logo
ADVERTISEMENT
home / Health
நீரழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

நீரழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

இன்று சிறு வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் அச்சுரித்து வரும் ஒரு நோய், நீரழிவு நோய். இது இன்று பிறந்த குழந்தைகளையும் கூட விட்டு வைப்பதில்லை. பல குழந்தைகள் பிறக்கும் போதே இந்த பிரச்சனையுடன் பிறந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டே வளருகின்றனர்.

நீரழிவு நோயை குணப்படுத்த முடியாதா?

இந்த ஐயத்தோடு, பலரும் இன்று, ஏன் கோடிக்கணக்கானோர் தினமும் மருந்துகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.எனினும், உங்கள் வாழ்க்கை முறையிலும், உணவிலும், உண்ணும் விதத்திலும் சில மாற்றங்கள் செய்தாலே, இதனை எந்த வைத்தியமும் இல்லாமல் முற்றிலும் குணப்படுத்தி விட முடியும் என்கின்ற விழிப்புணர்வு நம்மில் எத்தனை பெயருக்கு உள்ளத?

இந்த நீரழிவு நோயை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவும்(diabetes cause), இதனை குணப்படுத்த(treatment) இருக்கும் வீட்டு வைத்தியங்களை பற்றி தெரிந்து கொள்ளவும் இந்த தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்!

ADVERTISEMENT

நீரழிவு நோயை பற்றிய புரிதலும், அறிய தகவல்களும்!(Facts and Understanding)

  • இந்த நோய் மெல்லிடஸ் மற்றும் டைப் 2 நீரழிவு நோய் என்று இரண்டு வகை படுத்தப்பட்டுள்ளது
  • இது உடலில் உயர் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் வளர்சிதை மாற்ற நோய்
  •  டைப் 2 நீரிழிவு என்பது நீண்டகாலமாக உயர்த்தப்பட்ட இரத்த சர்க்கரை அளவுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை.
  • 1980ல் 108 மில்லியனில் இருந்து 2014ல் 422மில்லியனாக இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
  • 18 வயதுக்கு மேல் உள்ளவர்களின் அளவு 1980ல் 4.7% இருந்து 2014ல் 8.5% உயர்ந்துள்ளது
  • நடுத்தர குடும்பதினர்களிடையே இந்த நோய் அதிகம் ஏற்படுகின்றது
  • இது கண் பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மார்படைப்பு, மூளைசெயலிழப்பு, என்று பல உயிருக்கு அச்சுறுத்தும் பிரச்சனைகளை உண்டாக்கும்
  • சரியான உணவு முறையும், உடற்பர்யிசியும் இந்த நோயை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்

யார் நீரழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?(Who are more at risk?)

Shutterstock

ADVERTISEMENT
  1. இது மரபு மூலம் பெரும்பாலும் அடுத்த தலைமுறையினருக்கு தொடருகின்றது
  2. குழந்தைகள், இளம் வயதினர்கள், மற்றும் 35 வயதிற்கு மேல்லானவர்கள் என்று அனைவரும் இதன் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்
  3. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இந்த நோயின் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, கவனமாக இல்லையென்றால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது
  4. அதிக உடல் எடை உள்ளவர்கள் இந்த நோயின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்
  5. அதிகம் மது அருந்துபவர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர்
  6. சரியான உணவு முறை இல்லாதவர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர்
  7. தொடர்ந்து வேறு ஒரு நோய்க்கு மருந்து எடுத்து கொண்டிருப்பவர்கள், அதன் காரணமாக சரியான உணவை பின்பற்ற முடியாதவர்கள் இதற்கு ஆளாகின்றனர்
  8. இன்றைய விரைவான வாழ்க்கையில், ஏற்படும் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு ஆளாகின்றவர்கள் இந்த நோயின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்

நீரழிவு நோயின் வகைகள்(Types of Diabetes)

நீரழிவு நோய் நான்காக வகைபடுத்தப்பட்டுள்ளது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்;

1. டைப் 1 நீரழிவு நோய்

இது உடலில் இன்சுலின் சுரக்காமல் போனால், அல்லது மிகக் குறைந்த அளவு மட்டுமே இன்சுலின் சுரந்தால் ஏற்படும். இதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படக் கூடும். மேலும் இது இன்சுலினை உற்பத்தி செய்யும் கணியத்தின் அணுக்களை சேதமடையச் செய்யும். இந்த நோய் பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை பாதிக்கின்றது. இரத்தத்தில் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ள(சிகிச்சை), தினமும் இன்சுலின் ஊசி பொட்டுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.

2. டைப் 2 நீரழிவு நோய்

இந்த வகையில் உடலில் இன்சுலின் பயன்படுத்தப்படாது அல்லது, இன்சுலின் உற்பத்தியாகாது. சர்க்கரை அணுக்களுக்குள் செல்ல முடியவில்லை என்றால், அணுக்களில் அதிக அளவு க்ளுகோஸ் உள்ளது அதனால் அணுக்கள் சக்தியை பயன்படுத்த முடியாது என்கின்ற நிலை ஏற்படுகின்றது. இது 35 வயதிற்கு மேலானவர்களுக்கு அதிக அளவு ஏற்படுகின்றது. 9௦% நீரழிவு நோய் இருப்பவர்கள், இந்த வகையாலே பாதிக்கப்படுகின்றனர். சரியான உணவு முறை மற்றும் சீரான உடல் எடையை தக்க வைத்துக் கொண்டால், இதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

ADVERTISEMENT

Shutterstock

3. கற்பகால நீரழிவு நோய்

இது குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும். இது குழந்தை மற்றும் தாய், இருவரையும் பாதிக்கும். எனினும், பெரும்பாலான பெண்களுக்கு இந்த நீரழிவு நோய், குழந்தை பிறந்தவுடன் குணமாகிவிடும்.

4. பிரிடியாபெடீஸ்

இது காலை வெறும் வயிற்றிலோ அலல்து உணவு அருந்திய பின்னரோ உடலில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறிக்கும். இந்த நேரங்களில் வழக்கத்தை விட உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இந்த நோயின் தாக்கம் இருந்தால், வெகு விரைவாகவே பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

ADVERTISEMENT

நீரழிவு நோயின் அறிகுறிகள்(Symptoms of Diabetes)

ஒரு சில அறிகுறிகளை வைத்து இந்த நோயை கண்டு பிடித்து விடலாம். பலருக்கும் உடலில் நீரழிவு நோய் இருக்கின்ற அறிகுறி தெரியாமல், ஆரம்ப காலத்தில் அலட்சியமாக விட்டு விடுகின்றனர். ஆனால், இது உண்மையான பாதிப்பை ஏற்படுத்தும் போது தான் விழிப்புணர்வு ஏற்படுகஈன்றது. இந்த நோயின் அறிகுறிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்:

  • மயக்கம்
  • அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
  • அதிக தாகம்
  • மங்கிய அல்லது மேகமூட்டமுடைய கண் பார்வை
  • உடலில் புண் ஏற்பட்டால், அது ஆற பல நாட்கள் எடுத்துக் கொள்வது
  • பாதங்கள் மரத்து போவது மற்றும் கூச்சம் ஏற்படுவது
  • சருமத்தில் மாற்றங்கள் ஏற்படுவது
  • வழக்கத்தை விட அதிகமாக உணவு எடுத்துக் கொள்வது
  • வறண்ட வாய்
  • பற்களின் ஈர்களில் பாதிப்பு
  • எண்ணங்களில் குழப்பம் ஏற்படுவது
  • அதிக பசி எடுப்பது
  • எரிச்சல்
  • சக்தியின் அளவு குறைவது
  • உடல் எடை அதிகரிப்பது. ஒரு சிலருக்கு உடல் எடை குறையக்கூடும்

நீரழிவு நோய் ஏற்படுவதன் காரணம் என்ன?(Causes of Diabetes)

Shutterstock

ADVERTISEMENT

நீரழிவு நோய் ஏற்பட சில குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளன. அவை:

  • உடலில் இன்சுலின் சரியாக சுரக்காமல் போனால், அல்லது சுரந்த இன்சுலின் உடலில் இருக்கும் அணுக்களில் சாராமல் போனால், இந்த நோய் ஏற்படும்
  • கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத போது அல்லது உடலில் உற்பத்தியாகும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாத போது இந்த நோய் ஏற்படுகின்றது
  • நாம் உண்ணும் உணவில் இருந்து தயாரிக்கப்படும் குளுக்கோஸை, இரத்தத்தில் இருந்து உடலில் உள்ள உயிரணுக்களில் ஆற்றலை உருவாக்க இன்சுலின் ஒரு விசையைப் போல செயல்படுகிறது.
  • நாம் உண்ணும் அனைத்து கார்போஹைட்ரேட் உணவுகளும் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸாக உடைக்கப்படுகின்றன. இன்சுலின் குளுக்கோஸை உயிரணுக்களில் பெற உதவுகிறது.
  • அதிக அளவிலான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதால் இன்சுலின் அளவை நீண்ட காலத்திற்கு உயர்த்த முடியும். இதன் விளைவாக செல்கள் இன்சுலின் விளைவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்குகின்றன

 

இன்சுலின் எப்படி செயல்படுகின்றது?(How insulin works)

  • இன்சுலின் என்கின்ற ஹார்மோன் கணையத்தில் இருந்து உற்பத்தி ஆகின்றது
  • கணையம் இரத்த ஓட்டத்தில் இன்சுலினை சுரக்கின்றது. இதனால் இன்சுலின் சுழற்சியாகி அணுக்கள் சர்க்கரையை உள்ளெடுத்து கொள்ள உதவுகின்றது
  • இன்சுலின் இரத்த ஓட்டத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள, அல்லது அதிக அளவை குறைக்க உதவுகின்றது

ADVERTISEMENT

நீரழிவு நோயை கண்டறிதல்(Diagnosis of Diabetes)

உங்கள் உடலில் நீரழிவு நோயின் தாக்கம் இருகின்றதா என்பதை பற்றி தெரிந்து கொள்ள சில பரிசோதனைகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்;

1. உண்ணாவிரத – வெறும் வயிற்றில் இருக்கும் பிளாஸ்மா குளுக்கோஸ் (FPG) நிலைகள் (Fasting plasma glucose level)

இந்த பரிசோதனையில், 8 மணி நேரம் எந்த உணவும் எடுக்காமல், காலையில் வெறும் வயிற்றில் பரிசோதனை செய்யப்படும். அப்பது, உடலில் எதுவும் உண்ணாமல் இருக்கும் போது சர்க்கரையின் அளவு என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பரிசோதனை உதவும். 126மில்லிகிராம்/ டிஎல் அளவுக்கு மேல் இரண்டு பரிசோதனைகளுக்கு மேல் இருந்தால், நீரழிவு நோய் இருப்பதற்கான அறிகுறியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்

2. A1c சோதனை (ஹீமோகுளோபின் A1C, அல்லது HbA1C)

இந்த பரிசோதனையில் கடந்த சில மாதங்களாகவே உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீரான இடைவேளையில் எடுத்து, ஒருவர் உடலில் சர்க்கரை எவ்வளது இருகின்றது என்பதை தெறித்து கொள்ள உதவும். இந்த பரிசோதனைக்கு விரதம் இருக்க வேண்டாம். A1c >6.5% இருந்தால், நீரழிவு நோய் இருப்பதற்க்கான அறிகுறியாகும்.

ADVERTISEMENT

Shutterstock

3. ரேண்டம் பிளாஸ்மா குளுக்கோஸ் (ஆர்பிஜி) சோதனை

இந்த பரிசோதனையில், கண்ணுக்குத் தெரியும், மற்றும் நோயாளி உணரும் அறிகுறிகளை வைத்து கண்டறிவார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில அறிகுறிகளை நீங்கள் தொடர்ந்து சில நாட்கள் உணர்ந்தால், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த பரிசோதனை செய்ய இரவு முழுவதும் உணாமல் இருக்க வேண்டிய தேவை இல்லை. >2௦௦ மில்லிகிராம்/ டிஎல் இருந்தால், மேற்கொண்டு சில பரிசொதனைகளை செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

4. வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை (OGTT)

இதில் நீங்கள் இனிப்பான பானம் அருந்த 2 மணி நேரத்திற்கு முன்னரும், அருந்தி 2 மணி நேரத்திற்கு பின்னரும் பரிசோதனை செய்யப்படும். இதனால் உங்கள் உடல் எப்படி சர்க்கரையை கையாளுகின்றது என்பதை பற்றி தெரிய வரும்.

ADVERTISEMENT

நீரழிவு நோயால் ஏற்படும் ஆபத்துகள் / விளைவுகள்(Risk Factors and Consequences of Diabetes)

  • சரியான நேரத்தில் இந்த நோயை கண்டறிந்து, இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், இது முதலில் கண்களில் இருக்கும் இரத்த நாணங்களை பாதிக்கும் பின்னர் பற்களை பாதிக்கும்
  • அடுத்த நிலையாக, இதற்கான சிகிச்சையை சரியாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டால், இது உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளை பாதிக்கத் தொடங்கி விடும். குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நரம்பு மண்டலம் மற்றும் கை கால்களையும் பாதிக்கும்
  • உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை அதிரிக்கும்
  • உயர் இரத்த கொதிப்பை உண்டாக்கும்
  • எளிதாக ஆபத்தான நோய் தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும்
  • மன நிலையை பெரிதும் பாதிக்கும்
  • தூக்கத்தை பாதித்து, அதன் விளைவாக பல ஆபத்தான விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தக் கூடும்
  • மார்படைப்பு மற்றும் இருதயத்தில் பல நோய்களை உண்டாக்கக கூடும்
  • உடல் எடையில் அதீத மாற்றத்தை ஏற்படுத்தும்
  • சோம்பல், சரியாக சிந்திக்க முடியாமல் போவது என்று பல பிரச்சனைகளை உண்டாக்கி, உங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல், உங்கள் வாழ்வாதாரமே பாதிக்கக் கூடும்

நீரழிவு நோயை எப்படி தடுப்பது / கையாளுவது(Managing/preventing Diabetes)

நீரழிவு நோயை நீங்கள் வராமலும், அப்படியே வந்தாலும், அதனை எப்படி கட்டுபடுத்தி சீரான அளவில் உடலில் சர்க்கரையை வைத்துக் கொள்வது என்று இங்கே பார்க்கலாம்;

1. உடல் எடை குறைப்பு

நீரழிவு நோய் ஏற்பட முதல் காரணம், உடல் எடை அதிகரிப்பு. இதனை முதலில் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். முடிந்த வரை உங்கள் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதனை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.

2. ஆரோக்கியமான உணவு

ADVERTISEMENT

Shutterstock

இன்று இருக்கும் விரைவான உலகில், துரித உணவையும், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளையும், மற்றும் எண்ணை மற்றும் கொழுப்பால் செய்யப்பட்ட உணவுகளையும் அதிக அளவு மக்கள் உண்கின்றனர். இதுவே உங்களுக்கு நீரழிவு நோய் ஏற்பட முக்கிய காரணம். அதனால், அவற்றை முற்றிலும் தவிர்த்து விட்டு, இயற்க்கை காய், கணிகள், பாரம்பரிய உணவுகள், என்று எளிமையான, ஆனால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வழக்கப்படுத்திக் கொள்ளுக்னால். குறிப்பாக பாக்கட் பால் மற்றும் வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

3. உடற் பயிற்சி

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் உடலுக்கு தேவையான வேலை இல்லாதது தான். அதனால், உங்களுக்கு தினமும் போதிய உடலுக்கு கொடுக்கும் அளவிற்கு வேலை இல்லையென்றாலும், தவறாமல், 2௦ நிமிடமாவது தினமும் உடற் பயிற்சி செய்யுங்கள். குறிப்பாக 1 மணி நேரமாவது நடை பயிற்சி, மிதி வண்டி மிதிப்பது, நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது நல்ல பலனைத் விரைவாக தரும். யோகா மற்றும் த்யானம் செய்வதால் மேலும் கூடுதல் பலனைப் பெறுவீர்கள்

4. சரியான நீரழிவு நோயிக்கான சிகிச்சை

ADVERTISEMENT

Shutterstock

உங்கள் உடலில் நீரழிவு நோயின் அறிகுறி தெரிந்து விட்டாலே, உடனடியாக அதற்கான சரியான சிகிச்சையை எடுக்க வேண்டும். குறிப்பாக இயற்க்கை வைத்தியத்தை பின்பற்றுவது எந்த பின் விளைவுகளும் இல்லாமல், ஒரு நிரந்தர தீர்வையும் பெற உதவும்.

5. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்காணிப்பது

ஒரு முறை உங்களுக்கு நீரழிவு நோய் வந்து விட்டது என்று தெரிந்து விட்டாலே, நீங்கள் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு 3 முறையாவது பரிசோதனை செய்து கொண்டு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருகின்றது என்பதை கண்காணிக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல உங்கள் சிகிச்சையை நீங்கள் செய்ய வேண்டும்.  

மேலும் படிக்க – இறுதி மாதவிடாய் நாட்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்ன?

ADVERTISEMENT

நீரழிவு நோயை கட்டுப்படுத்த மருத்துவ சிகிச்சைகள்(Treatment Medical for Diabetes)

நீரழிவு நோயை கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

    1. மெட்ஃபோர்மினின்: இது இரத்ததில் இருக்கும் க்ளுகோஸ் அளவை குறைக்க உதுவ்ம். மேலும் உடல் இன்சுலினை ஏற்று செயல்பட உதவும்.
    2. சல்போனைல்யூரியாக்களைக்: இந்த மருந்து உடலில் அதிக அளவு இன்சுலனை சுரக்க உதவும்.
    3. மேக்ளிடினைட்ஸ்: இது விரைவாக செயல்பட்டு, குறிகிய காலத்திற்குள் கணையம் அதிக அளவு இன்சுலினை சுரக்க சியும்.
    4. தைசோலிடினேடியோன்கள்: இது உங்கள் உடல் இன்சுலினுக்கு செயல்படும் வகையில் உணர்வை பெற உதவும்.
    5. (GLP-1) ஏற்பி அகோனிஸ்டுகள்: இது ஜீரணத்தை தாமதப்படுத்தி, இரத்தத்தில் இருக்கும் க்ளுகோசின் அளவை அதிகரிக்க உதவும்.
    6. (SGLT2) தடுப்பான்கள்: இது சிறுநீரகம் மீண்டும் க்ளுகோஸ் இரத்தத்தில் உரிந்து கொள்வதை தடுத்து சிறுநீரில் கலந்து விடும். அதனால், உடலில் இருந்து தேவையற்ற க்ளுகோல் வெளியேறி விடும்
    7. டிபிபி -4 தடுப்பான்கள்: இது டைப் 2 நீரழிவு நோயை குணப்படுத்த உதவும்.
    8. இன்சுலினி: இதனை தினமும் எடுத்துக் கொள்வதால், அன்றாடும் உடலில் ஏற்படும் சர்க்கரையின் ஏற்ற இறக்கம், சீற்படுத்தப்படுகின்றது

நீரழிவு நோயை குணப்படுத்த வீட்டு சிகிச்சைகள்(Powerful natural Home Remedies for Diabetes)

நீரழிவு நோயை குணப்படுத்த பல சிறப்பான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து செய்து வரும் போது நாளடைவில், நீரழிவு நோய் குறைவதையும், குனமடைவதையும் நீங்கள் காணலாம். மேலும் இந்த வீட்டு சிகிச்சை எந்த பக்க விளைவுகளையும் உண்டாக்காது. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்;

ADVERTISEMENT

1. பாவக்காய்

பாவக்காயுக்கு இரத்தத்தில் இருக்கும் க்ளுகோஸ்சின் அளவை கட்டுபடுத்தும் பண்புகள் உள்ளது. இது கணையத்தில் இன்சுலின் அதிகம் சுரக்க உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாவக்காய் சாறு எடுத்து நீரில் கலந்து அருந்தி வந்தால், சில நாட்களிலேயே நல்ல பலனை எதிர் பார்க்கலாம்.

2. இலவங்க பட்டை

Shutterstock

இது இன்சுலினின் உற்பத்தியை அதிகரித்து, சீராக அதன் வேலையை உடலில் செய்ய ஊக்கவிக்கும். மேலும் இதில் இருக்கும் சத்துக்களும், உடல் நலனுக்கு சிறந்தது. இலவங்க பட்டையை பொடி செய்து தினமும் காலையில், சுடு தண்ணீரில் கலந்து அருந்தலாம். அல்லது தேநீர் போல செய்து அருந்தலாம்.

ADVERTISEMENT

3. வெந்தயம்

வெந்தயம் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். மேலும் இது க்ளுகோஸ்சின் அளவை சீராக வைத்திருக்க உதவும். இதில் அதிக நார் சத்தும் உள்ளது. மேலும் ஜீரணத்தை அதிகரிக்கும். இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில், அந்த நீரை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

4. மலை நெல்லிக்காய்

இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. நீரழிவு நோயை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை நெல்லிக்காய் சாறு செய்து அருந்தி வந்தால், நல்ல பலனை காணலாம். அல்லது தினமும் காலையில் வெறும் வயிற்றில், நெல்லிக்காய் பொடியை ஒரு கப் சுடு தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம்.

5. கருப்பு ப்லக்க்பெர்ரி

இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். மேலும் இதில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. இதன் விதிகளை நன்கு காய வைத்து, பொடி செய்து, தினமும் ஒரு கப் சுடு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

6. கற்றாழை

ADVERTISEMENT

Shutterstock

டைப் 2 நீரழிவு நோயை குணப்படுத்த இது ஒரு சிறந்த மருந்து. இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். தினமும் கற்றாழையை சாறு செய்து அருந்தி வந்தால், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பு குறைந்து, சர்க்கரையின் ஆளவும் சீராகும்.

7. கொய்யா

இதில் வைட்டமின் சி, மற்றும் நார் சத்து நிறைந்துள்ளத். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். மேலும் வளர்சிதை பரிணாமத்தை சீர் செய்யும். அணுக்கள் உணவில் இருக்கும் சர்க்கரையை சரியான அளவு எடுத்துக் கொள்ள உதவும். தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டு வந்தால், நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

8. துளசி

இதில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. மேலும் தேவையான எண்ணை அதிக அளவு இதில் உள்ளது. இது இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். தினமும் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிடலாம், அல்லது தேநீர் போல செய்து சாப்பிடலாம்.

ADVERTISEMENT

9. ஆளி விதை

இது உடலில் அதிக அளவு இருக்கும் இன்சுலின் அளவை விரைவாக குறைத்து சீரான அளவு வைத்துக் கொள்ள உதவும். இதில் நார் சத்து அதிகம் உள்ளது. இது கொழுப்பு மற்றும் சர்க்கரை சீரான அளவு உடலில் இருக்க உதவும். தினமும் ஆளிவிதை பொடியை வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால், நல்ல பலனை எதிர் பார்க்கலாம்.

10. வேப்பில்லை

Shutterstock

இது நீரழிவு நோய்க்கு ஏற்ற ஒரு மருந்தாகும். இதில் மேலும் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. தினமும் வேப்பில்லை சாறு அருந்தி வந்தால், இன்சுலின் அளவு சீராவதோடு, விரைவாகவும் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT

11. தண்ணீர்

ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீரை அருந்த வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடு விதிக்காமல், உங்களுக்கு எப்போதெல்லாம் தண்ணீர் தாகம் எடுக்கின்றதோ, அப்போதெல்லாம் தவறாமல் போதிய தண்ணீரை குடித்து விடுங்கள். எனினும், ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரையாவது அருந்தி இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும். நீரழிவு நோயினால் ஏற்படும் உபாதைகள் குணமாகும்.

12. சூரிய ஒளி

பலரும் இன்று சூரிய ஒளியை மருந்து விட்டனர். குளிர் சாதா பெட்டி இருக்கும் அறைக்குள்ளேயே உங்களை அடக்கி விடாதீர்கள். சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களில் உடலுக்குத் தேவையான சில முக்கிய சத்துக்கள் உள்ளது. குறிப்பாக வைட்டமின் டி சத்து. இந்த சத்தத்துக்கள் இருந்தால் மட்டுமே, உடலில் உணவில் இருந்து பெரும் பிற சத்துக்கள் சாரும். அப்படி ஒரு சீரான உணவு ஜீரணிக்கும் முறை ஏற்பட்டால், சர்க்கரையின் அளவும், இன்சுலினின் அளவும் சீராக இருக்கும்.

13. முருங்கைக் கீரை

வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது முருங்கைக் கீரை சாறு செய்து அருந்த வேண்டும். அப்படி இல்லைஎன்றால், முருங்கைக் கீரையை சமையலில் சேர்க்க வேண்டும். இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் இன்சுலின் அளவை சீர் செய்து, நீரழிவு நோயை குணப்படுத்த உதவும்.

14. மாவிலை

ADVERTISEMENT

Shutterstock

அனைவருக்கும் மாங்காயை பற்றி தெரியும். ஆனால் பலருக்கும் மாவிலையின் மருத்துவ குணங்கள் தெரிந்திருக்காது. தினமும் ஒரு சிறிய மாவிலையை சாரு செய்தோ அல்லது தேநீர் போல செய்தோ அருந்தி வந்தால், நீரழிவு நோயில் இருந்து விரைவாக விடுபடலாம்.

நீரழிவு நோயை மாற்ற சில குறிப்புகள்(Tips to reverse diabetes)

  • அனைத்து சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளையும் தவிர்க்கவும்.
  • செயற்கை ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
  • சர்க்கரை கலந்த அனைத்து பானங்கள் மற்றும் இனிப்பு பலகாரங்களை தவிர்க்க வேண்டும்
  • ஆரோக்கியமான மற்றும் தரமான இயற்கையாக விளையும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உணவால் உடல் எடை அதிகரித்து விடும் என்ற ஐயம் தேவை இல்லை
  • உங்கள் உணவில் இருக்கும் கலோரிகள் மீது கவனம் வைக்காதீர்கள். மாறாக உங்கள் பசிக்கு தேவையான உணவை உண்ணுங்கள்
  • உணவை நன்கு மென்று, உமிழ் நீரோடு கலந்து விழுங்குங்கள். இது இன்சுலின் சுரப்பதை சீராக வைக்க உதவும்
  • வயிற்ருக்கு தேவையான உணவை மட்டும் உண்ணுங்கள். வாய் ருசிக்காக அதிகம் உண்ணாதீர்கள்
  • விருப்பமான உணவை உண்ணுங்கள். ஆனால் அதன் அளவு மீது கவனம் வையுங்கள்
  • கடைகளில் கிடைக்கும் நொறுக்கு தீனிகளை தவிர்ப்பது நல்லது. அப்படி உங்களுக்கு சாப்பிட ஆசையாக இருந்தால், வீட்டிலேயே எளிதாக பலகாரம் செய்து உண்ணலாம்
  • வயிற்றுக்கு போதும் என்று தோன்றி விட்டால், கட்டாயப்படுத்தி உணவை திணிக்காதீர்கள்
  • ஒரே சமயத்தில் அதிக அளவிலான உணவை உண்பதை விட, அதனை பிரித்து மூன்று அல்லது நான்கு முறை சிறிய அளவில் எடுத்துக் கொள்ளலாம்
  • பசி எடுத்தால் உணவை தள்ளிப்போடாமல், உடனடியாக ஏதாவது சாப்பிடுங்கள்

ADVERTISEMENT

இயற்கை முறையில் நீரழிவு நோயை கட்டுப்படுத்த(diabetes on control naturally)

நீரிழிவு நோய் என்பது கட்டுப்படுத்த முடியாத வியாதி கிடையாது. ஆனால் இதை கவனிக்காமல் முத்தவிட்டால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடலாம். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் விரைவில் குணப்படுத்தால். இயற்கையாக இந்த நோயை எப்படி குணப்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

1. நார் சத்து நிறைந்த உணவு

Shutterstock

தினமும் உங்கள் உணவில் ஏதாவது ஒரு வகையில் நார் சத்து நிறைந்த காய் அல்லது பழம் இருக்க வேண்டும். இது உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுவதோடு, சர்க்கரையின் அளவையும் சீர் செய்ய உதவும்.

ADVERTISEMENT

2. வீட்டில் மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்

இதற்கு ஒரு சரியான முறை, வாரம் தோறும் எடுக்கும் எண்ணை குளியல். வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குறிப்பாக சிறிது நேரமாவது எண்ணை தேய்த்த பின் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். இப்படி செய்தால், கணையம் மற்றும் பிற உள்ளுறுப்புகள் சீராக செயல்பட சக்தி பெரும்.

3. உடல் எடையை குறைக்க வேண்டும்

உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்க உடல் எடையும் ஒரு முக்கிய காரணம். முடிந்த வரை உடல் எடையை குறைத்து சீரான அளவு வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்

4. பெர்பெரினை முயற்சி செய்யவும்

இது நீரழிவு நோயை குணப்படுத்த பல ஆயிரம் ஆண்டு காலமாக மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இன்று ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இது கார்போஹைட்றேட்ஸ்கலை சக்தியாக மாற்ற உதவும்.

5. ஆப்பிள் சிடர் வினிகர்

ADVERTISEMENT

Shutterstock

இது சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக காலை வேளையிலும், விரதம் இருக்கும் நேரங்களிலும், சர்க்கரை சீரான ஆளவு உடலில் இருக்க உதவும். தினமும் ஏதாவது ஒரு வகையில் இந்த வினிகரை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

6. நல்ல தூக்கம்

நீரழிவு நோய்க்கு ஒரு நல்ல தீர்வு நல்ல தூக்கம். போதிய தூக்கம் இருந்தால், மன அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் உபாதைகள் குறையும். மேலும் இது கணையம் சீரான அளவு இன்சுலினை சுரக்கவும் தூக்கம் உதவும்.

7. சர்க்கரையின் அளவை கண்காணிக்கவும்

மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று எளிய முறையில் உங்கள் சர்க்கரையின் அளவை கண்காணிக்க வேண்டும். இது உங்களது தற்போதைய நிலையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு சிகிச்சை எடுத்துக் கொள்ள உதவும்.  

ADVERTISEMENT

8. மன அழுத்தத்தை குறைக்கவும்

மன அழுத்தம் ஏற்படாமல், மனதை எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இப்படி செய்வதால், உங்கள் மனமும், உடலும் ஒரே நேர்கோட்டில் சிறப்பாக செயல்பட்டு உடலில் இருக்கும் உபாதைகளை சீர் செய்ய உதவும். இதனால் நீரழிவு நோயும் கட்டுபாட்டிற்குள் வரும்.

9. குறைந்த கிளைசெமிக் குறியீடு இருக்கும் உணவை தேர்வு செய்து உண்ணவும்

Shutterstock

இது குறிப்பாக கடல் உணவு, இறைச்சி, முட்டை, ஓட்ஸ், பார்லி, பீன்ஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு, சோளம், மற்றும் காய் மற்றும் கனி வகைகளை குறிக்கும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து நல்ல பலனைப் பெற உதவும்.

ADVERTISEMENT

10. உணவில் பகுதி கட்டுபாட்டை பின்பற்றவும்

உங்கள் உணவில் இருக்கும் கலோரிகளை பிரித்து அவ்வப்போது உடலுக்குத் தேவைப்படும் போதெல்லாம் எடுத்துக் கொள்ளும் வகையில் உங்கள் உணவை பிரித்து, குறிப்பிட்ட நேர இடைவேளைக்கு ஒரு முறை உண்ண வேண்டும். இது இன்சுலின் சுரக்கும் அளவை சீர்படுத்த உதவும்.

11. கார்போஹைட்ரெட் நிறைந்த உணவை குறைத்துக் கொள்ளவும்

காபோஹைட்ரெட் நிறைந்த உணவு சர்க்கரையின் அளவை அதிகரித்து விடக் கூடும். அதனால் அத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது.

12. வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வரவும்

 இன்று பலரும் இரவு நேரத்தில் அலுவலகம் செல்வது, பகல் நேரத்தில் தூங்குவது என்றும், மேலும் சரியான நேரத்தில் சரியான உணவு உண்ணாமலும் ஒரு மாறுபட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதை முற்றிலுமாக தவிர்க்க முடியவில்லை என்றாலும், முடிந்த வரை ஓரு சில நல்ல மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவது முக்கியம்.

ADVERTISEMENT

சர்க்கரையை கட்டுபடுத்த மற்றும் வராமல் தடுக்க குறிப்புகள்(Additional Tips to prevent and control Diabetes)

Shutterstock

  • கொரோமியம் மற்றும் மக்னேசியம் நிறைந்துள்ள உணவை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இது இரத்தத்தில் அதிக அளவு இருக்கும் சர்க்கரையை குறைக்க உதவும்
  • யோகா, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் செய்வது விரைவான பலனை பெற உதவும்
  • தாவர உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது
  • அக்குபஞ்சர் முறை சிகிச்சையை பயன்படுத்தலாம்
  • பாலில் மஞ்சள் தூள் கலந்து அருந்த முயற்சி செய்யுங்கள். நல்ல பலனைத் தரும்
  • தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
  • உடலுக்கு எப்போதும் வேலை கொடுங்கள்
  • மதுபானம் மற்றும் புகையிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

கேள்வி பதில்கள் (FAQs)

1. வீட்டிலேயே எப்படி சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது?

இதற்கு உங்கள் உணவு முறையை மாற்றி, உடலுக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுத்துக் கொண்டே இருங்கள். மேலும் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் சில வீட்டு வைத்தியனகளை பின்பற்றுங்கள்

ADVERTISEMENT

2. நீரழிவு நோய்க்கு ஏற்ற சிகிச்சை எது?

சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை படி மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதனோடு சேர்ந்து உங்கள் உணவில் கட்டுப்பாடு, வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் என்று சில விடயங்களையும் செய்ய வேண்டும்.

3. மருந்து இல்லாமல் எப்படி நீரழிவு நோயை குணப்படுத்தலாம்?

இதற்கு அக்குபஞ்சர் ஒரு நல்ல தீர்வு. எனினும், உங்கள் உணவில் சில மாற்ற்னகள், உடற் பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி மற்றும் போதிய நீர் அருந்துவது போன்றவை உங்களுக்கு நல்ல தீர்வை தரக் கூடும்.

4. நீரழிவு நோயை குணப்படுத்தும் தாவரங்கள் என்ன?

துளசி, முருங்கை கீரை, கரிசிலாங்கண்ணி, வெந்தயக் கீரை, புதினா, வேப்பில்லை, மற்றும் அகத்தி கீரை போன்ற தாவரங்கள் நீரழிவு நோயை போக்க உதவும்.

5. வாழைப்பழம் நீரழிவு நோய்க்கு நல்லதா?

நீரழிவு நோய் இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடலாம். எனினும், நன்கு முற்றிலும் பழுத்த பழத்தை தவிர்த்து விட்டு, சற்று காயாக இருக்கும் பழத்தை சாப்பிடுவது நல்லது. நன்கு பழுத்த பழத்தில் இனிப்பு / சர்க்கரை அதிகமாக இருக்கும்.

ADVERTISEMENT

6. மஞ்சள் நீரழிவு நோய்க்கு நல்லதா?

நிச்சயம் நல்லது. மஞ்சளில் அதிக ஆக்சிஜனேற்றம் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நீரழிவு நோயை கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க உதவும்.

7. டைப் 2 நீரழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

முடியும். சரியான உணவு பழக்கம், உண்ணும் முறை மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடித்தால், நீரழிவு நோயை மருந்துகள் இல்லாமலேயே முற்றிலும் குணப்படுத்தி விட முடியும்.

8. எப்படி நீரழிவு நோயை எதிர்த்து போராடுவது?

இதற்கு நீங்கள் போராட வேண்டிய தேவை இல்லை. மாறாக உங்கள் மனதில் நம்பிக்கையோடு சில விடயங்களை உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்தாலே போதும், இந்த நோய் நாளடைவில் குணமாகிவிடும்.

9. நீரழிவு நோய்க்கு சிறந்த உணவு எது?

எந்த கட்டுப்பாடும் உணவின் வகையில் இதற்கு இல்லை. எனினும், நன்கு வேக வைத்து சமைத்த உணவு, மற்றும் நார் சத்து நிறைந்த காய் வகைகள், மற்றும் நன்னீர் மீன் சிறந்த உணவாகும்.

ADVERTISEMENT

10. தேன் நீரழிவு நோய்க்கு தீங்காகுமா?

தேன் ஒரு நல்ல மருந்து. இதில் நாம் பயப்படும் வகையில் எந்த செயற்கை சர்க்கரையும் இருக்காது. எனினும், நீங்கள் தரமான மற்றும் உண்மையான தேனை கண்டறிந்து வாங்க வேண்டும். தினமும் மஞ்சள் தூளுடன் தேனை சுடு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

மேலும் படிக்க – கிவி பழத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்களும்

பட ஆதாரம்  – Shutterstock 

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

19 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT