Lifestyle

‘உருகுதே மருகுதே’ நெஞ்சை நெகிழவைத்த காதல்.. உங்களுக்கும் இப்படி நடந்து இருக்கா?

Manjula Sadaiyan  |  Feb 5, 2019
‘உருகுதே மருகுதே’ நெஞ்சை நெகிழவைத்த காதல்.. உங்களுக்கும் இப்படி நடந்து இருக்கா?

அடுத்த வாரம் இதேநாள் காதலர் தினம்(Valentines Day) களைகட்டும். எங்கு பார்த்தாலும் காதலர்கள் மயமாகத்தான் இருக்கும். ரோஜா, சாக்லேட்,
பரிசுப்பொருட்கள், டெடி பியர், மோதிரம் என காதலில் விழுந்தவர்கள் தங்கள் காதலன்/காதலிக்கு பிடித்த பொருட்களை வாங்கி பரிசாக அளிப்பர்.
காதலர் தினத்துக்காக(Valentines Day) நாடு முழுவதும் இருந்து பெருநகரங்களுக்கு ரோஜாக்கள் குவியும். ரோஜா விற்பனை தொடங்கி பரிசுப்பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விற்பனை விவரங்கள் காதலர் தினத்தில்(Valentines Day)வெளியாகும்போது அனைவரும் என்ன இவ்வளவு கோடிகளா? என்று ஆச்சரியப்படுவர்.காரணம் அந்தளவுக்கு அன்று அனைத்து பொருட்களின் விற்பனையும் களைகட்டும்.

காதலை தண்ணீர் ஊற்றி வளர்த்ததில் அதனை உலகம் முழுவதும் பரப்பியதில் சினிமாவுக்கு தனியிடம் உண்டு. குறிப்பாக தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கு என்றுமே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. ச்சே எப்படி உருகி,உருகி லவ் பண்றார் பாருடா, அந்த படத்துல ஹீரோயின் நடிக்கல அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்காங்க என்று படம் பார்த்துவிட்டு சிலாகிக்காதவர்களே இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாகத் திகழும் அஜீத், விஜய் இருவருக்கும் பிரேக் அளித்த படங்கள் காதல் படங்களே.

அதிலும் அஜீத் தன்னுடன் உடன் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அதேபோல நடிகர் சூர்யா-ஜோதிகா இருவரும் நீண்ட
வருடங்கள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இன்று பலருக்கும் நிஜ வாழ்விலும் இந்த காதல்(Love) ஜோடிகள் ரோல் மாடலாகத் திகழ்கின்றனர். இதேபோல எல்லா காதல்களும் திருமணத்தில் முடிவதில்லை தான், ஆனால் காதலர்கள் தோற்றாலும் கூட காதல்கள் தோல்வியுறாது என்பார்கள்.அந்த வகையில் நெஞ்சை உருக்கிய ஒரு உண்மை காதல் (Love) கதையை இங்கே பார்க்கலாம். இதேபோல ஒரு காதலை எல்லாரும் தங்களுடைய வாழ்விலும் கட்டாயம் கடந்து வந்திருப்பீர்கள். சினிமாவில் என்னதான் தத்ரூபமாக காதலை காண்பித்தாலும் உண்மை சம்பவங்களுக்கு அவை என்றுமே ஈடாகாது. அந்தவகையில நான் கடந்து வந்த ஒரு காதலைப்(Love) பத்தி இங்கே பார்ப்போம்.

விண்ணைத்தாண்டி வருவாயா

முதன்முதலில் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா தான். அடித்துப்பிடித்து கிளம்பி தியேட்டருக்கு சென்றால் படம் ஆரம்பித்து விட்டது. அந்த அவசரத்தில் சரியாக கவனிக்காமல் ஏதோ ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டோம். சற்றுநேரம் கழித்து கூட்டமாக
வந்த ஆறேழு பசங்க எங்கள எழுப்பி விட்டுட்டாங்க, அதுக்கு அப்புறம் தான் அது எங்க சீட் இல்லன்னு தெரிஞ்சது. மறுபடியும் பர்ஸ்ட்ல இருந்து தேடி
எங்க சீட்ட கண்டுபிடிச்சி போய் உக்கார்ந்தோம்.

என்னது காதலா

காலேஜ் படிக்கும்போது ஊரு சுத்துறது, படம் பாக்கறது இப்படியே வாழ்க்கை போய்ட்டு இருந்தது. அதனால என்ன சுத்தி நடக்கற காதல் காட்சிகளை
நான் கண்டுக்கறது கெடையாது. ஒருநாள் திடீர்னு பார்த்தா என் பிரண்டு லவ்(Love) பண்றேன்னு சொன்னா. எனக்கு பயங்கர ஷாக். என்னது லவ்வா?
அப்படின்னு பயங்கர ஷாக். எல்லோருக்கும் எப்பவோ தெரியும். உனக்கு இப்பத்தான் தெரியுமான்னு? கேவலமா கேட்டா. பையன் யாருன்னு கேட்டா?
எங்க கூட படிச்ச பொண்ணோட ரிலேஷன். ஓகே நடத்து நடத்துன்னு சிரிச்சிட்டு போய்ட்டேன்.

எப்பவும் சண்டை

நான் எப்பவுமே ஜாலியா இருக்கணும்னு நினைக்கற டைப். அதனால என்னவோ என்னோட காலேஜ் டிபார்ட்மெண்ட் தவிர மத்த டிபார்ட்மெண்ட் பசங்க கூடத்தான் எப்பவும் சுத்திட்டு இருப்பேன். கடைசி செமஸ்டர்ல எல்லோரும் வெளில புராஜெக்ட் செய்ய போனாங்க. எனக்கும்,அவளுக்கும் மட்டும் எங்க காலேஜ்ல இருந்து பக்கத்துலேயே கெடைச்சது. அதனால ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் இருந்தோம். நெறைய சண்டை வரும். எனக்கு பயங்கர கடுப்பா இருக்கும். ஒருகட்டத்துல ரெண்டு பேரும் பேசிக்கிறதே கெடையாது.

பைனல் டே

காலேஜ்ல எல்லோரும் ப்ரொஜெக்ட் சப்மிட் பண்ற டைம் வந்துச்சு. வெளில போன பறவைங்க கூடு திரும்புற மாதிரி என் பிரெண்ட்ஸ் எல்லாரும்
காலேஜ் வந்து சேர்ந்தாங்க. எல்லோரும் அவங்கவங்க எக்ஸ்பீரியன்ஸ் பத்தி சொல்லி பயங்கர கலாட்டாவா இருந்தது. ஒருவழியா எல்லாரும்
ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணி ப்ரோபாசர்ஸ திணறடிச்சோம். போய் தொலைங்கனு எல்லாருக்கும் பாஸ்மார்க் போட்டு விட்டாங்க. கடைசி நாள்
எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போலாம்னு பார்த்தா, என் பிரெண்ட் அழுதுட்டு இருந்தா. நம்ம மேல அவ்ளோ பாசமான்னு கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்.

லவ்வருக்கு கல்யாணம்(Marriage)

ஆனா அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவ எனக்காக அழல. அவ ஆளுக்கு கல்யாணம்னு அழுறான்னு. எங்க கூட படிச்ச அந்த இன்னொரு
பொண்ணு எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுத்தா.மாப்பிள்ளை என் பிரண்டடோட லவ்வர். பொண்ணு அந்த பொண்ணோட அக்கா. என்னடா நடக்குது இங்கன்னு எனக்கு தலை சுத்தி போச்சு. என் பிரண்ட் அந்த இன்விடேஷன வெறிச்சு பார்த்துட்டே இருந்தா. காலேஜ்ல இது ஓரளவு எல்லாருக்கும் தெரியும். அதனால எல்லாரும் அவளுக்காக பீல் பண்ணாங்க.

கல்யாணம்(Marriage)

அவருக்கு கல்யாணம்(Marriage) ஆன ரெண்டு,மூணு வருஷத்துல என் பிரண்டுக்கு மேரேஜ் ஆச்சு. மேரேஜ்க்கு பிரண்ட்ஸ் எல்லாரும் போய் இருந்தோம். பையன் செம சூப்பரா இருந்தார். என் பிரண்டுக்கு ஏத்த மாதிரி செமையா இருந்தார். மேரேஜ் ஆகி நாலு வருஷம் ஆகிடுச்சி. செம க்யூட்டா ஒரு பாப்பா, நல்ல ஹஸ்பண்ட் லைப் சூப்பரா போகுது சூப்பரா இருக்கா. அந்த காதல் கைகூடலன்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு ஆனா இப்போ அவளோட லைப் பார்த்து அந்த வருத்தம் போயே போச்சு. கண்டிப்பா அவங்க ரெண்டு பேருக்கும் மனசுல ஏதாவது ஒரு மூலையில அந்த காதல்
இன்னும் உயிரோட தான் இருக்கும்.

காதலன்-காதலி தோற்பதுண்டு காதல்கள் எப்போதும் தோற்பதில்லை….

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle