Acne

கோடை காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சூப்பர் டூப்பர் டிப்ஸ்

Mohana Priya  |  Mar 8, 2019
கோடை காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சூப்பர் டூப்பர் டிப்ஸ்

கோடை காலம்(summer) என்றதும் நம் எல்லாருக்கும் பயம் தருவது வேர்வை, வெயில், வறண்ட சருமம், முகப்பரு, அணல் காற்று, கரும்புள்ளிகள். குறிப்பாக கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் வெளியில் செல்லவே பயப்படுவார்கள். கவலை வேண்டாம் எல்லாருக்குமான தீர்வாக கீழே சில குறிப்புகள் உள்ளன. கட்டாயம் படிக்கவும்.

* கோடை காலத்தில்(summer) எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும். எனவே நிறைய தண்ணீர் குடியுங்கள். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

*வெயிலின் தாக்கம்(summer) முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். எக்காரணத்தை கொண்டும் பருக்களை கிள்ளிவிடாதீர்கள். இதனால் பருக்கள் அதிகமாகும்.

* கோடை வெயிலில்(summer) அலைந்துவிட்டு வந்தபின் கண்கள் உஷ்ணத்தால் எரியும். வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடு ங்கள், கண் எரிச்சல் பறந்துவிடும். இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்யுங்கள் அல்லது தடவிக்கொண்டால் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

*தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போட்டுக் கொள்ளலாம். தர்பூசணி பழத்தைக் கொண்டு தோழிகள் எளிதாக வீட்டிலேயே பேஸ்பேக் தயாரிக்கலாம். தர்பூசணி பழத்தில் கொஞ்சம் பால், சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். சுமார் இருபது நிமிடங்கள் வைத்திருந்து முகத்தைக் கழுவிவிடுங்கள். தர்பூசணி மற்றும் வாழைப்பழ பேக்குகளை வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கலாம். அவ்வப்போது தயாரித்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

*அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது தான் நீங்கள் செய்யவேண்டிய முதல் சரும பராமரிப்பு. அடுத்து ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளியுங்கள். வெயிலால் மட்டுமின்றி வெயிலின் புழுக்கத்தால் கூட உடல் வியர்த்து சருமத்தில் அழுக்கு தேங்கிவிடும்.

* கோடை காலத்தில்(summer) சோப்பை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும் போது பவுடர் பூசுவது நல்லதல்ல. முகத்தை நன்றாக கழுவிய பிறகு அல்லது குளித்து துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.

* தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

* கோடை வெயிலில்(summer) நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் மினரல் வாட்டரை அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

* கோடை காலத்தில்(summer) பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிப்படியாக மறையும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

* உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும்.

* கோடை காலத்தில்(summer) அதிகம் பாதிக்கப்படுவது சருமம் தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

* வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.

* வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

* ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.

Read More From Acne