logo
ADVERTISEMENT
home / Bollywood
‘காதலுக்கு கண்ணில்லை’.. 12 வயது ‘மூத்த நடிகையை’ மணக்கும் வாரிசு நடிகர்?

‘காதலுக்கு கண்ணில்லை’.. 12 வயது ‘மூத்த நடிகையை’ மணக்கும் வாரிசு நடிகர்?

பாலிவுட்டின் இளம் நடிகரும், தயாரிப்பாளர் போனி கபூரின் தலைமகனுமான நடிகர் அர்ஜுன் கபூர்(Arjun Kapoor) விரைவில் திருமண பந்தத்தில் நுழையவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்ஜுன் கபூர்(Arjun Kapoor)

2 ஸ்டேட்ஸ், ஹாப் கேர்ள்பிரண்டு போன்ற படங்களின் வழியாக ரசிகர்களின் மனங்கவர்ந்த இளம் நடிகர் அர்ஜுன் கபூர்(Arjun Kapoor). போனி கபூரின் மூத்த மனைவிக்கு பிறந்த அர்ஜுன் கபூர், ஸ்ரீதேவி உயிருடன் இருக்குவரை அவர் எனது அப்பாவை எங்களிடமிருந்து பிரித்தவர் என்று அடிக்கடி வெளிப்படையாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர். ஆனால் கடந்தாண்டு எதிர்பாராதவிதமாக துபாயில் ஸ்ரீதேவி இறந்து விட, அவரின் மகள்கள் ஜான்வி-குஷி இருவருக்கும் பாசமான அண்ணனாக அர்ஜுன் மாறிவிட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

மலாய்கா அரோரா(Malaika Arora)

உயிரே படத்தில் இடம்பெற்ற ‘தையா தையா’ பாடலுக்கு அற்புதமாக ஷாரூக்கானுடன் இணைந்து நடனமாடியவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?. அவர் தான் பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா(Malaika Arora). பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2 ஆண்டுகளுக்கு முன் அர்பாஸ்-மலாய்கா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

அர்ஜுன்-மலாய்கா

ADVERTISEMENT

தன்னைவிட 12 வயது மூத்தவரான மலாய்காவை, அர்ஜுன் காதலிப்பதாக கிசுகிசுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இதற்கு ஆதாரம் அளிப்பது போல அர்ஜுன்-மலாய்கா(Malaika Arora) இருவரும் சேர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும். கடந்த ஆண்டு கூட இருவரும் ஜோடியாக வெளிநாடு சென்றுவந்ததாக தகவல்கள் வெளியாகின. காபி வித் கரண் நிகழ்ச்சியில் கரண் ஜோஹர் இதுகுறித்து நேரடியாகவே மலாய்காவிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதே நிகழ்ச்சியில் தான் ஒரு சீனியர் நடிகையை காதலிப்பதாக அர்ஜுன் கபூரும் முன்பு ஒப்புக்கொண்டிருந்தார்.

போனி கபூர்

ADVERTISEMENT

அர்ஜுன் கபூர் (Arjun Kapoor) தன்னைவிட 12 வயது மூத்த நடிகையை காதலிப்பது அர்ஜுனின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஆனால் இந்த விஷயத்தில் அர்ஜுன் கபூர் (Arjun Kapoor) தனது தந்தையின் பேச்சை கேட்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.

கிசுகிசு

அர்ஜுன் கபூர் -மலாய்கா இருவரும் சேர்ந்து பார்ட்டிகளுக்கு செல்கிறார்கள், சேர்ந்து அடிக்கடி வெளியே சுற்றுகிறார்கள், இருவரும் ஜோடியாக வெளிநாடு சென்று வருகிறார்கள் என அவ்வப்போது இவர்கள் இருவர் குறித்தும் கிசுகிசுக்கள் எழுந்தவண்ணம் இருந்தன. இருவரும் ஜோடியாக இருப்பது போல அவ்வப்போது வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு. ஆனால் அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இதனைக் கேட்டு பாலிவுட் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே திகைத்து நிற்கிறது.

ADVERTISEMENT

டும் டும் டும்

அந்த செய்தி இதுதான். அர்ஜுன் கபூர் -மலாய்கா(Malaika Arora) இருவரும் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்பதுதான் அது. நெருங்கிய தோழிகள் கரிஷ்மா கபூர்,கரீனா கபூர் மற்றும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் முன்னிலையில் மலாய்கா திருமண பந்தத்தில் நுழையப் போகிறாராம். இதேபோல அர்ஜுன் கபூரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரன்வீர் தன்னுடைய காதல் மனைவி தீபிகா படுகோனேவுடன் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

சர்ச்சில்

ADVERTISEMENT

அர்ஜுன்(Arjun Kapoor)-மலாய்கா இருவரும் ஏப்ரல் 19-ம் தேதி சர்ச்சில் வைத்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக எந்த விஷயமும் வெளியே தெரிய வேண்டாம் என, இருவரும் ரகசிய உத்தரவினை தங்கள் நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜான்வி-குஷி

ADVERTISEMENT

போனி கபூருக்கு இதில் விருப்பமில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் தனது தங்கைகள் ஜான்வி-குஷி ஆகியோரை அர்ஜுன் தனது திருமணத்திற்கு அழைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பாலிவுட் உலகில் எழுந்துள்ளது. எது எப்படியோ அர்ஜுன்-மலாய்கா திருமணம் உண்மையா? என்பதை அறிந்து கொள்ள நாம் இன்னும் 22 நாட்களுக்கு மேல் கண்டிப்பாக காத்திருக்க வேண்டியது இருக்கும். ஒருவேளை இருவரும் முன்னரே தங்களது திருமணம் குறித்து அறிவிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. எது எப்படியாகினும் உண்மையை அறிந்து கொள்ள நாம் இன்னும் ஓரிரு வாரங்கள் ‘காத்திருப்போம்’.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

27 Mar 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT