இந்த வருட பிக் பாஸ் சீசனை மக்கள் ஆர்வமாக கவனிக்கின்றனர். இந்தியாவில் உள்ள பிரபலங்கள் மட்டும் அல்லாமல் இலங்கை மலேசியாவில் இருந்தும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
மக்களுடன் அதிக பரிச்சயம் இல்லாத முகேன் மற்றும் தர்ஷன் ஆகிய இருவருமே பிக் பாஸ் வீட்டில் அதிக நாட்கள் நீடித்திருக்க வாய்ப்பில்லை என்கிற நிலையில்தான் உள்ளே வந்தனர். ஆனால் தர்ஷன் கமலின் வார்த்தைகளை பின்பற்றி ஆரம்பத்திலேயே தனக்கான இடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
அபிராமி இருக்கும் வரைக்கும் அதிகம் பேசப்படாத முகேன் (muken) கைவினை பொருள்கள் தயாரிப்பது மற்றும் அபிராமியுடன் பேசுவது தவிர குடும்பத்தோடு அதிக ஒட்டுதல் இல்லாத நபராக இருப்பதாக உள்ளிருக்கும் போட்டியாளர்கள் மூலமாகவே சொல்லப்பட்டது. ஆனால் அபிராமி புண்ணியத்தில் முகெனின் கோபங்கள் வெளியாகின.
முகேன் தனது பின்புலம் பற்றிக் குறிப்பிடும்போது அப்பா அம்மா சிறு வயதிலேயே பிரிந்ததை பற்றி கண்ணீர் ததும்ப கூறினார். கூடவே தகப்பன் தாயிடம் வீட்டைப் பற்றி வெளியே பேசியதற்காக மன்னிப்பும் கோரினார். குடும்பத்தின் மீது அதிக பாசம் உள்ள நபராக இருந்தவர் என்பதைக் காண முடிந்தது.
இதை புரிந்து கொண்ட அபிராமி எல்லா நேரங்களிலும் முகேனை பிரியாமல் இருந்தார். முகேனுக்கு தன்னுடைய அண்மையை பழக்கப்படுத்தினார். இதனால் தன்னை விட்டுப் பிரியும்போது முகேன் மனது தன் பக்கம் திரும்பலாம் என்பது அபிராமியின் கணக்காக இருந்தது.
Youtube
ஆனால் முகேன் இறுதி வரை நாடியா மீதான காதலை எதன் பொருட்டும் விட்டுக் கொடுக்கவில்லை. முடிவு தெரியாத ஒருதலை காதல் என்றாலும் நாடியாவை மிகவும் நேசித்த முகேன் அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவில்லை.
அதைப் போலவே அன்பிற்காகவும் அவர் ஏங்கினார் என்பதும் அவர் மூலம் தெரியவந்தது. இதனை உணர்ந்த அபிராமி முகேனும் ஒருதலையாக வேறொருவரைக் காதலிப்பதால் அதே போலத் தானும் முகேனை காதலிப்பதாக கூறினார்.
மூன்று வருட ரிலேஷன்ஷிப்பை உதறிய சில நாட்களில் வீட்டிற்குள் வந்த கவின் ஆரம்பத்தில் சாக்ஷி பின் கைபிடித்துக் கொண்டு நடந்ததும் சாக்ஷி டைம் பாஸ் காதலியாக இருக்க மாட்டார் மிக் சீரியஸாக போகிறார் என்று உணர்ந்து தற்போது லாஸ்லியா உடன் காதலில் இருக்கிறார். அப்படிப்பட்ட கவின் இருக்கும் அதே வீட்டில்தான் முகேன் எனும் ஆத்மாவும் முடிவு தெரியாத போதும் தனது காதலில் உறுதியாக நின்று கொண்டிருக்கிறது.
முகேனின் தந்தை பிரகாஷ் ராவ் நன்றாகப் பாடக்கூடியவராம். அதனை ஒட்டியே முகேனுக்கும் பாடல்கள் வசப்படுகின்றன. 9 வயதில் பாட ஆரம்பித்த முகேன் 13 வயதில் கச்சேரிகளில் கலந்து கொண்டு பாட ஆரம்பித்திருக்கிறார்.
பல சொந்த முயற்சிகளுக்கு பின்னரே முகேன் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பிரபலம் ஆனார். ஆனாலும் முகேனின் மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுவது அவரது கோபம்தான்.
சிறுவயதில் பெற்றோர் பிரச்னையில் சிக்கிய முகேனுக்கு அன்பானது முழுமையாகக் கிடைக்கவில்லை. தாய் அன்பும் தந்தை அன்பும் ஒரே இடத்தில் கிடைக்காத போது குழந்தைகளின் மனநிலை மிகவும் காயப்படும். அந்த வகையில் மனக்காயங்களை சிறுவயதில் இருந்தே அனுபவித்த முகேனுக்கு காதலும் மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இன்று வரை இருக்கிறது.
Youtube
அவரது தோழி என்று அறிமுகப்படுத்தப்பட்ட நாடியா பற்றி முன்பே கூறியிருந்தேன். நாடியா இன்னமும் முகேனின் காதலுக்கு எந்த பதிலும் சொல்லாத நிலையில் நிச்சயம் அதுவும் ஒருவரின் மனபதட்டத்தை அதிகரிக்கவே செய்யும்.
இந்தக் காரணங்களால் முகேன் கோபப்படுகிறார் என்றாலும் முகேன் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும் என அவரது நண்பர்கள் அடித்துக் கூறுகிறார்கள். முகேனுக்கு மனரீதியாக இத்தனை சிரமங்கள் இருந்தும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்தது எல்லாம் அவரது பெற்றோர் மூலமே நடந்திருக்கிறது. ஆனாலும் இன்று வரைக்கும் முகேனின் பெற்றோர்கள் பிரிந்துதான் வாழ்கிறார்களாம்.
சிறு மனவருத்தங்கள் என்று கூறிக் கொண்டாலும் பிரகாஷ் ராவ் தனது மனைவியுடன் சேரவில்லை. அதே சமயம் விவாகரத்தும் செய்யவில்லை.
முகேனின் நல்ல குணங்கள் பற்றி என்னதான் விளக்கி விளக்கி சொன்னாலும் இறுதியில் முதலில் வெளியேறுவது முகேன்தான் .. பாரபட்சத்திற்கு பேர் போன விஜய் டிவி கன்டென்ட் கொடுத்த கவினை நன்றிக்கடனுக்காக கூடவே வைத்திருந்த கடைசி வின்னராக வெளியே அனுப்புவார்கள். அது இருக்கட்டும்.
கஸ்தூரி சொன்னதுதான் நான் சொல்கிறேன். பிக் பாஸ் ஷோவில் ஜெயிக்க முகேனின் உறுதியான நேர்மையான குணம் உதவி செய்யாதுதான். ஆனால் வாழ்க்கையில் நிச்சயம் முகேன் ஜெயிப்பார். இதே உண்மையுடன் இதே வெள்ளந்தித்தனத்துடன் கூடவே தன்னை பயன்படுத்தப்படுத்திக் கொள்பவர்களை அடையாளம் கண்டறிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பாங்குடன் அவர் செயல்பட்டு வாழ்வில் உயரங்களைத் தொடட்டும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.