கமல்ஹாசன் திறமையான நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் மட்டுமல்ல பக்குவமுள்ள தந்தையும் கூட. தனது மகள்களை அவர்கள் வாழ்வில் சுதந்திரமாக முடிவெடுக்க விட்டவர். இவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இவரது மகள்களுக்கும் இவர்தான் ரோல் மாடல்.
நீண்ட வருடங்களுக்கு முன்வே ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். ஆனாலும் அக்ஷரா ( Akshara haasan) சினிமாவுக்கு வர மிகுந்த தாமதம் ஏற்பட்டது. முதல் படத்தில் தனுஷ் மற்றும் அமிதாப் உடன் ஷமிதாப்பில் உதவி இயக்குனராக நடித்தார்.
ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக வளர்கிறாள் அனோஷ்கா !
இரண்டாவது படமானது அஜித் மற்றும் காஜல் உடன் விவேகம் படத்தில் நடித்தார். இரண்டுமே ஒரு அப்பாவாக கமல்ஹாசனை பெருமைப்பட வைத்த படம்தான்.
சமீபத்தில் பிரபல இணைய இதழ் ஒன்றிற்கு அக்ஷரா பேட்டி அளித்திருந்தார். அதில் தனது அப்பா அம்மா இருவரின் பிரிவு பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் அக்ஷரா.
கத்ரீனாவிற்காக கால் கடுக்க காத்திருந்த விஜய்.. காலம் கடந்து நெகிழும் நடிகை..
மற்ற எல்லா குழந்தைகளை போலவே அப்பா அம்மாவின் பிரிவு என்னை சுக்கு நூறாக உடைத்தது. ஒரு குழந்தையாக எனக்கான சந்தோஷ உலகம் முடிந்ததாக நினைத்தேன். பெற்றவர்கள் அவரவர் பாதையில் செல்ல நினைக்கும்போது எந்த குழந்தையாக இருந்தாலும் இப்படித்தான் இருக்கும்.
நானும் ஸ்ருதியும் சிறு வயதில் இருந்தே தன்னம்பிக்கையுடன் வளர்ந்தோம். ஆமாம். என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஒத்து வரவில்லை. அதனால் என்ன. பரவாயில்லை. அது எங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்ற போவதில்லை. அவர்கள் பிரிவு எங்களை பாதித்தது உண்மைதான். ஆனால் மிக அதிகமான அளவிற்கு இல்லை.
ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்
சில நேரங்களில் நான் வெறுமையை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அந்த வெறுமைதான் என்னை இப்போது இப்படி ஆகியிருக்கிறது. வலிமையான அழுத்தமான கடினமான உலகை சரி செய்யும் விதத்தில் என்னை மாற்றி இருக்கிறது.
இந்த கட்டங்களை கடந்தபடியேதான் எனது வாழ்வை நான் அனுபவிக்கிறேன் என்று தனது வலிகளை படிகளாக்கிய ரகசியத்தை அங்கு பகிர்ந்து கொண்டார்.
மேலும் அரசியலுக்கு கமல்ஹாசன் வந்தது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதிலும் தனது வித்யாசமான கோணத்தை பகிர்ந்து கொண்டார் அக்ஷரா.
அப்பா அரசியலுக்கு வருவதாக சொன்னபோது அதுவும் எனக்கு நெஞ்சை உடைக்கும் செய்தியாகத்தான் இருந்தது. சினிமா தொழிற்சாலையில் அப்பா எனது மிக சிறந்த தூண்டுதலாக இருந்தார். என் அப்பா மிகப்பெரிய லெஜெண்ட் என்றாலும் அவர் வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் என்பதையும் நான் உணர்கிறேன்.
ஆனாலும் என்னால் இப்போது வரை இதனை ஏற்று கொள்ள முடியவில்லை. இனி அப்பாவை புதிய படங்களில் பார்க்க முடியாது என்பது என் நெஞ்சை மீண்டும் நொறுங்க செய்கிறது என்கிறார் அக்ஷரா ஹாசன்.
அப்பா மிக சிறந்த நடிகர், மிக வலிமையான அரசியல் கட்சி தலைவர் என்றாலும் கூட அதுபற்றி கவலைப்படாமல் தனது வாழ்வில் தனது வழிகளை அக்ஷரா ஹாஸன் திறந்த மனதோடு பகிர்ந்து கொண்டது அவரின் பெருந்தன்மையை அவரது வளர்ப்பின் சிறப்பை காட்டுகிறது.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
ராணாவிடம் கெத்து காட்டிய சாய்பல்லவி.. படப்பிடிப்பில் மயங்கி விழுந்த த்ரிஷா?
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.