logo
ADVERTISEMENT
home / Health
கஷ்டம் வந்தா ‘கண்ணீர்’ விட்டு கதறி அழுவீங்களா?.. அப்போ ‘இது’ உங்களுக்குத்தான்!

கஷ்டம் வந்தா ‘கண்ணீர்’ விட்டு கதறி அழுவீங்களா?.. அப்போ ‘இது’ உங்களுக்குத்தான்!

காலம் காலமாக கண்ணீர் என்பதை அதிகபட்ச கோழைத்தனம் என்றே நாம் கருதி வருகிறோம். ஆண்கள்-பெண்கள் இருவரில் யார் அதிகம் அழுவது
என பார்த்தால், ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் அழுகின்றனர். இதனால் தான் பெண்களை விட ஆண்கள் அதிக மன உளைச்சலுக்கு
உள்ளாவதாக கூறப்படுகிறது.அழுகை(Crying) என்றாலே துக்கம்,வருத்தம் ஆகியவை தான் முதலில் நமது ஞாபகத்துக்கு வரும். ஆனால் சந்தோசத்தில் கூட சிலர் அழுவார்கள்.

பிறரின் கேலி,கிண்டல்களுக்குப் பயந்து கண்ணீரைத் தேக்கி வைப்பவர்களுக்கு மனரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.மனம் விட்டு அழுவதால்(Crying) மற்றவர்களின் அரவணைப்பு தொடங்கி எக்கச்சக்கமான நன்மைகள் மனிதர்களுக்கு கிடைக்கிறது என பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிகின்றன. அந்தவகையில் மனம்விட்டு அழுவதால் ஏற்படும் நன்மைகள்(Benefits) என்னவென்று இங்கே பார்க்கலாம்.

தாங்க முடியாத

ADVERTISEMENT

சந்தர்ப்பமும், சூழ்நிலையும் எல்லோருக்கும் ஒரேமாதிரி அமைவதில்லை. வெளியில் பார்க்க பகட்டாக இருக்கும் மனிதர்கள் கூட உள்ளுக்குள் ஆயிரம்
துன்பங்களை சுமந்து கொண்டிருப்பர். நமக்கு ஒரு துன்பம் வரும்போது இந்த உலகமே மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றும்.பணம்,பாசம்,பகை,
துரோகம்,காதல் பிரிவு, நெருங்கியவர்களின் மறைவு என ஏதாவது ஒருவழியில் தாங்க முடியாத ஒரு துன்பம் வாழ்க்கையில் அனைவருக்கும் ஏற்படும்.

சூழ்நிலை 

அதுபோன்ற சூழ்நிலைகளில் மனதைப் போட்டு வருத்திக் கொள்ளாமல் அந்த சூழ்நிலையை எப்படிக் கடப்பது? என யோசித்து அதற்கான முடிவுகளை முன்னெடுங்கள். இதுபோன்ற சூழ்நிலைகளின் போது கண்ணீர் வந்தால் அடக்கி வைக்காமல், அழுவதைக்(Crying) கவுரவக்குறைவாக நினைக்காமல் மனம்விட்டு அழுங்கள்.

ADVERTISEMENT

மன ஆறுதல்

பொதுவாக மனம் விட்டு அழுதுவிட்டால் அந்த பிரச்னை சரியாகி விடுவதோடு மனதில் ஒரு ஆறுதலும், மனம் ரிலாக்ஸாகவும் இருக்கும். காரணம் நாம் அழும்போது உடம்பில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் சுரந்து அது கண்ணீர் வழியாக வெளியே வந்துவிடுமாம். இதனால் அந்த ஹார்மோன் சுரத்தல் அளவு குறைந்துவிடும் என ஆராய்ச்சியில் நம்பப்படுகிறது. அதனால்தான் நாம் ஃபீல்குட் ஆக உணர்கிறோம் என்றும் சொல்லப்படுகிறது.

நல்ல தூக்கம் வரும்

ADVERTISEMENT

அழுது கொண்டே தூங்கி விடும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அழுதால் தூக்கம் வரும். நீங்கள் ஏதாவது மனவருத்தத்தில் இருந்தாலோ இல்லை தாங்கமுடியாத துக்கத்தில் இருந்தாலோ மனம்விட்டு அழுங்கள். மனம் விட்டு அழுதாலோ, கதறி அழுதாலோ(Crying) நிச்சயம் உங்களுக்குக் கண்ணீர் வரும். தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாலும் கண் எரிச்சல் ஏற்பட்டு தூக்கத்தை நாடுவீர்கள்.

கிருமிகளைக் கொல்லும்

அழும்போது கண்களில் ஐசோஸைமி (lysozyme) என்கிற அமிலம் சுரக்கிறது. அது கண்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளை நீக்கி சுத்தம்
செய்கிறது. இதனால் நீண்ட அழுகைக்குப் பின் கண் பார்வை தெளிவடைவதாகவும், வறண்ட கண்களில் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதாகவும் தேசிய கண் மையம் விவரித்துள்ளது.

ADVERTISEMENT

மலையையே இறக்கி

நாம் அழும்போதெல்லாம் நமது மனபாரம் குறைந்து மனம் அமைதியாவதை நாமே பல்வேறு தருணங்களில் உணர்ந்திருப்போம். ஒரு மனக்கஷ்டத்தை
அழுகையின் மூலம் வெளிப்படுத்திவிட்டால் ஒரு மலையையே இறக்கி வைத்ததுபோல நமக்குத் தோன்றும். நாம் அழுவதால் அந்த சூழ்நிலை
மாறாவிட்டாலும் கூட அந்த இறுக்கமான சூழலில் இருந்து நாம் சற்றேனும் வெளிவருவதற்கு அழுகை நமக்கு உதவும்.

பலவீனமானவர்களாக 

குறிப்பாக நமது துன்பங்களை மனதில் போட்டு அடைக்காமல் வெளியே சொல்லி அழுவதே நம்மை மனஅழுத்தம், தலைவலி போன்றவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். அழுகை நம்மைப் பலவீனமானவர்களாக காட்டாது. மாறாக அது நம் மனம் புதைந்து போகாமல் தூக்கி நிறுத்துவதற்கு உதவிடும்.

ADVERTISEMENT

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் படிச்சிட்டீங்களா? இனிமே மத்தவங்க கேலி செய்வாங்க, கிண்டல் பண்ணுவாங்கனு நெனைக்காம உங்களுக்கு
அழுகனும்னு தோணுனா? யோசிக்காம சட்டுன்னு அழுதுடுங்க. ஏன்னா ஷேரிங்,கேரிங் போல கண்ணீரும் நல்லதுதான்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT
24 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT