80களின் எவர்க்ரீன் நாயகி ரேவதியை நம்மால் என்றுமே மறக்க முடியாது. அந்த அளவிற்கு அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்.
அப்பா ராணுவத்தில் வேலை செய்ததால் ரேவதி 7ஆம் வகுப்பு படிக்கும்வரை பல இந்திய மாநிலங்களின் மண்வாசனையில் வளர்ந்திருக்கிறார்.7ஆம் வகுப்பில் இருந்து சென்னையில் வாழ ஆரம்பித்திருக்கின்றனர். 16 வயதில் குடும்ப நண்பர் மூலம் மண் வாசனை படத்தில் அறிமுகம் ஆனார் நடிகை ரேவதி (revathi).
Youtube
பாரதி ராஜா நடிப்பு சொல்லிக் கொடுத்த நடிகைகள் எல்லாம் சோடை போனதில்லை என்பதை இவரும் நிரூபித்தார். ஆஷா கேளுண்ணி என்கிற பெயரை ரேவதி என்று பாரதி ராஜா மாற்றினார். அதன் பின்னர் இவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகம் ஆனது.
மௌனராகம், பகல் நிலவு ,புன்னகை மன்னன், வைதேகி காத்திருந்தாள் , கைகொடுக்கும் கை என அப்போதைய முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்துத் தள்ளினார் ரேவதி. தன்னுடைய இரண்டாவது படத்தில் இருந்து தானே கதை கேட்க ஆரம்பித்த நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்ததே இன்று வரை அவரை நிலைக்க வைத்திருக்கிறது.
Youtube
பகல் நிலவில் ஆரம்பித்த இயக்குனர் மணிரத்னத்தின் நட்பு அஞ்சலி வரைக்கும் தொடர்ந்தது. இப்படி புகழின் உச்சத்தில் இருக்கும்போதே 1986ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை மணந்தார். இவர்களின் காதல் திருமணம் 2002ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அன்று முதல் பிரிந்து வாழ்ந்த காதல் தம்பதிகள் அதன் பின்னர் 10 வருடங்கள் கழித்து தங்கள் விவாகத்தை சட்ட ரீதியாக ரத்து செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பது ஆறுதல். அதன் பின்னர் நீண்ட வருடம் கழித்து செயற்கை கருத்தரித்தல் முறையில் ரேவதி மஹி என்கிற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
Youtube
சமீபத்தில் முன்னணி பெண்கள் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகை ரேவதி தனது சொந்த வாழ்க்கை குறித்து பேசும்போது திருமணம் அவரது வாழ்வில் தவறாக எடுத்த முடிவு என்று கூறி இருக்கிறார். அந்த முடிவை தான் எடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் பல நல்ல திரைப்படங்களில் நடித்திருக்கலாம் என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஆனாலும் கடந்த சில ஆண்டுகள் மீண்டும் நல்ல கதாபாத்திரங்கள் வருகிறது என்றும் அதனால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் இருக்கிறது என்றும் கூறினார். தற்போது தனது வாழ்க்கையை அழகாக்குவது தனது மகள் மஹி என்று நெகிழ்ந்திருக்கிறார் ரேவதி.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.