என்னதான் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என வகைவகையான சமூக வலைதளங்கள் இருந்தாலும் பேஸ்புக்(Facebook) பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் உங்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் கூட உங்களின் பேஸ்புக்(Facebook) உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களைப் பார்வையிட்டு தான், உங்களுக்கு வேலை கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானம் செய்கிறது.
ஒருத்தவங்களோட பேசுறது,பழகுறது வச்சு அவரோட முழு கேரக்டரையும் உங்களால தெரிஞ்சுக்க முடியாது. வருஷக்கணக்கா காதலிக்கிறோம். ஆனா இவன் எப்படிப்பட்டவன்னு தெரியலையேனு சிலநேரம் பொண்ணுங்களுக்குத் தோணும். இந்த மாதிரி நேரத்துல உங்க ஆளோட பேஸ்புக்(Facebook) பக்கத்தை வைத்து அவரின் கேரக்டரை உங்களால் கண்டறிய முடிந்தால்? எஸ். அவரின் பேஸ்புக்(Facebook) பதிவுகளை வைத்து உங்களவரின் கேரக்டர் எப்படிப்பட்டது? அவர் எவ்ளோ ரொமாண்டிக்னு இங்கே பார்க்கலாம் வாங்க.
1.ப்ரோபைல்(Profile) பிக்சர்
உங்க ஆளோட பேஸ்புக் பக்கத்துக்கு போய் அவர் என்ன ப்ரோபைல்(Profile) பிக்சர் வச்சு இருக்காருன்னு பாருங்க. விதவிதமான ப்ரோபைல் பிக்சர்ல அவருக்கு புடிச்ச பிக்சர் எதுன்னு? கண்டுபிடிங்க.
நண்பர்கள்
நண்பர்களுடன் இருப்பது போல ப்ரோபைல்(Profile) பிக்சர் வைத்திருந்தால் இரவுநேர பார்ட்டி, விருந்துகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார். மது அருந்தும் பழக்கம் இருக்கக்கூடும்.புதிய நண்பர்களை சந்திப்பது அவர்களுடன் உரையாடுவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அடிக்கடி கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை அப்டேட் செய்துகொண்டே இருந்தால், அவருக்கு நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் செல்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இதேபோல அவரை உங்களால் வைத்திருக்க முடியுமா? என யோசித்துக்கொள்ளுங்கள்.
அலுவலகம்
அலுவலகத்தில் தனது சீட்டில் அமர்ந்து டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பை கவனிப்பது போல ப்ரோபைல்(Profile) பிக்சர் வைத்திருந்தால், அவர் ஒரு போரிங்கான நபர் என கருத வேண்டாம். யாருக்குத் தெரியும் அவர் தனது முதலாளியுடன் கூட பேஸ்புக்கில் நண்பராக இருக்கக்கூடும். இவர்கள் சமுதாய நலனில் அதிக அக்கறையும் உறவில் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் நபராகவும் இருப்பார்கள்.
அட்வென்ச்சர்
ஸ்கை டைவிங் மற்றும் ஆழ்கடலுக்குள் நீச்சலடிப்பது போன்றவற்றை ப்ரோபைல்(Profile) பிக்சராக வைத்திருந்தால் அவருக்கு புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகம் இருக்கக்கூடும். உறவில் புதிய விஷயங்களை டிரை செய்துபார்க்க நினைப்பார். அதேநேரத்தில் அவருடைய சுதந்திரத்தில் நீங்கள் அதிகம் தலையிடக்கூடாது என நினைப்பார்.
செல்லப்பிராணிகள்
நம் அனைவருக்கும் செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும் தான். ஆனால் எப்போது பார்த்தாலும் செல்லப்பிராணிகளையே ப்ரோபைல்(Profile) பிக்சராக வைத்திருந்தால் அவர் கொஞ்சம் போரடிப்பவராக இருக்கக்கூடும்.
பெண்கள் புகைப்படம்
ஒரு அழகான பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போல ப்ரோபைல்(Profile) பிக்சர் வைத்திருந்தால்? இது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான். ஏனெனில் யார் அந்த பெண்? அந்த பெண்ணுக்கும் இவருக்கும் உள்ள உறவு என்ன? என எக்கச்சக்கமான கேள்விகள் நமது மண்டைக்குள் குடையக்கூடும். எது எப்படி இருந்தாலும் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.
2. அடிக்கடி ஸ்டேட்டஸ்
தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி ஸ்டேட்டஸ் வைப்பவராக இருந்தால் அவர் இந்த உலகத்துடன் அதிகம் தொடர்பில் இருக்க பேச விரும்புகிறார் என அர்த்தம். அதேநேரம் உங்களுடன் அதிக நேரம் செலவு செய்யவும், வெளியில் செல்லவும் அவர் விரும்பக்கூடும். அதேநேரம் சில மாதங்களுக்கு ஒருமுறை பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுபவராக இருந்தால் அவர் சமூக ஊடகங்களைப் பற்றி அந்தளவு நினைக்கவில்லை என அர்த்தம். வீட்டில் எப்பொழுதாவது தனிமையில் இருக்கும்போது பொழுதுபோக்க பேஸ்புக் பார்க்கும் நபராகவும் இருக்கக்கூடும். இதுபோன்ற நபர்களை எதிர்காலத்தில் உங்களால் சுலபமாக சமாளித்திட முடியும்.
3. என்ன ஸ்டேட்டஸ்
ஸ்டேட்டஸ் வைப்பது, ப்ரோபைல் பிக்சர் வைப்பது மட்டும் பார்க்காமல் ஸ்டேட்டஸில் என்ன வைக்கிறார்? என்பதையும் நீங்கள் கவனித்திட வேண்டும். உதாரணமாக வாழ்க்கை குறித்து எப்பொழுதும் புலம்பிக்கொண்டே இருப்பவராக இருந்தால், அவரிடம் ஏராளமான புகார்கள் இருக்கக்கூடும்.
4. அடிக்கடி செல்லும் இடங்கள்
அவர் என்ன மாதிரியான இடங்களுக்கு அடிக்கடி செல்கிறார் என்பதை பேஸ்புக் செக்-இன்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு அவர் பற்றி அறிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும். அவர் அடிக்கடி பார்ட்டிகள் மற்றும் கிளப்களுக்கு செல்லுபவராக இருந்தால் அவர் வேடிக்கையான இரவுகளை விரும்பக்கூடிய நபராக இருப்பார். உங்கள் பாய்பிரண்ட் இதுபோல ஒருவராக இருந்தால் பப்களில் இரவுகளையும், கபே காபி டேக்களில் மாலைப்பொழுதுகளையும் சரிசமமாக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.
5. அதிக நண்பர்கள்
பேஸ்புக்கில் அதிக நண்பர்கள் வைத்திருப்பது ஒன்றும் தவறான செயல் அல்ல. இதில் இருந்து அவர நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்பவர், நிறைய பேருடன் அவரால் உரையாடல் நிகழ்த்த முடியும் என நம்புங்கள். சமூக வாழ்க்கை என வரும்போது அவர் சிறிது மேலோட்டமானவராக இருப்பார். அதனால் அவரின் நண்பர்கள் வட்டாரத்தைப் பார்த்து மிரண்டு போக வேண்டாம்.
6. க்விஸ்
நிறைய க்விஸ் வினாக்களுக்கு பதிலளித்து அவற்றை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுபவராக இருந்தால், உங்கள் பாய்பிரண்ட் இதுபோன்ற வேடிக்கைகளை மிகவும் விரும்புகிறார் என அர்த்தம்.
7. கேம்ஸ்
கேம்ஸ் என்பது நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். கேம்ஸ்களில் அதிக விருப்பம் கொண்டவராக இருந்தால் அவர் நிஜவாழ்விலும் வேடிக்கையான ஒரு நபராக இருப்பார். நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் கேம்ஸ் ரெக்வெஸ்ட்களை உங்களுக்கு தொடர்ந்து அனுப்புபவராக இருந்தால் அவர் நிஜவாழ்வில் கவனத்தை திசைதிருப்பக் கூடிய நபராக இருப்பார். இதுபோன்ற நபர்கள் நிஜவாழ்வில் பொறுப்புகளை தவிர்க்கக்கூடிய நபராக இருப்பார்கள்.
உங்க ஆளு எவ்ளோ ரொமாண்டிக்னு.. அவரோட பேஸ்புக் பார்த்து தெரிஞ்சுகிட்டீங்களா? அப்படியே இத கொஞ்சம் ஷேர் பண்ணிவிடுங்க. ஏன்னா ஷேரிங் நல்லது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi