logo
ADVERTISEMENT
home / Health
பயணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை எப்படி சரி செய்வது?

பயணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை எப்படி சரி செய்வது?

பயணம்(travel) ஒரு இனிமையான விடயம். அனைவருக்கும் பயணம் செய்வது என்றால் அதிகம் பிடிக்கும். சொல்லப்போனால், பயணம்(travel) செயாதவர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. இதில் இருக்கும் சுவாரசியம் மற்றும் உங்கள் மனதிற்கு கிடைக்கும் புதுனர்சியை பற்றி விவரிக்க முடியாது. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவத்தை பொறுத்தே இருக்கும்.

பேருந்து, கார், தொடர் வண்டி அல்லது வேறு எந்த விதமான வாகனமாக இருந்தாலும், பயணம்(travel) செய்வது என்பது சுவாரசியமான விடயமே. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் உங்கள் பயணத்தை இனிமையானதாகவும் அல்லது மோசமானதாகவும் மாற்றக் கூடியது, பயணத்தின் போது உங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்.

சிறியவர்களோ, பெரியவர்களோ, ஒரு சிலருக்கு பயணம்(travel) என்று வந்து விட்டாலே, வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் போது பல உடல் நல பிரச்சனைகளை சந்திபார்கள். அது அவர்களுக்கு அதிக அசௌகரியத்தைக் கொடுக்கும். மேலும் இதனால் அவர்கள் பயணம்(travel) முடிந்து செல்ல வேண்டிய இடத்திற்கு சென்ற பின் அதிகம் சோர்வோடும், உற்சாகம் குறைந்தும் காணப் படுவார்கள். மேலும் அவர்களது பயணத்தை முடித்து வீடு திரும்பும் போது அதிக சோர்வோடு, இனி பயணமே செய்யக் கூடாது என்ற தீர்மானத்தோடு வருவார்கள்.

இது ஒரு சிறிய பிரச்சனை தான்.  இதனை நீங்கள் எளிதாக சரி செய்து விடலாம். ஒரு சிலருக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாகனம் காரணமாக இருக்கக் கூடும். அப்படி இருக்கும் போது, நீங்கள் உங்களுக்கு ஏற்ற வாகனத்தை சரியாக தேர்வு செய்து பயணம்(travel) செய்ய முயற்சி செய்யலாம். இதனால் இத்தகைய பிரச்சனைகளை பெரிய அளவில் குறைத்து விடலாம். உங்கள் பயணமும் மகிழ்ச்சியாக அமையும்.

ADVERTISEMENT

எனினும், பலருக்கு, வேறு வழி இல்லாமல், அவர்களுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கக் கூடிய வாகனம், அதாவது பேருந்து அல்லது விமானத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இத்தகைய சூழலில், நீங்கள் பயணத்தின் போது ஏற்படும் உடல் உபாதைகளை எப்படி சரி செய்து எளிதாக சமாளிப்பது என்பதை பற்றித் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

பயணத்தின்(traveling) போது உடல் உபாதைகள் எப்படி ஏற்படுகின்றது?

உங்களுக்கு ஏன் பயணத்தின்(traveling) போது உடல் உபாதை ஏற்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டால், எளிதாக அதனை சமாளிக்க ஒரு நல்ல தீர்வை கண்டு பிடித்து விடுவீர்கள். பலருக்கும் சமமான நிலப் பரப்பில் பயணம்(traveling) செய்வதை விட மலைப் பகுதிகளில் பயணம்(travel) செய்யும் போது அதிக அசௌகரியங்கள் ஏற்படுகின்றது. இது குறிப்பாக தட்ப வெட்ப நிலை மற்றும் காற்றழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்றது.

எந்த நில பரப்பாக இருந்தாலும், நீங்கள் எளிதாக உங்களுக்கு ஏற்படக் கூடிய உடல் உபாதைகளில் இருந்து விடு படலாம்.

ADVERTISEMENT

how-to-get-rid-of-motion-sickness-during-traveling004

இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த சாதணை பெண்கள்!

ஏன் பயணத்தின் போது உடல் உபாதைகள் ஏற்படுகின்றது என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில தகவல்கள்

பயணத்தின் போது கண்கள் மற்றும் உட்புற காதுகளுக்கு சில முரண்பட்ட சமிக்ஞைகள் அனுப்பபடுகின்றது. உதாரனத்திற்கு, நீங்கள் பேருந்தில் பயணம்(traveling) செய்யும் போது உங்கள் உடல் நகர்வது போல தோன்றும், ஆனால் உங்கள் கண்கள் கைபேசியை பார்ப்பது போல நிலையான ஒன்றை காண்பது போல சமிக்ஞை பெரும். இதனால் உங்கள் உடல் மற்றும் மூளையில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றது.

ADVERTISEMENT

குறிப்பாக சொல்லப் போனால் உங்கள் மூளை இத்தகைய மாறுதலான சமிக்ஞைகளைப் பெரும் போது குழப்பம் அடைந்து உடலில் சில மாற்றங்கள் ஏற்பட காரணமாகின்றது. இந்த பிரச்சனை பெரும்பாலும் பேருந்து அல்லது காரில் பயணம்(traveling) செய்பவர்களுக்கு அதிகம் ஏற்படும். இதனை விட, படகில் பயணம்(traveling) செய்பவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

பயணத்தின் போது உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு காரணங்கள் என்ன?

பயணத்திற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாகனம் ஒரு காரணமாக இருந்தாலும், வேறு சில காரணங்களும் உங்களுக்கு அத்தகைய உபாதைகளை உண்டாக்கக் கூடும். நீங்கள் அறிந்து கொள்ள, இங்கே அவை2 முதல் 12 வயது வரையிலான குழந்தைள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இத்தகைய உடல் நல பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர்.

மைக்ரைன் பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் பயணத்தின் போது அவதிப் படுகின்றனர். மாத விடாய் காலங்களில் பெண்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் பசியோடு வெறும் வயிற்றில் பயணம்(traveling) செய்தால் இந்த பிரச்சனை அதிகமாகக் கூடும். பேருந்தின் பின் பகுதியில் அமர்ந்து பயணம்(traveling) செய்யும் போது இந்த பிரச்சனை அதிகரிக்கும். பயணத்தின் போது நீங்கள் புத்தகம் படிப்பது அல்லது மடி கணினி அல்லது கைபேசி பார்த்துக் கொண்டு இருப்பது என்று இருந்தால் இந்த பிரச்சனை அதிகரிக்கும்.
சுத்தமான காற்றோட்டம் இல்லை என்றாலோ அல்லது குளிர் சாதன வசதி இருக்கும் வாகனத்தில் தொலைதூரம் பயணம்(traveling) செய்தாலோ இந்த பிரச்சனை ஏற்படும்

ADVERTISEMENT

பயணத்தால் உங்களுக்கு ஏற்படும் உபாதைகளின் அறிகுறிகள்

ஏன் பயணத்தின் போது உங்களுக்கு உடல் உபாதை ஏற்படுகின்றது என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது அதற்கான அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள சில தகவல்கள், உங்களுக்காக

பயணத்தின் போது உங்களுக்கு ஏற்படும் உடல் உபாதையின் தாக்கத்தின் அளவு வாகனம் எவ்வளவு வேகமாகவும், எந்த நில பரப்பில் பயணம்(traveling) செய்கின்றது என்பதிலும் மற்றும் எந்த நேரத்தில் நீங்கள் பயணம்(traveling) செய்கின்றீர்கள் என்பதிலும் அடங்கி உள்ளது.

பளபளப்பான அழகான உதட்டை பெற! லிப்ஸ்டிக் போடுவதற்கான எளிய முறைகள்!

ADVERTISEMENT

இங்கே சில அறிகுறிகள்:

o    வயிற்றில் அசௌகரியமான உணர்வு

o    வறண்ட வாய்

o    அதிகம் வியர்வை

ADVERTISEMENT

o    வாய் உளறல்

o    மயக்கம்

o    குமட்டல்

o    வாந்தி

ADVERTISEMENT

o    கிறுகிறுப்பு

o    தலை வலி

o    உமிழ்நீர் அதிகம் சுரப்பது

o    ஏப்பம்

ADVERTISEMENT

o    அதிக தூக்கம் என்று மேலும் பல

இந்த அறிகுறிகளை சமாளிக்க நீங்கள் தற்காலிகமாக சில மருந்துகள் அல்லது கை வைத்தியம் எடுத்துக் கொண்டால் ஓரளவிர்க்காயினும் ஆறுதலாக இருக்கும்.

எப்படி பயணத்தின் போது ஏற்படும் உடல் உபாதைகளை சரி செய்வது?

பயணத்தின் போது உங்களுக்கு ஏற்படும் சில உடல் உபாதைகளை நீங்கள் எளிதாக சரி செய்து விடலாம். அதற்கு நீங்கள் சில விடயங்களை செய்ய வேண்டும். அது உங்கள் பயணத்தை நிச்சயம் மகிழ்ச்சியாக்குவதோடு, நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

ADVERTISEMENT

how-to-get-rid-of-motion-sickness-during-traveling003

உங்களுக்காக இங்கே சில எளிதான மற்றும் பயன் தரக்கூடிய குறிப்புகள்

பயணத்தை தீர்மானிக்கும் முன் எந்த வாகனம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் பெரும் அளவு உங்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகளை சமாளித்து விடலாம். நீங்கள் ஒரு குழுவாக வழிகாட்டியோடு பயணம்(traveling) செய்தால், அவரிடம் உங்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகளை முன் கூட்டியே தெரியப் படுத்துவது நல்லது. அவர் உங்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் பிற பொருட்களை தயாராக வைத்திருப்பார்
உங்களுடன் நீங்கள் ஒரு சில பொருட்களை எடுத்து செல்வது நல்லது. மேலும் அவற்றை நீங்கள் எளிதாக எடுக்கும் வகையில் உங்கள் கை பையிலோ அல்லது அருகாமையிலோ வைத்துக் கொள்வது நல்லது.

அவற்றில் சில, இஞ்சி மரப்பா, புளிப்பு மிட்டாய் அல்லது புளிப்பான ஏதாவது ஒரு பொருள், பிளாஸ்டிக் பை என்று மேலும் சில பயணத்தை தொடங்குவதற்கு முன் எப்போதும் சிறிது உணவாவது எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் பயணம் செய்வது நிச்சயம் உங்களுக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்
வாகனத்தில் பயணம் செய்யும் போது புத்தகம் படிப்பது, கைபேசியை பார்த்துக் கொண்டிருப்பது மற்றும் மடி கணினியை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. இத்தகைய செயல்கள் உங்களுக்கு தலை சுற்றல் மற்றும் தலை வலி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.

ADVERTISEMENT

சுத்தமான காற்று உங்களை சுற்றி வருவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் குளிர் சாதன வாகனத்தில் பயணம் செய்யும் போது, போதுமான காற்று சுழற்சி உள்ளே உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால், ஜன்னல்களை திறந்து வைத்து சுத்தமான காற்று உங்களை சுற்றி இருக்குமாறு பயணிக்க வேண்டும்.

முடிந்த வரை உங்கள் கண்களை மூடிக் கொண்டு தூங்கி விடுவது நல்லது. அப்படி செய்யும் போது நீங்கள் எதையும் வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படாது. மேலும் இதனால் உங்கள் மூளைக்கு அனுப்பப்படும் சமிக்ஞைகலும் சீறாக இருக்கும். இதனால் உடல் உபாதைகள் ஏற்படும் வாய்புகள் குறையும்.

முடிந்த வரை வாகனத்தின் சத்தத்தை கவனிக்காமல் இருப்பதற்கு வேறு ஏதாவது சத்தத்தில் உங்கள் கவனத்தை செலுத்தலாம். குறிப்பாக பாட்டுக் கேட்பது, சக பயணிகளுடன் பேசிக் கொண்டு வருவது என்று சில செயல்கள் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்காமல் அவ்வப்போது இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். சில மணி நேரங்களுக்கு ஒரு முறை சற்று இடைவேளை எடுத்துக் கொண்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து ஓய்வு எடுத்துக் கொல்லுங்கள. இது நீங்கள் புத்துணர்ச்சியோடு இருக்க உதவும். சரியான நிலையில் அமர்ந்து பயணம் செயுங்கள். இதுவும் நீங்கள் சௌகரியமாக எந்த உடல் உபாதைகளும் ஏற்படாமல் பயணம் செய்ய உதவும்.

ADVERTISEMENT

கோடிகளில் புரளும் நயன்தாராவின் தர்பார் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பயணத்தின் போது ஏற்படும் உடல் உபாதைகளை எளிதாக போக்க கை வைத்தியம்

பயணத்தின் போது ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டால் உங்களால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட முடியாமல் போகலாம். மேலும் உடன் இருப்பவர்கள் சில சங்கடங்களை சந்திக்க நேரிடலாம். அதனால் நீங்கள் முன்பே உங்களை தயார் செய்து கொள்ளும் வகையில் சில கை வைத்தியங்களை தயார் செய்து கொள்வது நல்லது.

உங்களுக்காக இங்கே சில

ADVERTISEMENT

அக்கு பிரெஷர். உங்கள் விரல்களால் உங்கள் தலைப் பகுதியில் அல்லது காது போன்ற பகுதியில் மிதமான அழுத்தம் கொடுப்பதால், உபாதைகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. எந்த இடத்தில் சரியாக அக்கு பிரஷர் கொடுக்க வேண்டும் உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
இஞ்சி மற்றும் எலுமிச்சை பழம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். பயணத்தின் போது இஞ்சி தேநீர், எலுமிச்சை பழம் சாறு போன்றவற்றை அருந்தினால் சற்று புத்துணர்ச்சியோடு இருக்கலாம்
இவை மட்டுமல்லாது, உங்கள் மனதையும் நீங்கள் மகிழ்ச்சியோடும், புத்துணர்ச்சியோடும் வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இது உங்களுக்கு ஏற்படவிருக்கும் உபாதைகளை தவிர்க பெரிதும் உதவும்.

27 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT