ்லியா எனும் பெண்ணின் தனித்தன்மை நிச்சயம் வேறு வேறாகத்தான் இருக்கும். ஆனாலும் சாயலில் அவர் திவ்யாவையும் அனிதாவையும் நினைவூட்டுகிறார். மற்றவருக்கு அறிவுரை கொடுக்கும்போதும் தனது முடிவில் தெளிவாக இருக்கிறார்.
மேலே குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் அனிதா அந்த மாதிரி ஒரு தெளிவான பெண். நாம் இங்கே வந்திருப்பது மற்றவர்களை திருப்திப்படுத்த அல்ல என்பதை தன்னைவிட வயதில் மூத்தவரான மதுமிதாவுக்கு அறிவுரையாக கூறுகிறார்.
இது ஒரு கேம் என்பதையும் 16 பேரும் 16 விதமான குணங்களில் இருப்பார்கள் என்பதையும் அதனை அனுசரித்து செல்வது தனது குணம் என்பதையும் அழகாகவே மீரா மிதுனுக்கு எடுத்துரைத்தார் லாஸ்லியா. ஆனால் அதனை புரிந்து கொள்ளும் மனநிலையில் மீரா மிதுன் இல்லை.
அதனால் என்ன .. பார்க்கும் எங்களுக்கு உங்கள் குணம் புரிகிறது. ஓவியாவை போலவே லாஸ்லியாவும் நிச்சயம் அத்தனை பேர் மனதையும் வெல்வார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. சேரன் தனது நாமினேஷனில் லாஸ்லியாவை சொல்லும்போது குழந்தை என்று குறிப்பிட்டார். இந்த வீட்டின் போட்டி வெப்பம் குழந்தைகளை தாக்க வேண்டாம் என்பதால் தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை நாமினேட் செய்தார்.
அது அவரது மனப்பாங்கு வகையில் சரிதான். ஆனாலும் லாஸ்லியா மிக தைரியமான பெண்ணும் கூட என்பதால் நிச்சயம் பிக் பாஸ் வீட்டின் அரசியல்களை கடந்து தனக்கான தனி இடத்தை பிடித்து வெற்றி பெறுவார் என்று வாழ்த்துவதில் மகிழ்கிறோம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.