வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று குறைந்தது மூன்று அல்லது நான்கு படங்களாவது ரிலீஸ் ஆகிறது. அவை எல்லாமும் வசூலை வாரிக் குவிப்பதில்லை என்றாலும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எப்போதும் வசூலில் பெரிய இடத்தை வகிக்கின்றன.
இதில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் ஒரே நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் இருந்து வருகிறார்.
2015ஆம் ஆண்டு முதல் வெளிவந்த பாக்ஸ் ஆபிஸ் படங்களின் வசூலை அடிப்படையாக வைத்து இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. டாப் டென் பாக்ஸ் ஆபிஸ் (Top ten Box office )படங்களின் பட்டியல்படி சூப்பர் ஸ்டார் நடித்த படங்கள்தான் தொடர்ந்து முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கிறது.
ஷங்கரின் இயக்கத்தில் வந்த எந்திரன் 2.0 படம் வசூலில் முதலிடம் வகிக்கிறது. 2018 நவம்பரில் வெளியான இந்தப் படம் 653.4 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் வந்த கபாலி படம் வசூலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 2016 ஜூலையில் இப்படம் வெளியானது. டாப் டென் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 304 கோடி வசூலித்துள்ளது.
எந்திரன் 2.0வின் முதல் பாகமான எந்திரன் 283கோடி வசூல் புரிந்து மூன்றாம் இடத்தில் உள்ளது.
அட்லீ இயக்கத்தில் 2017ல் வெளிவந்த மெர்சல் படம் நான்காவது இடத்தில் இருக்கிறது. 248.3கோடி வசூல் செய்திருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தையும் இளைய தளபதி விஜய் தான் ஆக்கிரமித்துள்ளார். 2018 தீபாவளி ரேஸில் கலந்து கொண்ட சர்க்கார் படம் 243.9 கோடி வசூலித்திருக்கிறது.
சங்கர் இயக்கத்தில் வெளிவந்த மற்றொரு படமான ஐ விக்ரம் நடிப்பில் 2015ல் வெளியானது. 227 கோடி வசூலித்து ஆறாவது இடத்தை இப்படம் கைப்பற்றியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் பொங்கல் ரேஸில் கலந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படமும் 223கோடி சாதனை புரிந்து 7வது இடத்தில் உள்ளது.
2019 பொங்கல் ரேஸில் கலந்து கொண்ட மற்றொரு படமான அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து சிவா இயக்கிய விஸ்வாசம் படம் டாப் டென் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் எட்டாவது இடம் வகிக்கிறது. இன்னமும் வசூல் நடந்து வரும் நிலையில் உலக அளவில் இதுவரை 184 கோடி வசூல் செய்து இவ்விடத்தை வகிக்கிறது.
பா. ரஞ்சித் இயக்கிய காலா படம் 158.7 கோடி வசூல் சாதனை புரிந்து 9 வது இடத்தில் உள்ளது.
2016ல் அட்லீ விஜய் கூட்டணியில் வெளியான மற்றொரு சூப்பர் ஹிட் படமான தெறி 150.9 கோடி வசூல் புரிந்து டாப் டென் பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
பெரிய நடிகர்கள் அல்லாமல் 2015ல் வெளிவந்து 600 கோடி வசூல் சாதனை புரிந்த ஒரு படம் என்றால் அது பாகுபலி. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படம் பல மொழி மக்களாலும் பாராட்டப்பட்டது.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்.
மேலும் படிக்க:
டு லெட் திரைப்படம் – தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.