விஜய்யுடன் 'நெருக்கமாக' நடிப்பது இதற்காகத்தான்?.. மனந்திறந்த ராஷ்மிகா!

விஜய்யுடன் 'நெருக்கமாக' நடிப்பது இதற்காகத்தான்?.. மனந்திறந்த ராஷ்மிகா!

சமீபத்தில் வெளியான டியர் காம்ரேட் படத்தின் டீசரில் விஜய் தேவரகொண்டா(Vijay Devarakonda)-ராஷ்மிகா மந்தனாவுக்கு(Rashmika Mandanna) கொடுத்த 'லிப் டூ லிப்' முத்தம் தான் டோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.


ராஷ்மிகாகன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனாவுக்கும்(Rashmika Mandanna), கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் இடையே நடைபெற்ற கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம் ஒருசில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது.இதுகுறித்து எந்த ஒரு பதிலையும் சம்பந்தப்பட்ட இருவரும் அளிக்கவில்லை. ராஷ்மிகாவின் அம்மா இதுகுறித்து இருவருக்கும் இடையில் சில விஷயங்கள் ஒத்து போகவில்லை என விளக்கம் அளித்தார். தொடர்ந்து ரக்ஷித் ஷெட்டி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ராஷ்மிகாவை யாரும் தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.


கீதா கோவிந்தம்கடந்த ஆண்டு வெளியாகி இளைஞர்களின் நெஞ்சைக் கவர்ந்த கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு(Vijay Devarakonda)ஜோடியாக ராஷ்மிகா(Rashmika Mandanna) நடித்திருந்தார். இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி எக்கச்சக்கமாக வொர்க்அவுட் ஆனதால் தான் ரக்ஷித்-ராஷ்மிகா(Rashmika Mandanna) இடையிலான நிச்சயதார்த்தம் முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின.


ராஷ்மிகாகீதா கோவிந்தம் படத்திலும் ராஷ்மிகா-விஜய்(Vijay Devarakonda) இருவருக்கும் இடையில் முத்தக்காட்சிகள், நெருக்கமான காட்சிகள் இருந்தன. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற இங்கேம் இங்கேம் பாடலின் வழியாக ஒரே படத்தில் உச்சத்துக்கு போவது என்பார்களே அதுபோன்ற அதிர்ஷ்டம் ராஷ்மிகாவுக்கு கிடைத்தது.இதைத்தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் ராஷ்மிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.


டியர் காம்ரேட்


கீதா கோவிந்தம் படத்தைத் தொடர்ந்து விஜய்-ராஷ்மிகா ஜோடி மீண்டும் டியர் காம்ரேட் படத்தில் சேர்ந்து நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான
இப்படத்தின் டிரெய்லரில் இருவருக்கும் இடையில் முத்தக்காட்சி ஒன்று இடம்பெற்று இருந்தது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையில்
நெருக்கமான காதல் என கிசுகிசுக்கள் வழக்கம்போல றெக்கை கட்டிப்பறக்க ஆரம்பித்துள்ளன.(விஜய்-ராஷ்மிகா இடையில் கிட்டத்தட்ட 7 வருடங்கள்
வயது வித்தியாசம் இருக்கிறது)


விஜய் தேவரகொண்டா(Vijay Devarakonda)இதுகுறித்து விஜய் தேவரகொண்டா எந்தவித விளக்கமும் அளிக்காமல் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். அர்ஜுன் ரெட்டி படத்தில் இருந்தே இதுபோன்ற முத்தக்காட்சிகள் அவரது படத்தில் தவறாமல் இடம்பெறுவதாக அனைவரும் சுட்டிக்காட்டி
வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்தவித அலட்டலும் இல்லாமல் தனது படங்கள் தொடர்பான வேலைகளில் விஜய் பயங்கர பிஸியாக இருக்கிறார்.


ராஷ்மிகா

Subscribe to POPxoTV

இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து சுற்றுவதாலோ என்னவோ இந்தமுறை இதற்கு ஒரு விளக்கம் அளித்திருக்கிறார் ராஷ்மிகா. அதாவது படத்தின்
கதைப்படி அந்த காட்சி அவசியம் என்பதால் தான் நடித்தேன். எனது பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் தான் அந்த காட்சி இருந்தது. கீதா கோவிந்தம் படத்தின் முத்தக்காட்சியைப் போல இதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.


விஜய்-நிஹாரிகாஇதற்கு இடையில் சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்த நடிகை நிஹாரிகாவை மணந்து விஜய் தேவரகொண்டா, சிரஞ்சீவி குடும்பத்தினரின் மாப்பிள்ளை
ஆகப்போவதாக டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் அடிபடுகின்றன. விஜய் சேதுபதி-கவுதம் கார்த்திக் காம்பினேஷனில் தமிழில் வெளியான ஒரு
நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் நிஹாரிகா ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வெளிநாட்டு பெண்சமீபகாலமாக விஜய் ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் இவை அனைத்துமே வெறும்
கிசுகிசுவுடன் நின்று விடுமா? இல்லை இதில் ஏதாவது ஒன்று உண்மையாகக் கூடுமா? என்ற எதிர்பார்ப்பு டோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
ஆனால் இதற்கும், தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதுபோல தன்னுடைய படங்களில் மட்டுமே விஜய் தேவரகொண்டா கவனம் செலுத்தி
வருகிறார். என்னதான் அமைதியாக இருந்தாலும் ராஷ்மிகா-நிஹாரிகா இருவரில் விஜய்க்கு பிடித்தவர் யார்? என்பது ஒருநாள் கண்டிப்பாக
வெளிச்சத்துக்கு வரும் என ரசிகர்கள் நம்புகின்றனர். நாமும் அதுவரை காத்திருப்போம்!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,தமிழ்,தெலுங்கு,மராத்தி மற்றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்,
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.