நீண்ட கால எலிஜிபிள் பேச்சிலர் பட்டியலில் இருப்பவர் சிம்பு (simbu) என்கிற சிலம்பரசன். சில காதல் தோல்விகள் இவரை நிலைகுலைய வைத்ததால் காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் என்கிற ரீதியில் இவர் இருந்தார்.
இந்நிலையில் இவரது தம்பி குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஒரு இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இதற்கான கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக சிம்புவிற்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் தீவிரமாக முடிவெடுத்திருக்கின்றனர்.
அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !
இதற்காக பெண் தேடும் படலம் ஆரம்பித்த நிலையில் அம்மா உஷாவின் வழியில் ஒரு உறவுக்கார பெண்ணை சிம்பு மணமுடிக்க இருப்பதாக தெரிய வருகிறது. சிம்பு தன்னுடன் நடித்தவரை அல்ல தனக்கு பிடித்தவரை திருமணம் செய்வார் என்று அவர் அப்பா டி ஆர் பத்திரிகையாளர்களிடம் மறைமுகமாக இதனால்தான் கூறியிருக்கிறார் போலும்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்க இருக்கிறதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கூறுகின்றன. விஷால் திருமணத்திற்கு முன்பாகவும் சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவின் நிச்சயத்திற்கு முன்பாகவும் சிம்புவின் திருமணத்தை அவரது பெற்றோர் நடத்த இருக்கின்றனர்.
நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !
இது சிம்பு ரசிகர்களை மிக மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதை போலவே தனது அடுத்த படத்தில் முன்னாள் காதலியோடு இணைய இருக்கிறார் சிம்பு.
நயன்தாராவிற்கு பின்னர் சிம்பு நேசித்த பெண்ணான ஹன்சிகா தற்போது பட வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.
ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !
ஆகவே அவரது அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க முடியுமா என்று அவர் சிம்புவை கேட்டிருக்கிறார். எப்போதும் எதையும் மனதில் வைத்து கொள்ளாத சிம்பு தனது மனதை உடைத்த காதலி உடன் மீண்டும் ஜோடி சேர்கிறார்.
தன்னை நேசிக்காதவர்களுக்கும் உதவி செய்வதில் சிம்பு சிம்புதான் என்கிறது ரசிகர் வட்டாரம்.
பொன்னியின் செல்வனில் வில்லியாகும் ஐஸ்வர்யா ராய் !
இது பற்றிய தகவல்கள் இன்னமும் உறுதியாகாத நிலையில் தற்போது சிம்பு இந்த தகவலை மறுத்திருக்கிறார். இப்போதைக்கு திருமணம் பற்றி தனக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் மீடியா மற்றும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி என்றும் சிம்பு தனது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Celebrity gossip
உங்கள் அழகை பராமரிக்க சில குறிப்புகள்!
Deepa Lakshmi
குழந்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால்..குழந்தை இல்லாமை பற்றி நெகிழும் விஜயசாந்தி!
Deepa Lakshmi
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..
Deepa Lakshmi
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!
Deepa Lakshmi
செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !
Deepa Lakshmi