இன்றைய தலைமுறையினர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஒரு புகைப்படம் பகிரும் பயன்பாட்டு மென்பொருள். இன்று நாம் தொடர்ச்சியாக புகைப்படங்களையும் பதிவுகளையும் அல்லது இன்ஸ்டா கதைகளையும் பதிவேற்றம் செய்கிறோம்.
ஆனால் ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தலைப்புகள் தருவது. இது நிச்சயம் ஒரு பெரிய வித்தாசத்தை உருவாக்கும். மேலும் உங்களுக்கு நிறைய லைக்குகளையும் பின்பற்றுபவர்களையும் உருவாக்கிக் கொடுக்கும். நான் எப்போதும் என்னுடை புகைப்பட பதிவேற்றங்களுக்கு தகுந்த தலைப்பு கொடுப்பதற்காக நிறைய நேரம் செலவிடுவேன். அது என்னுடைய சுயவிவர பக்கத்தையும் மெருகூட்டும். நான் நிச்சயம் நம்புகிறேன், நீங்களும் அதை செய்து பயன் பெற வேண்டுமென்று!
அதற்காகவே நான் அதிக ஆர்வத்தோடு இந்த பட்டியலை உங்களுக்காத தயார் செய்துள்ளேன். விதவிதமான புகைப்படங்களுக்கு விதவிதமான ஆர்வத்தை அதிகப்படுத்தக் கூடிய தலைப்புகள்.
உங்கள் இன்ஸ்டாகிராம்(instagram) தலைப்புகள் எவ்வளவு முக்கியம்?
இன்ஸ்டாகிராம் தலைப்புகள் பிறர் கவனத்தை ஈர்க்கும். உங்கள் புகைப்படங்கள் பிறர் கவனத்தை ஈர்த்தாலும் இத்தகைய தலைப்புகளும் அதற்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ பிறர் கவனத்தை ஈர்க்கக்கூடும். குறிப்பாக நீங்கள் பிறருடைய (எக்ஸ்ப்ளோர் பீட்) போனால் இது தேவைப்படும். இன்ஸ்டாகிராம் தலைப்புகள் உங்கள் விடுமுறை புகைப்படங்கள் முதல் சுய புகைப்படங்கள் (செல்பீஸ்) வரை, அனேக வகைகள் உள்ளது நீங்கள் பிரபலம் ஆவதற்கு. இது மேலும் உங்களை பின்பற்றுபவர்களுக்கு உங்களை பற்றி மேலும் நன்கு தெரிந்து கொள்ள அல்லது உங்களது பதிவேற்றங்களை பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
இது மேலும் உங்கள் புகைப்படங்களுக்கு விருப்பம் தெரிவிக்கவும் அதை பற்றி அவர்களது கருத்துகளை வெளிபடுத்தவும் ஏதுவாக இருக்கும். ஒரு இன்ஸ்ட்டாகிராம் தலைப்பு தனிப்பட்ட திறமையை வெளிபடுத்துவதாக இருக்க வேண்டும். அது உங்களை தொடர்பு கொள்ள உதவுவதோடு உங்களை பின்பற்றுபவர்களுக்கும் எளிதாக உங்களை பற்றி அல்லது உங்கள் பதிவுகளை பற்றி ஞாபகபடுத்தக்கூடும். 1௦௦௦ பேருக்கும் மேல் உங்களை இன்ஸ்டாகிராமில் பின் பற்றுகிறார்கள் என்றால் இத்தகைய தலைப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
சரியான இன்ஸ்டா தலைப்பு பெற நீங்கள் பின்பற்ற வேண்டியவை
முதலில் உங்களது பார்வையாளர்களை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு தனிப்பட்ட சுயவிவர பக்க வைத்துள்ளீர்கள் என்றால், அதில் அனேகமான பின்பற்றுபவர்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் என்றால், நீங்கள் தனிப்பட்ட தலைப்பை, குறிப்பாக உங்கள் வாழ்க்கை அல்லது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தலைப்பு வைக்க வேண்டும். நீங்கள் ஒரு வலைபதிவு பக்கம் வைத்துள்ளீர்கள் என்றால் நீங்கள் கொடுக்கும் தலைப்பு உங்களை பின்பற்றுபவர்களை ஈர்க்கும் வகையில் அல்லது புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் நவ நாகரீக படிவம் (பேஷன்) குறித்த வலைபதிவு போடுபவராக இருந்தால் அதற்கு ஏற்றபடி அந்த பதிவில் குறிப்புகளும் விவரங்களும் இருக்க வேண்டும்.
உங்களுக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ளுங்கள்
ஏனென்றால் ஒவ்வொருவரும் எதையாவது இன்ஸ்டாக்ராமில் விற்க முயற்சி செய்வார்கள். நீங்கள் அதிக விருப்பங்கள், பின்பற்றுபவர்கள் மற்றும் கருத்துகளை பெற விரும்பினால். உங்களை நீங்களே மெருகூட்டிக் கொண்டு ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டு மற்றவர்களை கவர வேண்டும்.
உங்கள் தலைப்புகளை மாற்றுங்கள்
உங்கள் தலைப்புகளை நீளமாக வைக்காதீர்கள், ஏனென்றால் இன்ஸ்டாக்ரம் ஓரிரு வரிகளுக்கு மேல் போவதை துண்டித்து விடும். இதனால் உங்களை பின்பற்றுபவர்கள் ‘அதிகம் படிக்க’ கிளிக் செய்ய வேண்டியதிருக்கும். உங்கள் தலைப்பு நீளமாக இருந்தாலும் அதில் முக்கியமான விவரத்தை கொடுக்க வேண்டும். மேலும் வார்த்தைகள் கண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். இது படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
செயலுக்கு கூப்பிடுங்கள் அல்லது ஒரு கேள்வியை முன் வையுங்கள்
அது உங்களை பின்பற்றுபவர்களை ஈர்க்கும். இது மேலும் அவர்களுக்கு சுவாரசியமாக அமையும். உங்கள் பதிவுகளுக்கு அவர்கள் பதில் கொடுக்கவும் இது தூண்டும் வகையில் இருக்கும். மேலும் உங்களது கேள்விகளை எளிதாகவும் சுலபமாகவும் வைக்க வேண்டும். உதாரணத்திற்கு, இந்த கோடை விடுமுறைக்கு உங்களுக்கு பிடித்த சுற்றுலா தளம் எது? இத்தகைய கேள்விகள் ஒரு சலசலப்பை ஏற்படுத்துவதோடு இந்த பதிவை சுவாரசியமாகவும் மாற்றும்.
உங்கள் புகைப்படம் ஒரு குறிப்பிட்ட சுற்றுலா தளத்தை ஒட்டி இருந்தால், அல்லது உங்களுக்கு முக்கியமான ஒரு நபரை ஒட்டி இருந்தால், நீங்கள் ஒரு கதையை உருவாக்கி அதனை உங்களை பின்பற்றுபவர்களுடன் பகிரலாம். இது உங்கள் உரையாடலை சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் மாற்றக் கூடும். மேலும் உங்கள் பயணத்தில் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத பல அனுபவங்களை அல்லது சம்பவங்களை நீங்கள் பகிரலாம்.
வெவ்வேறு தருணங்களுக்கு ஏற்ற இன்ஸ்டாக்ராம்(instagram) தலைப்புகள்
உங்கள் நண்பர்களோடு ஒரு சாதாரண புகைப்படம் கூட ஒரு தலைப்புடன் இருந்தால் அது உங்களை பின்பற்றுபவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க உதவும். உங்கள் குடும்பத்தினர்களுடன் சென்ற சுற்றுலா புகைப் படம், அலல்து வேறு எதாவது எளிதான ஆனால் சுவாரசியமான புகைப் படம் இருந்தால் நீங்கள் அதனை ஒரு நல்ல தலைப்போடு உங்கள் பார்வையாளர்களுக்குத் தரலாம்.
உங்கள் சுற்றுலா புகைப் படங்களுக்கு ஏற்ற இன்ஸ்டாக்ராம்(instagram) தலைப்புகள்
உங்களுடைய அடுத்த சுற்றுலாவிற்கு நீங்கள் திட்டமிடுவதற்கு முன் இங்கே சில தலைப்புகள் நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ள! அவைகள் உங்களுடைய் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்றதாக இருக்கும்.
1. நான் அனைத்து இடங்களுக்கு செல்லவில்லை, இருந்தாலும் என் பட்டியலில் உள்ளது
2. Wanderlust பயணம் செய்ய ஒரு குறிக்கோளுடன், நிதர்சனத்தில் இருப்பதை புரிந்து கொள்ள.
3. ஒரு நாளைக்கு ஒரு தேடலை தேடி போவது
4. மேலே மேலே உயர போக வேண்டும்
5. இப்படி ஒரு வரவேற்கும் சூரிய அஸ்தமத்தை கண்டதில்லை
6. கடலும் சூரியனும் முத்தமிடுதலை காண கொடுத்ததை வைத்திருக்கிறேன்
7. விண்மீன் நிறைந்த இரவு என் காத்திருப்பிற்கு பலன் கொடுத்தது
8. ஏற்ற இறக்கமான வாழ்க்கை
9. விடுமுறை மனநிலையில் இருக்கிறேன்.. வேலை செய்யும் மனநிலையில் இல்லை
10. “உலகிற்கு சொந்தமானதைக் காட்டிலும் சிறியவற்றை நான் சொந்தமாகக் கருதுகிறேன், அதனாலேயே சிறியவற்றைப் பார்க்கிறேன்.”” – அலெக்சாண்டர் சட்லர்
11. கடிகாரத்தில் நிமிடங்களை எண்ணுவதற்கு பதிலாக, இரவுநட்சத்திரங்களை எண்ணுகிறேன்,
12. வீடு ஒரு இடம் அல்ல அது உணர்வு
உங்கள் நண்பர்களுக்கான இன்ஸ்டாக்ராம்(instagram) தலைப்புகள்
உங்கள் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது, குறிப்பாக சுயபுகைப் படத்தை இன்ஸ்டாக்ராமில் பதிவேரம் செய்வது சற்று வழக்கமான செயலாக இருக்கும். அதனால் உங்களது ஏற்றங்களை சுவாரசியமாக வைத்துக் கொள்ள, நீங்கள் நல்ல தலைப்புகளைத் தரலாம். சில நகைசுவையான, உணர்வூட்டும் மற்றும் எளிதாக படிக்கக் கூடிய தலைப்புகளை தேர்ந்தெடுங்கள்.
1. “வெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட இருட்டில் நண்பனோடு நடப்பேன்” – ஹெலன் கெல்லர்
2. நண்பர்கள் நாம் தேர்ந்தெடுக்கும் குடும்பம்
3. நீ எப்போதும் என்னுடைய வெளிச்சமாய் இருப்பாய்
4. என் சகோதரியை போன்ற மிகச்சிறந்த நண்பன்
5. பீஸ்ஸா மற்றும் BFF மிகச்சிறந்த பொருத்தம்
6. என் நண்பர்களை விட நீ சிறந்தவர்
7. ஒரு புன்னகை போதும் சிலர் உங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக்கி விடுவார்கள்
8. நீங்கள் செய்யும் ஒவ்வொரு சாகசமும் உங்களை செல்வந்தராக்கும்
9. உங்கள் பெண்கள் கூட்டத்திற்குள் என்ன நடக்கின்றதோ அது எங்கள் கூட்டத்திற்கு உள்ளேயேயும் இருக்கிறது.
10. நாங்கள் ஒருவரை ஒருவர் தனியாக தவறு செய்ய அனுமதிப்பதில்லை
எதார்த்த படங்களுக்கான இன்ஸ்டாக்ராம் தலைப்புகள்
உங்கள் பார்வையில் ஒரு அழகான பூ தென்பட்டதா? இல்லை ஒரு இருக்கையை நீங்கள் ரசித்தீர்களா? இல்லை உங்கள் காலணிகளை சற்றே படம் பிடித்து பதிவேற்றம் செய்ய என்னுகுறீர்களா? எதுவாயினும், இங்கே உங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய உங்களுக்காக சில இன்ஸ்டாக்ராம் தலைப்புகள்,
1. நீங்கள் போக விருப்பப்படும் இடங்கள்
2. வாழ்க்கை ஒரு ஏற்றம் இறக்கம் நிறைந்தது, ஆனால் அதன் பார்வை சிறந்தது
3. எப்போதும் கம்பீரமாக, எடுப்பாக, கொஞ்சம் சுவாரசியமாக இருக்க
4. எனக்கு வேண்டிய ஆயிரம் விடயங்களை நான் துரத்துவதில்லை
5. அது நீயாக இருக்க முடியாது, அது நீயா?
6. யாரையும் நீ பலவீனமானவன் என்று கூற அனுமதிக்காதே
7. வார விடுமுறை முடிய போகுதே
8. பைஜாமாவில் பெண்கள் அழகாக உள்ளனர், எனக்கு பிடித்திருக்கிறது!
9. எனக்கு வருடத்தில் இரு முறை ஆறு மாத கால விடுமுறை வேண்டும்
10. நான் இளமையாக இருக்கிறேன்
11. மற்றவர்களை போல இருக்காதே அன்பே
ஜோடிகளின் புகைப்படங்களுக்கான இன்ஸ்டாக்ராம்(instagram) தலைப்புகள்
உங்களுக்கும் உங்கள் அன்பார்ந்தவருக்கும் இன்ஸ்டா அதிகாரப் பூர்வ தகவல் கிடைத்ததா? சரி, உங்களுக்கு ஒரு சரியான தலைப்பு செய்திகளை உங்களை பின்பற்றுபவர்களுக்கு கொடுக்கத் தேவைப்படும்!
1. பீட்சாவை விட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
2. நம் காதல் மது போன்றது, நேரம் ஆகா ஆகா சிறப்பாக மாறும்
3. காதலனை தந்த மன்மதனுக்கு நன்றி
4. கடலில் எத்தனை மீன்கள் இருந்தாலும் நீதான் அழகு
5. காதல் ஒரு சந்தோஷம், விருப்பம், கடவுள்
6. “அது போல், அந்த தருணத்தில் முழு பிரபஞ்சமும் நம்மை ஒன்றாக கொண்டு வர வேண்டும்” – செறேண்டிபிடி – திரைப்படம்
7. உன் கையை பிடித்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்ல நான் தயார்
8. இருவரும் சேர்ந்து அழகான இடத்திற்கு செல்வோம்
9. நீ எங்கு இருக்கின்றாயோ அங்கே நான் இருக்க விரும்புகிறேன்
குடும்பபுகைப் படங்களுக்கு இன்ஸ்டாக்ராம் தலைப்புகள்
உங்களுடன் பிறந்தவர்களுடன் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதில் இருந்து உங்கள் குடும்ப புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வரையில் ஏராளமான நகச்சுவையூட்டும் மற்றும் உணர்வு மிகுந்த இன்ஸ்டாக்ராம் தலைப்புகள் உள்ளன. சரியான தேர்வு செய்யும் போது அவை அதிகம் விரும்பி பிறரால் பார்க்கபபடுகிறது.
1. நான் அதிகம் விரும்பும் இடம் வீடு
2. குடும்பங்கள் ஒரு கலவை: அதில் இன்பம், துன்பம், கோபம் அனைத்தும் உண்டு
3. அழகான குழப்பங்கள் தான் வீடு
4. உங்கள் குடும்பத்திற்கு உங்கள் தவறு தெரியும் இருந்தாலும் உங்களை நேசிப்பார்கள்
5. வீடு செங்கலாலும் கம்பிகளாலும் கட்டப்பட்டது ஆனால் குடும்பம் அன்பாலும் கனவுகளாலும் கட்டப்பட்டது
6. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன விடயங்களையும் நேசியுங்கள். ஒரு நாள் நிச்சயம் அவை பெரிய விடயமாக உங்களுக்கு தோன்றும்
7. எப்போதும் ஒன்றாக, தூரத்தில் இருந்தாலும் பிரியாமல் இருப்பது தான் குடும்பம்
குடும்ப உரிப்பினர்களை யாரும் மறக்க மாட்டார்கள்.
8. நான் அதிகம் எதிர் பார்க்க மாட்டேன். எனக்கு என் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாட இடம் தேவை இல்லை, என் குடும்பம் போதும்
10. என் பிரபஞ்சம் இந்த ஒரு புகைப்படத்தில்!
11. என் குடும்பம் என் பலம் மற்றும் என் பலவீனம்
பல வகை இன்ஸ்டாக்ராம் தலைப்புகள்
நீங்கள் உங்கள் இன்ஸ்டாக்ராம் பக்கத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கும் போது உங்கள் மனதில் எதிர் கால குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தலைப்புகள் சற்று சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகுரீர்களா? சிறிதாகவும் இனிமையாகவும்? அல்லது ஒரு நிரந்தர வடிவமைப்பை வைத்துக் கொண்டு அதில் உங்களுக்கு பிடித்த பாடல் வரிகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய விரும்புகிறீர்களா? இந்த தலைப்புகள் உங்களுக்கு உதவும்.
நகைச்சுவை இன்ஸ்டாக்ராம் தலைப்புகள்
நகைச்சுவை மற்றும் படிக்க எளிதான உள்ள தலைப்புகள். உங்களை பின்பற்றுபவர்களுக்கு பிடிக்கும்.
1. ஒவ்வொரு செயலுக்கும், என்னிடம் புத்திசாலித்தனமான தலைப்பு உள்ளது
2. *உங்கள் வாழ்க்கையை பற்றி ஒரு தத்துவ மேற்கோளை சேர்க்கவும்*
3. எனக்கு இன்ஸ்டாக்ராம் பிடிக்கும் ஏனென்றால் அது என்னுடைய அனைத்து பதிவுகளையும் சரியாக கையாள உதவுகிறது
4. எனக்கு இன்ஸ்டாக்ராமை பிடிக்கும், என்னென்றால் அது என்னுடைய ஒவ்வொரு விடயங்களையும் சரியாக பாதுகாக்க உதவும்.
5. உங்கள் வாழ்க்கைக்கு உற்சாகம் தரக் கூடியதை கண்டு அறியுங்கள் இல்லையென்றால் நீங்கள் இறப்பை நோக்கி பயணிக்கிறீர்கள்.
6. உங்கள் காபி சூடாக இருக்கலாம், உங்கள் கண் இமையும் கூடத்தான்
7. மோசமான சூழலில் இருந்து விலகி விடுங்கள்
8. நான் அனைத்தும் நல்லபடியாக இருப்பதுபோல நடந்து விடுவேன்,
9. உண்மைத் தோழன் தண்ணி அடிக்கும் எப்போதும் கூடவே இருப்பான்
10. என் இளவரசன் வெள்ளை குதிரையில் வரவில்லை… அவன் ஒரு ஆமை மீது எங்கேயோ வந்து கொண்டிருக்கிறான்,
11. வாழ்க்கை குறுகியது. பற்கள் இருக்கும் வரை புன்னகையுங்கள்
கவிதை வரிகள் இன்ஸ்டாக்ராம் தலைப்புகள்
இது தலைப்புகளை உருவாக்க ஒரு எளிதான வழி. ஏனென்றால் பாடல் வரிகள் முன்பே உருவாக்கப்பட்டவை. நீங்கள் அதில் இருந்து உங்களுக்கு ஏற்ற வரிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், அது உங்களுக்கு அதிக பிரபலம் இல்லாத பாடல் வரிகளைக் கூட தேர்ந்தெடுக்க உதவும். அது உங்களுக்கு சுவாரசியமாகவும் இருக்கும். எனினும் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
1. “நான் உறுதியாக கூறுகிறேன், இந்த வாழ்க்கை ஒரு இனிமானது எனக்குத் தெரிந்த வரையிலும்”.
2. உன் பாதத்தை தரையில் படாமல் தூக்கி வைப்பேன் மேலும் அதை எப்போதும் கீழ பட விடமாட்டேன்.” – எட் ஷீரன், பதிவு 8
3. “நீ சொன்னாய் உனக்கு ஒரு புதமை தேவை என்று, உனக்குத் தெரியும் நம் அனைவருக்கும் உங்க உலகில் ஒரு மாற்றம் தேவை என்று .” – தி பீட்ல்ஸ், ரெவளிசன்
4. “நான் சிரியவன் ஆனால் முடி சூட வருகிறேன்.” – லோர்ட், ஸ்டில் சேன்
5. “நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன், ஏனென்றால் வெற்றிப் பெறுபவன் பின் வாங்க மாட்டான்.” – பெயோன்சே, பிரிடம்
6. “நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், சுதந்திரமாக இருக்கிறோம், சற்று குழப்பத்துடன் இருக்கிறோம் மேலும் அதே நேரத்தில் தனிமையில் இருக்கிறோம்.” டயலோர் ஸ்விப்ட், 22
7. “என் கைகளை என்னிடமே நான் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?” – செலேன்ஸ கோமேஸ்,
8. “ஒரு நல்ல பெண் என்னை திரும்பி பார்த்தால். அவளிடம் என் இதையம் சென்று விட்டது. நான் அதை உரக்கச் சொல்வேன்.” – கார்டி பி, ரிங் பீட். கேஹ்லனி
குறும் இன்ஸ்டாக்ரம் தலைப்புகள்
இப்பொழுது சிறியதாகவும் இனிமையாகவும் தலைப்பை வைத்துக் கொள்ள வேண்டிய நேரம். குறிப்பாக இன்ஸ்டாக்ரம் நீண்ட தலைப்புகளை ஏற்காத நிலையில் ‘அதிகம் படிக்க’ வேண்டியதிருக்கும். சிறியதாக தலைப்பை வைத்துக் கொள்ளும் போது அது இனிமையாகவும் அமைந்து விடுகிறது.
1. நான் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு
2. நாம் நாமாக இருப்போம்
3. சூரிய ஒலியை நிறுத்தாதீர்கள்
4. நாம் பெரிய விடயங்களால் உருவாக்கப்பட்டவர்கள்
5. அழகிய விடயங்கள் கவனத்தை ஈர்க்கும்
6. என் கதை இப்போதுதான் தொடங்கி உள்ளது
7. கனவு இலவசம், இம்சைகள் தனியாக விற்கப்படுகிறது
8. இது நாம் வாழ்வதற்கான நாட்கள்
9. அதிக பிரச்சனைகள்
10. வாழ்க்கையில் நடப்பவை நடக்கும்,
11. எழுந்திரு வெற்றியை நோக்கி
12. நட்சத்திர துகள்களில் வாழ்ந்து பிரகாசிக்க வேண்டும்