logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
உங்கள் மனஅழுத்தத்தை குறைக்க சரியான சுற்றுலா தளத்தை தேர்வு செய்வது எப்படி?

உங்கள் மனஅழுத்தத்தை குறைக்க சரியான சுற்றுலா தளத்தை தேர்வு செய்வது எப்படி?

சுற்றுலா என்றாலே மகிழ்சிய தானாக வந்து விடும். பலரும் பயணம் செய்ய விரும்ப ஒரு முக்கிய காரணம், அது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைத்து, ஒரு நல்ல புத்துணர்ச்சியை மனதிற்கு தரும். இது ஆரோக்கியமாக வாழவும் உதவும். எனினும், சுற்றுலாவிற்கு (trip) தேர்வு செய்யும் அனைத்து இடங்களும் நீங்கள் எண்ணியபடி உங்களுக்கு மன அமைதியை தந்துவிடுமா?

நிச்சயம் இல்லை!

ஒரு சரியான தேர்வு மட்டுமே உங்கள் சூழலை நிம்மதியாக ஆக்க முடியும். அதற்கு நீங்கள் சில முயற்சிகளை செய்ய வேண்டும்.சரியான சுற்றுலா தளத்தை தேர்வு செய்து (travel planning tips), உங்கள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும், இங்கே உங்களுக்கு சில குறிப்புகள்;

1. இருக்கும் நேரம்

 முதலில் நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிடும் முன், உங்களுக்கு இருக்கும் நேரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம், என்று எத்தனை நாட்கள் நீங்கள் சுற்றுலாவிற்க்காக ஒதுக்க முடியும் என்று திட்டமிட வேண்டும். இந்த நேரத்திற்கு தகுந்தவாறே உங்கள் அருகாமையில் இருக்கும் இடத்தையோ, அல்லது சற்று தொலைவில் இருக்கும் இடத்தையோ நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால், தவறான கணிப்பே உங்களுக்கு மேலும் அழுத்தத்தை உண்டாக்கக் கூடியதாக மாறிவிடக் கூடும்.

ADVERTISEMENT

2. செலவுகள்

Pexels

உங்கள் பட்ஜெட்டை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் செல்லும் இடத்திற்கும், எத்தனை நாட்கள் அங்கு செலவிடப் போகின்றீர்கள் என்பதற்கும் ஏற்றவாறு உங்கள் செலவுகளை நீங்கள் திட்டமிட வேண்டும். அப்படி இல்லையென்றால், அதிக செலவுகள் அல்லது பண பற்றாக்குறை போன்ற சூழல் உங்கள் விடுமுறை நேரத்தில் உங்களுக்கு சங்கடமான சூழ் நிலையை உண்டாக்கி விடலாம்.

3. தூரம்

முடிந்த வரை நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் வீட்டில் இருந்து விலகி சுற்றுலா செல்ல வேண்டும் என்று திட்டமிட வேண்டும். குறிப்பாக மன நிம்மதிக்காக விடுமுறையில் செல்பவர்கள் தொலைதூர பயணத்தை அதிகம் விரும்புவார்கள். ஆனால், அதற்கு உங்களிடம் இருக்கும் நேரமும், பணமும் ஒரு முக்கிய விடயமாக உள்ளது. அதனால், நீங்கள் அழுத்தம் இல்லாமல், நிம்மதியாக ஒரு விடுமுறையை செலவிட வேண்டும் என்றால், நீங்கள் செல்ல வேண்டிய தூரத்தை நிர்ணயியுங்கள். 

ADVERTISEMENT

மேலும் படிக்க – பயணம் – நீங்கள் பகிர்ந்து கொள்ள சில சுவாரசியமான கவிதைகள்!

4. கால நிலை

Pexels

நீங்கள் செல்லும் இடத்தில் இருக்கும் சீர்தோஷ கால நிலையம் ஒரு முக்கிய காரணி. உதாரணத்திற்கு, நீங்கள் அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் வசிகின்றீர்கள் என்றால், நிச்சயம் ஒரு குளிர்ந்த பிரதேசத்தை விரும்புவீர்கள். மேலும் இது உங்கள் மனதிற்கும் ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கும். அதே போன்று, நீங்கள் விடுமுறைக்கு செல்லும் காலமும் முக்கியம். அதிக மழை பெய்யும் காலமாக இருந்தால், உங்களால் சென்ற இடத்தில் அதிகம் வெளியே சுற்றி பார்க்க முடியாமல், அறைக்குள்ளே இருந்து விட வேண்டிய சூழல் உண்டாகலாம். இது உங்களுக்கு பயன் தராமல் போகலாம்.

ADVERTISEMENT

5. அமைதியான சூழல்

நீங்கள் ஒரு நல்ல அமைதியான சூழலை தேர்வு செய்ய வேண்டும். அதாவது, நீங்கள் தேர்வு செய்த விடுமுறை தளம் அமைதியான சூழலில் இருக்க வேண்டும். சுற்றி அதிக வாகன போக்குவரத்தோ, அல்லது மக்கள் நடமாட்டமோ இல்லாமல், அமைதியாக இருந்தால், நீங்கள் பறவைகளின் சத்தம், காற்றின் ஓசை போன்றவற்றை ரம்மியமான சூழலில் இரசித்து மன அமைதியோடு இருக்கலாம்.

6. நபர்கள்

Pexels

நீங்கள் தனியாக விடுமுறைக்கு செல்கின்றீர்களா, அல்லது உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு செல்லப் போகின்றீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதிக நபர்களுடன் நீங்கள் விடுமுறைக்கு சென்றால், நிச்சயம் உங்களால் அமைதியான சூழலை எதிர் பார்க்க முடியாது. நிம்மதியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்றால், தனியாகவோ, அல்லது உங்கள் மனைவி/கணவன் அல்லது ஒரு நண்பரோடோ செல்வது நல்லது.

ADVERTISEMENT

7. தங்கும் விடுதி

நீங்கள் தங்கும் விடுதிக்கும், மன நிம்மதிக்கும் அதிக தொடர்பு உள்ளது. நீங்கள் ஒரு நல்ல அமைதியான இடத்தில் இருக்கும் தங்கும் விடுதியை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அந்த விடுதி போதிய வசதிகள் உடையதாக இருக்க வேண்டும். மேலும் சுத்தமாகவும், நல்ல சௌகரியமானதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும், நீங்கள் நிம்மதியாக உங்கள் நேரத்தை விடுமுறையில் கழிக்க உதவும். மேலும் நீங்கள் விரும்பும் இடத்திற்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி கூடம், போன்ற வசதிகளும் இருக்க வேண்டும். எனினும், தங்கும் விடுதிக்கு ஆகும் செலவுகளையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.  

மேலும் படிக்க –  பயணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை எப்படி சரி செய்வது?

பட ஆதாரம் – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

09 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT
good points logo

good points text