logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
சுதந்திர தின வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள்! (Independence Day Quotes In Tamil)

சுதந்திர தின வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள்! (Independence Day Quotes In Tamil)

சுதந்திர தினம்(independence day) வந்துவிட்டாலே, நம் நாடு முழுவதும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து இடங்களிலும் நடைபெறும். பள்ளி சிறுவர்கள் முதல் மூத்தவர்கள் வரை ஒன்று கூடி, பிற பண்டிகைகளை கொண்டாடுவது போல, நாட்டு பற்றுடன் இந்த இந்திய சுதந்திர தினத்தை நம் தேசிய கொடியை ஏற்றி, இனிப்புகளை பகிர்ந்து கொண்டாடுவார்கள். ஏறத்தாள முன்னூறு ஆண்டுகள் வெள்ளையனிடம் போராடி, நம் சுதந்திரத்தை மீண்டும் பெற்றதில், இந்த ஆகஸ்ட்15 ஒரு குரிப்புடத்தக்க இடத்தை பெற்றுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கரம்ச்சன் காந்தி, போன்றவர்கள் மட்டும் அல்லாது கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனார், சுபிரமனிய சிவா, வீரன் வாஞ்சிநாதன் போன்றவர்களும் நம் நாட்டு சுதந்திரதிர்க்காக போராடியுள்ளனர். 
இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் உங்கள் வாழ்த்துக்களை பகிர, இங்கே சில கவிதைகளும், பொன்மொழிகளும் உங்களுக்காக

சுதந்திர தின வாழ்த்துக்கள் (Independence Day Quotes In Tamil)

1. நீ சுவாசிக்க நேசிக்க வாசிக்க
உனக்கென ஒரு நாடு!
விடுதலை கொண்டாடு!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

2. சுதந்திர வேள்வித் தீயில் ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில் குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில் பிறந்தது பாரத கொடி
அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி!
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

3. அமைதி ததும்பும், அன்பு அணைக்கும்
அறிவு அதிகமும், ஆனந்தம் பொங்கும்
ஆச்சரியம் நிலவும், ஆற்றல் விருந்தும்
ஆன்மிகம் நிறைந்தும், உள்ள உள் மடியில்
எண்ணை தவழ அனுமதிதற்கு….
சுதந்திர தினம் நல் வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

4. பல வண்ணங்கள், வடிவங்கள் உணர்வுகள், மொழிகள்
ஆகியவை உள்ளன
எனினும், அனைத்து இந்தியர்கள் ஒன்று!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

5. நடத்திய போராட்டங்கள் பசிக்கவே இல்லை
வாங்கிய தடி அடிகள் வலிக்கவே இல்லை
சிந்திய ரத்தத்தை உணரவே இல்லை
இழந்த வீரர்களை மறக்கவும் இல்லை
சுதந்திரம் கிடைத்த இந்த தருணத்தில்
இனிய சுத்திர தின வாழ்த்துக்கள்!

6. வாய்மையையும், அகிம்சையையும், அரவளியையும் போற்றும் நம் தேசம் இது!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

7. ஒரே நாடு… ஒரே பார்வை…
ஒரே அடையாளம்… ஒரே கொடி…
நமது இந்தியா…
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

8. எந்த துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும்.
சாதனையாளரும் இந்த வார்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்:
“வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிக பெரிய அனுகூலதிர்கான விதை ஒளிந்திருக்கிறது”
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

9. காற்றில் புதிய வாசனை நுகர்ந்தேன்
என் தாய் மண் சற்று நனைந்ததை உணர்ந்தேன்
விடுதலை மலர்கள் அரும்புவதை அறிந்தேன்
சுதந்திர மோகம் நம்மை சூழ்ந்ததை கண்டேன்
புன்னகை மலையில் நானும் நனைந்தேன்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

10. லட்சக்கணக்கான மூச்சு நின்று போன பின் தான் சுவாசிக்கிறோம்…
இன்று இந்த சுதந்திர காற்றை….
பேணிக்காப்போம்
நாம் பெற்ற சுதந்திரத்தை….
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Read About மகளின் நாள் வாழ்த்துக்கள்

ADVERTISEMENT

pixabay

சுதந்திர தின வாழ்த்துக்கள் குறுஞ்செய்தி (Independence Day Messages)

1. ஏராளமான உயிர் மூச்சுகளை தியாகம் செய்து
வாங்கப்பட்ட ஒரு ஜீவா மூச்சுகாற்றே
நம் சுதந்திரம்!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

2. ஏக்கத்திலும், தூக்கத்திலும் விழித்ததல்ல எங்கள் சுதந்திரம்..
கவி ஏற்றத்திலும், கனவு மாற்றத்திலும் விடிந்தது எங்கள் சுதந்திரம்!

ADVERTISEMENT

3. பாரி விண்ணில் பறந்து ஆடும் கொடியின் அழகை பாரத நாட்டினிலே போற்றி மகிழ்ந்திட
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

4. மனதில் விடுதலை வார்த்தைகளில் நம்பிக்கை
உள்ளத்தில் பெருமை போங்க முழங்குவோம்
வந்தே மாதரம்!

5. மந்திரத்தாலும், தந்திரத்தாலும் பெற்றதல்ல எங்கள் சுதந்திரம்:
உதிரத்தாலும், உயிர் தியாகத்தாலும் கிடைத்தது எங்கள் சுதந்திரம்!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

6. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நாணி சிறந்தனவே!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

7. மனதில் விடுதலை வார்த்திகளில் நம்பிக்கை
உள்ளத்தில் பெருமை போங்க
முழங்குவோம்!
வந்தே மாதரம்!

8. உத்திரங்களை உரமாக்கி
உதித்த சுதந்திரம் – நம் சுதந்திரம்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

9. புது நாளில் உதயமாகும் கீதம் கேட்டு தென்றலில்
வீரமாய் பறக்றது தேசிய கொடி
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

10. மனதில் விடுதலை வார்த்தைகளில் நம்பிக்கை உள்ளத்தில் பெருமை வோங்க முழங்குவோம், வந்தே மாதரம்!

ADVERTISEMENT

Also Read About வாழ்க்கைக்கு உத்வேகம் தரும் மேற்கோள்கள்

தேசபற்று பொன்மொழிகள் (Patriotic Quotes For Independence Day)

1. காந்தியடிகள் சொன்ன மந்திரம் கருணையுள்ள
அகிம்சை மந்திரம்
தேசமெல்லாம் போற்றும் மந்திரம்
தேச மக்களையே இயக்கம் எந்திரம்
எத்தனை பேர் இரத்தம் சிந்தி வந்த சுதந்திரம்
எத்தனையோ தியாகம் செய்து பெற்ற சுதந்திரம்
ஏழைகளும் கோழைகளாய் ஆகிடாமலே என்றும்
ஏற்றம் பெற எல்லோருக்கும் கிடைத்த சுதந்திரம்!

2. கயிறுகள் அனுந்து நிறங்கள் திறந்து மலர்கள் சிந்தி அலை போல்
அசைந்து கம்பீரமாய் பறக்கும்
நம் தேசிய கொடி போல்
இன்றும் என்றும் நம் வாழ்வில் புன்னகை சிரகடிக்கட்டும்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

3. வீண் போகவில்லை போராட்டங்கள்
சிந்திய ரத்தமும் போர்க்கள புழுதியும்
எடுத்த திலகமாய் இட்டுக்கொள்ள பெறப்பட்டது
சுதந்திரம்
வென்றது இந்திய தேசிய ஒற்றுமை
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

ADVERTISEMENT

4. நம் நாட்டுப்பற்றுக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான்
சுதந்திரம்….பேணிக் காப்போம்!!!

5. பட்டொளி வீசும் பாரதக் கொடி ஏறட்டும்
பாரத மாந்தர்கள் மகிழட்டும்
நெஞ்சினில் இனிப்பு திகட்டட்டும்
சித்திய தர்மம் நிலைக்கட்டும்
சமாதானம் நிலவட்டும்
பாரத தேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்
சுதந்திர தேசத்துக்காய் இன்னுயிரை தாகம் செய்தோருக்கு வீர வணக்கம்!

6. மனதில் விடுதலை வார்த்தைகளில் நம்பிக்கை
உள்ளத்தில் பெருமை போங்க
முழங்குவோம், வந்தே மாதரம்!

7. சாஸ்திரமும் இல்லை
சாதி மத வேறுபாடும் இல்லை
எந்த எல்லைகோடும் இல்லை
ஒன்றாக இந்தியனாய் கொண்டாட ஒரு நாள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

8. பெற்றது சுதந்திரமா அல்லது தொலைத்த நம் உரிமையா?
எதுவாக இருந்தாலும், பெற்றதை பேணிக் காப்போம்
சுதந்திர நல வாழ்த்துக்கள்!

9. ஆகஸ்ட் 15 மட்டுமா நாம் நினைவில் கொள்ள வேண்டிய நாள்?
இல்லை நமக்காக இரத்தம் சிந்தி நம்மை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த வீரர்களை போற்ற, நமக்கு ஒவ்வொரு நாளும்
சுதந்திர தினமே!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

10. ஏன் இன்று நமக்கு மிட்டாய் கொடுகின்றார்கள் என்ற கேள்விகளோடு
மார்பில் தேசியக் கொடியை குத்திக்கொண்டு நிற்கும் நம் வரும்கால
நம்பிக்கைகளுக்கு புரிய வைப்போம்
சுதந்திர தினம் என்றால் என்னவென்று!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Also Read About வேலைக்கான உந்துதல் மேற்கோள்கள்

ADVERTISEMENT

pixabay

சுதந்திர தின வாட்ஸ்ஆப், முக நூல் (Status for Whatsapp And Facebook)

1. எவ்வளவு பொன்னும் பொருளும் கொடுத்தாலும்
என் தாய் நாட்டிற்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை
வாழ்க என் தாய் நாடு!

2. என் தாயின் கருவறையில் இருந்து சுதந்திரம் அடைந்த மறு நொடியில் என் மண்ணின் சுதந்திர காற்றை சுவசிகின்றேன்
இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த என் மண்ணின் தலைவர்களுக்கு என் நன்றி!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

3. தம் உதிரம் சிந்த இம்மண்ணிற்கு சுதந்திரம் மட்டும் வாங்கி தரவில்லை
இம்மண்ணில் சுதந்திரத்தை விதைத்து சென்ற என் தலைவர்களின் பெருமையை நாம் தலை நிமிர்ந்து போற்றுவோம்
ஜெயஹிந்த்!

4. மாயத்திலும், துளி நிமிடத்திலும்
அடைந்ததல்ல எங்கள் சுதந்திரம்
காயத்திலும், கடல் போரிலும்
கண்டது எங்கள் சுதந்திரம்

5. என் அன்னை சுவாசித்தால் சுதந்திரக் காற்றை – ஆதலால்
கருவறையில் சுவாசித்துக் கொண்டேன்
நானும் சுதந்திரக் காற்றை!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

6. தேசிய கொடியில் சில நிறமுண்டு
நிறத்தினில் சில காரணம் உண்டு
காரணத்தில் சில குருதி உண்டு
குருதியில் ஒரு வரலாறு உண்டு!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

7. வீதியெங்கும் சுதந்திரக் காற்று
வானெங்கும் சுதந்திர மேகங்கள்
இதழில் சுதந்திர வார்த்தைகள்
எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம்!

8. நிசப்தம் வேண்டாம்
சுதந்திர வீரர்களின் கல்லறை முன்னே
உரக்கச் சொல்லலாம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

9. அடைக்கலம் எங்கும் இல்லை
அடிமைகளால் எங்கும் இல்லை
அடிமைகளால் வாழ்ந்தவர்கள்
அறுத்துவிட்ட சங்கிலியால்!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

10. மறைமுக சிறகுகள் கொண்டு
கம்பீரமாய் பறக்றது தேசிய கொடி
சிறகு படைத்த பிரம்மாக்கள்
சுதந்திர போராட்ட வீரர்கள்!

ADVERTISEMENT

Also Read About வேடிக்கையான செல்ஃபி தலைப்புகள்

பிரபலங்களின் பொன்மொழிகள் (Patriotic Quotes By Famous Personalities)

1. வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ,
வருந்தலையென் கேண்மைக் கோவே
தாளாண்மை சிறிது கொலோ யாம்புரிவேம்?
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி – வ.உ.சிதம்பரம் பிள்ளை

2. “அஞ்சாமை கல்வி அடக்கம் கருணை
எஞ்சாமல் நிரம்பிய் என் வள்ளிநாயகம்
இலகுநம் தேயம் இன்புற வுழைக்குந்
திலகன், அரவிந்தன், கப்பர்டே, மூஞ்சி,
சீனிவாசன், பாரதி செப்பரும் பிறசிலர்
நானிவண் உணர்ச்சியால் நட்ட நண்பினர்” – வ.உ.சிதம்பரம் பிள்ளை

3. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
பூமியில் இனி எவர்க்கும் அடிமை செய்யோம் – பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் –(பாரதி)

ADVERTISEMENT

4. வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம் 
வெற்றி கூறுமின்! வெண் சங்கூதுமின்
கற்றவராலே உலகு காப்புற்றது
பாரிலுள்ள பல நாட்டினர்க்கும்
பாரத நாடு புது நெறி பழக்கல்
உற்றதிங்கிந்நாள், உலகெலாம் புகழ (பாரதியார்)

5. தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து
பணிந்து புகழ்ந்திட வாரீர்!
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
உச்சியின் மேல் ‘வந்தேமாதரம்’ என்றே
பாங்கின் எழுதித் திகழும் – செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
இந்திரன் வச்சிரம் ஓர் பால் – அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் – அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?
தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து
பணிந்து புகழ்ந்திட வாரீர்! – பாரதியார்

6. இந்திய தேசத்தின் உயர்வுக்காக நாம்
இறுதி மூச்சையும் கொடுத்திடுவோம்!
இன்னல்கள் இன்றிய இந்திய தேசத்தை
இமயமாக நின்று காத்திடுவோம்!
அண்ணல்களின் சாந்தியை
அரணாகப் பேணுவோம்!
சண்டைகள் இன்றிய
சத்திய நாட்டை ஆக்குவோம்!
உயிருள்ள சுதந்திர நாட்டில்
உறவாடும் மாக்களையெல்லாம்
ஒன்றாகக் களையெடுப்போம்! –சிந்தனை க.கா.செ

7. உதிரமும் உயிரும் மண்ணில் விதைத்து
சுதந்திரம் அடைந்தோமே …
மணிக்கொடி அதனை சுதந்திர காற்றில்
பறக்க விட்டோமே ..
தலைவர் யாவரும் பொது நலன் கருதி
மீட்டு எடுத்தது…. சுதந்திரம் ..சுதந்திரம்..
தியாகங்களை நாட்டுக்காக
நினைவு கூறவே இக்கணம் …இக்கணம்..
விடுதலை தாகம் விஞ்சி நின்றதால்
வெள்ளையன் ஆட்சி அகன்றது ..
அடிமை கோலம் அறுத்து எறிய
குருதியும் ஆறாய் ஓடியது ..
கொடுங்கோல் ஆட்சியால் அன்னையர் மண்ணிலே
அடிமை ஆக்கி வாட்டினர்
வாழ்க இந்தியா என்று சொன்னாலும்
சிறையில் தூக்கி போட்டனர்
சுதந்திர காற்றை சுவாச காற்றாய் விரும்பிய
நம் முன்னோர்கள்
அடித்து உதைத்து உதிரம் குடித்த
ஆங்கிலேயர்
முப்பது கோடி மக்களிருந்தும்
ஆட்சி இல்லையே நம்மிடம்
ஆயுதம் கொண்டு அடக்கி ஆண்ட
சதி கார அந்நியர்
துயரம் பலவும் தாங்கி நின்ற
தியாக தீபங்களே..
இனிமை சுதந்திரம் நமக்கு கிடைக்க
உருகிய சொந்தங்களே… – வீ ஆர் கே

ADVERTISEMENT

8. முழுசுதந்திரமே எங்கள் உயிர்மூச்சு
மூவர்ண கொடி காண
முன்னூற்றைம்பது ஆண்டுகள் அடிமைகளாக..
எத்தனை உயிர்கள் கொடுத்திருப்போம்
எத்தனை உணர்வுகள் இழந்திருப்போம்
சில விதைகள் பலிகளாக
பல விதைகள் வலிகளாக!!…
உடல் மண்ணிலே வீழ்ந்தாலும்
கொடியினை மார்பிலே சுமந்தோமடா!!
ஜாலியனில் சுட்ட சூடுகளை
நெஞ்சில் மெடல்களாக ஏந்தினோமடா!!
உரிமைக்குரலுக்காக கொடுத்த சிறைவாசத்தை
சொர்க்க தேசமாக பெற்றோமடா!!
பாதயாத்திரைகள் பல செய்தோம்
நித்திரைகள் பல இழந்தோம்
உன் முகத்திரையெ கிழிப்பதற்கே!!
சட்டங்களை எதிர்த்தும்
பட்டங்களை துறந்தும்-உன்
கொட்டங்களை அடக்கினோமடா…
போட்டிக்கு அடிபணியாத ஆங்கிலேயன்
பாரதியின் பாட்டுக்கு அடிபணிந்தானே…
இம்சைக்கு இனங்காத இனவெறியன்
காந்தியின் அஹிம்சைக்கு அடிபணிந்தானே…
பஞ்சம் பிழைக்கவந்த பரங்கியனே
இனி உன்படம் இங்கு ஓடாது
ஓட்டமெடு உன் தேசத்திற்கு..
வெள்ளையனே உன்சாயம் வெளுத்துப்போச்சு
அவனுக்கு எதிராக உப்பினைக்காச்சு
இனி உனக்கில்லை மரியாதைப்பேச்சு
முழுசுதந்திரமே எங்கள் உயிர்மூச்சு
உயிர்மூச்சு உயிர்மூச்சு உயிர்மூச்சு…- பி இராஜலிங்கம்

 

shutterstock

ADVERTISEMENT

வீரர்களின் கூற்றுகள் (Quotes By Freedom Fighters )

1 “இன்க்விலாப் ஜிந்தாபாத்.” – பகத்சிங்
2 “தும் முஜே கூன் டூ, மெயின் டும்ஹே ஆசாதி தூங்கா.” – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
3 “அபி ஜிஸ்கா கூன் நா க ula லா..வொ கூன் நஹி வோ பானி ஹை; ஜோ தேஷ் கே காம் நா ஆயே … வோ பெக்கார் ஜவானி ஹை.” – சந்திரசேகர் ஆசாத்
4 “ஜெய் ஜவான், ஜெய் கிசான்.” – லால் பகதூர் சாஸ்திரி
5 “மெயின் அப்னி ஜான்சி நஹின் தூங்கி” – ராணி லக்ஷ்மிபாய்
6 “கரோ யா மரோ (செய் அல்லது இறக்க).” – மகாத்மா காந்தி
7 “ஸ்வராஜ் மேரா ஜனாம்சித் ஆதிகர் ஹை, ur ர் மெயின் ஐசி லேகர் ரஹுங்கா” – பால கங்காதர் திலக்
8 “சர்பரோஷி கி தமன்னா, ஆப் ஹமரே தில் மே ஹை” – ராம்பிரசாத் பிஸ்மில்
9 “அராம் ஹராம் ஹை” – ஜவஹர்லால் நேரு
10 “சத்யமேவ் ஜெயதே” – மதன் மோகன் மால்வியா
11. “நாங்கள் சமாதானத்தை நம்புகின்றோம் மேலும் அமைதியான முன்னேற்றத்தை நம்புகின்றோம் – எங்களுக்கு மட்டும் இல்லை, இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்காகவும்!” – லால் பகதூர் சாஸ்திரி
12. “ஒற்றுமை இல்லாத மனிதசக்தி பலமல்ல. அது சரியாக ஒன்று சேர்ந்தால் மட்டுமே, ஒரு மிகப் பெரிய சக்தியாக மாறும்” – சர்தார் படேல்
13. “ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம், எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும்ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும்” – நேதாஜி

கவிதைகள் (Special Poems For Independence Day)

1. துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.

2. திக்கு கால்
முளைத்து சாதி ஆனதோ
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?
சாதியா நம்
ஒருமைப்பாடு?
மதமா நம்
ஒற்றுமை?
உண்மை தான்
நம் பண்பு..!
உழைப்பு தான்
நம் தெம்பு..!
அன்பு ஒன்று தான்
நம் பிணைப்பு..!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

3. விடியலை நோக்கி
நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.

ADVERTISEMENT

4. சூரியனுக்கு இரவில் சுதந்திரமில்லை
சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை
பளிச்சென்ற பகலிலும் பனிவிழும்
இரவிலும் முப்பொழுதிலும் எப்பொழுதிலும்
இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு !!!

5. ஆங்கிலேயனிடம் அடிமையானது அறியாமையினால்
வளமையை விட்டது புரியாமையினால்
மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல்
இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை
அழைத்து மரியாதை செய்து
வளம் பெருக்கி வானுலகம்
போற்ற வல்லரசாக்கி இந்தியாவை
இமயமெனத் தூக்கி நிறுத்துவோம்
பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம்!!

6. “இன்னொரு சுதந்திரம் வேண்டும்
இரவில் எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்
எவர் வாங்கினார்
ஏதும் தெரியவில்லை.
ஒரு பகற் பொழுதில்
உச்சி வெயிலில் ஒரு சுதந்திரம் வேண்டும்”
இன்னொரு சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?

7. “சுதந்திர சூரியன் தோன்றிவிட்டால் – மக்கள்
தொல்லை அகன்றிடும் என்றுரைத்தோம்
சுதந்திரம் வந்தது கண்டுகொண்டோம் – மக்கள்
தொல்லை அகன்றிடக் காணவில்லை!
ஆளும் உரிமை அடைந்துவிட்டால் – மக்கள்
ஒழிந்திடும் என்றுரைத்தோம்
ஆளும் உரிமை அடைந்தவுடன் – நாமே
ஆதிக்கம் செய்யத் துணிந்துவிட்டோம்!
மாற்றான் பிடிப்பை அறுத்துவிட்டால் – இங்கு
மக்களின் ஆட்சி மலருமென்றோம்
மாற்றான் பிடிப்பு அகன்றபின்னே – ஏழை
மக்களை நாமே மறைந்துவிட்டோம்!”

ADVERTISEMENT

8. அன்று அமாவாசையாய்
இருள் சூழ்ந்து கிடந்த
அடிமைத்தனம் விலகி
பௌர்ணமி பிறந்தது
இன்றைய நாளிலே!
மொழி வேறாயினும்,
இனம் வேறாயினும்
ஒன்றாய் கூடி வாழ்வதும்
இத்திருநாட்டிலே!
ஒற்றுமை கொடியை நாட்டி
உலகமே வியக்க அன்பை ஊட்டி
ஒரே மலேசியராய் வாழ்ந்து காட்டி
ஏட்டினில் எழுதுவோம் என்றும்…
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…

9. 1947 – ஈரைந்து திங்கள் காதிருக்க முடியாமல்…..
(ஆகஸ்ட்) 8 ம் மாதமே பிறந்துவிட்டதால்,
இந்திய தாய் பெற்றெடுத்த விடுதலை குழந்தை
ஊனமுற்றிருக்கிறது.
வாருங்கள் நண்பர்களே !
எல்லோரும் கல்வி பெற ஒளி வீசும் கண்ணாய் விளங்குவோம்.
எல்லோரும் செழிப்புற உழைக்கும் கைகளாவோம்.
குறை பிரசவமாய் பிறந்த நம் இந்திய சுதந்திர குழந்தை……
இனியும் நொண்ட கூடாது !
இன்று முதல் உறுதி கொள்வோம்…….
நமக்கென்ன என்று சாக்கு தேடாமல் !
ஜெய் ஹிந்த் !

10. நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.

 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! 
ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

22 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT