விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தொடங்கி 105 நாட்களுடன் நிறைவுபெற்றது. இந்தப் போட்டியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியாவும் ஒருவர்.
பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் பட்டத்தை மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் வென்றார். இரண்டாம் இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டியும், மூன்றாம் இடத்தை இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவும் கைப்பற்றினர்.
இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி தனது சுட்டித்தனமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் மனங்களை வென்றார். இதனால் லாஸ்லியா ஆர்மி என அவருக்கென தனி ரசிகர்களே உள்ளனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது நடிகர் கவினை, லாஸ்லியா காதலித்து வந்தார். பலர் அறிவுரை வழங்கிய போதும் அவர்கள் காதல் தொடர்ந்தது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற பின்னர் நமது உறவு குறித்து பேசிக்கொள்ளலாம் என அவ்வப்போது கவினிடம், லாஸ்லியா கூறி வந்தார்.
புதுவித நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சந்தியா .. இப்போது எப்படி இருக்கிறார் ?
ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கவினுடனான காதல் குறித்து லாஸ்லியா வாய் திறக்காமல் உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, கவின் மீது பாசத்துடன் இருந்தார். அடிக்கடி கவின் குறித்து அனைவர் முன்னிலையில் பெருமையாக பேசுவார்.
இதனால் கவின் ரசிகர்களின் ஆதரவு லாஸ்லியாவிற்கு உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து இலங்கை சென்ற லாஸ்லியா, அண்மையில் பேக் டூ சென்னை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து அவரை தமிழகத்தின் மருமகளே வருக வருக என கவின் – லாஸ்லியா ஆர்மியினர் வரவேற்றனர். மேலும் கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்ட்டானது குறிப்பிடத்தக்கது.
லாஸ்லியாவின் மிகப்பெரிய கனவு என்னவென்றால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான். இதை ஏற்கனவே பலமுறை அவர் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் லாஸ்லியா கமிட் ஆகியிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து லாஸ்லியா எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இவர்தான் சர்ச்சைக்குரிய தாடி பாலாஜியின் முதல் மனைவியா! வெளியே வராத புகைப்படங்கள் !
ஆனால் அவர் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார் என்றும், ராஜா ராணி சீரியலின் பார்ட் 2வில் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்து வருகிறார் அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது .
லாஸ்லியாவின் சினிமா வாழ்க்கை குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளிவராத நிலையில் இணையத்தளத்தில் லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது. லாஸ்லியா தனது டிவிட்டர் பக்கத்தில் ஜிம்மில் இருப்பதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார்.
At The Gym💪🏻😌❤ pic.twitter.com/JFqPVpE144
— Losliya Mariyanesan (@iam_Losliya) November 10, 2019
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் புதிய படத்தில் நடிக்க தான் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஜிம்மிற்கு செல்கிறார் என கூறி வருகின்றனர். வாய்ப்பு கிடைத்திருப்பது வெள்ளித்திரையா அல்லது சின்னத்திரையா என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கவினுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை கூட இதுவரை ஷேர் செய்யவில்லையே என கவின்-லாஸ்லியா ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்களேன் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வைரலாகும் ரகுல் ப்ரீத்தின் புதிய போட்டோஷூட் படங்கள்… ராணாவுடனான உறவு குறித்து விளக்கம்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!