logo
ADVERTISEMENT
home / Self Help
திடீரென உங்கள் வேலை ‘பறிபோய்விட்டால்’ என்ன செய்வீர்கள்?

திடீரென உங்கள் வேலை ‘பறிபோய்விட்டால்’ என்ன செய்வீர்கள்?

‘காலணா சம்பளம்னாலும் கவர்ண்மென்ட் சம்பளம்’ என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. கவர்ண்மென்ட் சம்பளம் வாங்கும் பையன் தான்
மாப்பிள்ளையாக வரவேண்டும் என நீங்கள் நினைத்தால் ஜென்மத்திற்கும் காத்திருக்க வேண்டி இருக்கும். ஆண்களோ/பெண்களோ இன்று நாட்டில்
உள்ள முக்கால்வாசி பேருக்கு தனியார் நிறுவனங்களே வேலைவாய்ப்பினை அளிக்கின்றன.

ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் விலைவாசி, கல்வி செலவு, வீட்டு வாடகை போன்ற காரணங்களால் எவ்வளவு சிரமமாக இருந்தாலும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் போட்டிகள் மற்றும் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நடுத்தர வயதினைக் கடந்தவர்களை கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நீங்கள் எவ்வளவு கடின உழைப்பாளியாக இருந்தாலும், புத்திசாலியாக இருந்தாலும் உங்களுக்கும் ஒருநாள் வேலையில்லா சூழல் ஏற்படலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள். அந்த நேரம் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்புவதை விட முன்னரே இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படி திறம்படக்
கையாள்வது? என்பதை திட்டமிட்டுக் கொள்வது உங்கள் மனதிற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. திடீரென(Sudenly) உங்கள் வேலை(Job) பறிபோய்விட்டால்? நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்பதை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளோம்.இதனை படித்து உங்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை திடீரென(Suddenly) ஏற்பட்டால் அந்த நேரம் இதனை மனதில் கொண்டு திறம்பட செயல்படுங்கள்.

ADVERTISEMENT

மனதை தளர விடாதீர்கள்

தினமும் ஆபிஸ் சென்று வேலைபார்த்து பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்திருப்பீர்கள். வேலை(Job) இல்லாத இந்த சூழ்நிலையில் மற்றவர்கள் வேலைக்கு செல்வதைப் பார்த்து மனதை தளர விடாதீர்கள். வேலை மட்டும் தான் இழந்தீர்கள் உங்கள் நம்பிக்கையை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனதை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்.

ரிலாக்ஸ் டைம்

ADVERTISEMENT

வேலைக்கு(Job) சென்று கொண்டிருக்கும்போது மிகவும் பரபரப்பாக இருந்திருப்பீர்கள். தற்போது உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை, நீங்கள் வெகுநாட்கள் ஆசைப்பட்டு நேரமில்லாமல் தள்ளிப்போட்ட செயல்களை செய்து முடியுங்கள். துணி துவைப்பது, பிடித்த படங்களை டிவியில் பார்ப்பது, குடும்பத்துடன் சேர்ந்து இருந்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருப்பது, குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை செய்து முடிப்பது என உங்களுக்கு விருப்பமான செயல்களை செய்தீர்கள் என்றால் மனநிறைவுடன், நிம்மதியும் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

சுற்றுலா

ADVERTISEMENT

பக்கத்தில் எங்காவது அதிக செலவில்லாத இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வாருங்கள். நீங்கள் தனியாக இருந்தீர்கள் என்றால் நீங்கள்
மட்டும் எங்காவது உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று வாருங்கள். பயணம் செய்வது உங்கள் மனதின் விசாலத்தை அதிகப்படுத்தும் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.

மறைக்க வேண்டாம்

வேலையில்லாமல் இருப்பதை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும், நண்பர்களிடமும் மறைக்க வேண்டாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் வேலை(Job) இழந்ததை சொல்லும்போது உங்களிடமிருந்து அவர்கள் எதையும் சிறிது காலத்திற்கு எதிர்பார்க்க மாட்டார்கள். அதேபோல உங்கள்
நண்பர்களிடம் சொல்லும்போது அவர்கள் நிறுவனங்களில் அல்லது அவர்களுக்குத் தெரிந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இருக்குமானால்
உங்களுக்கு தெரியப்படுத்தக் கூடும்.

ADVERTISEMENT

செலவுகளை குறையுங்கள்

செலவுகளைக் குறைப்பது கூட ஒருவகையில் சேமிப்பு போன்றது தான். முன்பு நீங்கள் டாக்சி,ஆட்டோவில் சென்றிருந்தால் தற்போது பேருந்தில்
செல்லலாம். பேருந்தில் செல்வது ஒன்றும் கவுரவக்குறைச்சல் இல்லை என்பதை உணருங்கள். இதேபோல பைக்/ஸ்கூட்டியில் செல்பவராக
இருந்தாலும் சிறிது காலத்துக்கு அவற்றை ஓரங்கட்டிவிட்டு பேருந்தில் சென்று வாருங்கள். பெட்ரோல் விற்கும் விலையில் பேருந்தில் செல்வது
உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் அதேநேரம் உங்களுக்கு ஒரு மாற்றமும் கிடைக்கக் கூடும்.

ஹோட்டல்/பார்ட்டிகள்

ADVERTISEMENT

வேலை(Job) கிடைக்கும்வரையில் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது, பார்ட்டிகளுக்கு செல்வது போன்ற விஷயங்களுக்கு தடா சொல்லுங்கள். இது
உங்கள் பணத்தை வெகுவாகக் கரைக்கக்கூடும் என்பதோடு உங்கள் உடல் நலத்திற்கும் நல்லது.

ஆன்லைன் ஷாப்பிங்

நீங்கள் அடிக்கடி ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர் என்றால் தற்போது அதுபோன்ற செயல்களைத் தொடராதீர்கள். நேரடியாக கடைக்கு சென்று
உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வாருங்கள். இது உங்கள் பணத்திற்கும்,மனதிற்கும் ரொம்ப நல்லது. இதுதவிர ஆன்லைனில் ஷாப்பிங்
செய்வதற்கும், நேரில் சென்று பொருட்களை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணரக்கூடும். ஆபர் கிடைக்கிறது என்பதற்காக
உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம்.

ADVERTISEMENT

கிரெடிட்கார்டு

இந்த காலகட்டத்தில் உங்களிடம் கிரெடிட்கார்டு இருந்தால் அவற்றைத் தொடாமல் இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கார்டைப்
பயன்படுத்தலாம். ஆனால் தொட்டதற்கெல்லாம் அதனைப் பயன்படுத்த வேண்டாம். இதேபோல டெபிட் கார்டையும் இஷ்டத்திற்கு தேய்க்காமல்
பணமாக எடுத்து செலவு செய்யுங்கள்.

கிடைத்த வேலையை

ADVERTISEMENT

உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு வேலை(Job) கிடைக்கும்வரை பகுதி நேரம் அல்லது குறைந்த சம்பளத்தில் ஏதாவது வேலை கிடைத்தால் தயங்காமல்
செய்யுங்கள். வேலை இல்லாமல் இருப்பதை விட இது மேலானது. அதேநேரம் உங்கள் தகுதிகளையும் இந்த காலகட்டத்தில் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் திடீரென(Suddenly) உங்கள் வாழ்விலும் ஏற்பட்டால் மேலே சொன்ன விஷயங்களைப் பின்பற்றி உங்கள் வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறோம்…

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

24 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT