Lifestyle

உங்கள் வாழ்க்கை துணையிடம் சொல்லவே கூடாத சில விஷயங்கள் – இதோ!

Nithya Lakshmi  |  Dec 3, 2019
உங்கள் வாழ்க்கை துணையிடம் சொல்லவே கூடாத சில விஷயங்கள் – இதோ!

இருவர் ஒன்றாக வாழ்க்கையில் பயணிக்கும்போது கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம். ஒரு சூடான விவாதத்தின்போது, நீங்கள் உரைத்தது சரி என்றும், உங்கள் துணை சொல்லவரும் கருத்து தவறு என்றும் நிரூபிக்கவே பெரும்பாலும் முயற்சித்து வாக்குவாதம் நீடித்துக்கொண்டே போகும். உங்கள் தரப்பு நியாயங்களை புரியவைக்க நிறைய விஷயங்களை உளருவீர்கள். முட்டையை உடைத்தது போன்ற உங்கள் வார்த்தைகள் மற்றவரை காயப்படுத்திவிடும். முட்டையை மறுபடியும் ஒட்ட வைக்க முடியுமா? அப்படித்தான் நீங்கள் ஏற்படுத்திய காயமும். சரி, சில விஷயங்களை  புரிய வைக்க வேண்டும் என்று எண்ணி, சொல்லி காயப்படுத்துவதைவிட அதை சொல்லாமல் இருப்பதே மேல்! எந்த சூழ்நிலையாக இருந்தாலும் உங்கள் வாழ்க்கை துணையிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். 

1. குழந்தைகளுக்காத்தான் உன்னோடு இருக்கிறேன் என்று கூறாதீர்கள்

ஒரு காரணத்திற்காகத்தான் உங்கள் துணையோடு இருப்பதாகக் கூறுவது, நீங்கள் ஒரு காரணத்திற்காகத் தான் அவரோடு இருப்பதாக தோன்றும். மேலும், முழுமையாக 100 சதவிகிதம் அவருடனான உறவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், அவர் உங்களுக்கு ஒன்றும் தனிச் சிறப்பு மிக்கவர் அல்ல என்றும், எளிதில் அவரை விட்டு விட நினைக்கிறீர்கள் என்ற எண்ணத்தை அவர் மனதில் நீங்கள் தான் உதிக்கச் செய்கிறீர்கள். 

அவருடனான பிரச்சனை யாருக்குமே நேர்ந்திருக்காது, அவ்வளவு மோசம் என்றாலும்கூட, உங்கள் துணையுடன் உரையாடும்போது நேர்மறை எண்ணங்களை (விஷயங்கள்) விதைக்குமாறு, ஆக்கபூர்வமான சிந்தனைகள் தோன்றுமாறு, நீங்கள் கூறியதற்காக நீங்களே பின்பு வருந்தாது போல பேச வேண்டும். 

2. விவாகரத்து செய்து விடுவேன் என்று அச்சுறுத்தாதீர்கள்

Shutterstock

“பேசாம நாம விவாகரத்து செய்து கொள்ளலாமா?” என்ற வார்த்தைகளை நிச்சயம் சொல்லக்கூடாது. விளையாட்டிற்காகத்தான் சொல்கிறோம் என்றாலும், அது உங்கள் நிச்சயமற்ற உறவை வெளிப்படுத்துவதாக அமையும். மேலும் உங்களுக்கு இந்த உறவில் அர்ப்பணிப்பு, ஈடுபாடு, மற்றும் நம்பிக்கை ஆகிய எதுவும் இல்லை என்று வெளிப்படுத்துவதாக இருக்கும். 

3. நான் உன்னை நம்ப மாட்டேன் என்று சொல்லாதீர்கள்

“நம்பிக்கைதான் ஒரு உறவின் வெற்றிக்கு காரணமாகும்” என்று ஹால் கூறுகிறார். பொதுவாக கேட்கும் திறனை இழந்துகொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் துணை முதலில், முழுவதுமாக ஒரு விஷயத்தை சொல்ல அனுமதியுங்கள். உங்களுக்கு விஷயம்தான் வெளிவர வேண்டுமே தவிர, உங்கள் வாழ்க்கைத் துணை மீது பாய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது. ‘எனக்கு நீ சொல்ல வருவது முழுமையாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன்’ என்று சொன்னால் நிச்சயம் அவர் முயற்சித்து வேறு விதமாக உங்களுக்கு புரியும்படி உரைப்பார்.

4. நீ எப்பவுமே இப்படித்தான் என்று கூறாதீர்கள்

“நீ எப்பவுமே லேட் தான்”, “நீ எப்பவுமே துணிகளை சரியா வைக்க மாட்டே” போன்ற வார்த்தைகள் நிச்சயம் வேலைக்கு ஆகாது. அது அவர்களுடை குணத்தை கொலை செய்வது போல இருக்கும். அதற்கு பதிலாக, ‘சீக்கரம் வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்’, ‘உன் துணிகளை சரியாக வைக்க நானும் உதவுகிறேன்’ போன்ற நேர்மறையாக கூறுங்கள்.

5. அது உன்னோட தவறு என்று திருப்பாதீர்கள்

Shutterstock

ஒரு தவறை மற்றவர் மேல் சொல்வது, பயனன்றது. மேலும், எந்த ஆக்கப்பூர்வமான செயலுக்கும் உதவாது. உங்கள் மீது வெறுப்பையும், கோபத்தையும் அதிகரிக்கச் செய்யும். ‘நீ சீக்கரம் வந்திருந்தால் இது நடந்திருக்காது’ என்று முழுவதையும் அவர்மீது திருப்பாமல். ‘இப்போ என்ன செய்யாலாம்?’ என்று இருவரும் பரஸ்பரம் இணைந்து ஒரு தவறை சரி செய்ய முயற்சிப்பது, அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர உதவும். 

6. அவர்களுடைய அன்பை சோதிக்காதீர்கள்

“நீ உண்மையாலும் என்னை விரும்பினா…” இப்படி சொல்வதால், அவர்கள்மீது நீங்கள் பாரத்தை வைப்பதைப்போல உணர்ந்து, அவர்கள் அன்பை நிரூபிக்க நிறைய மெனக்கெடுவார்கள். உங்களை சோதிப்பதாய் உணர ஆரம்பித்து, பின்பு அது வெறுப்பில் போய் முடியும். ‘உன்னுடன் நேரம் செலவிட முடியவில்லை, நாம் இருவரும் செல்லலாமா’ போன்ற சொற்கள், உங்கள்மீது அவர்களுக்கு பாசத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும், உங்களுக்கு பிடித்த விஷயங்களை விரும்பி மெனக்கெட்டு செய்வார். 

மேலும் படிக்க –அற்புதமான ஜோடிகளாக நிகழும் 8 பொருத்தமான ராசி ஜோடிகள் இவைதான்!

7. கிண்டல் கேலி பேச்சு வேண்டாம்

‘என்னை பார்த்தால் என்ன வேலைக்காரி போல இருக்கா?’, ‘வீடு தானாகவே சுத்தமாகிக் கொள்ளும்’ போன்ற கிண்டல் கேலி பேச்சுக்கள் தீங்கற்றவையாகத் தோன்றினாலும், உங்கள் துணையை விரக்தி அடையச் செய்யும். உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பாக அமையும்.

8. என்னால் உன்னை மன்னிக்க முடியாது என்று கூறாதீர்கள்

Shutterstock

யாரும் இந்த உலகத்தில் 100 சதவிகிதம் சரியாகச் செய்பவர்கள் இல்லை. தவறு செய்தால் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்குமேல் முடியவில்லை என்றால், ஏன் அவர்களுடன் இருக்கிறீர்கள்? என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொண்டு, மறந்துவிடுங்கள்.

9. நான் உங்களை திருமணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம் என்று எப்போதும் சொல்லாதீர்கள்

சில வார்த்தைகளைத் திரும்பப் பெற முடியாது. உங்களுக்கு எவ்வளவு கோவம் இருந்தாலும், உங்களை திருமணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். அது உங்கள் உறவை சீரழிக்க துவங்கிவிடும். 

10. அவருடைய பெற்றோர்களைப் பற்றி அவதூறாக பேசாதீர்கள்

நம் கலாச்சாரத்தில், திருமணம் என்பது அவருடைய (husband) குடும்பத்தையும் சேர்த்த விஷயமாகும். அவருடைய பெற்றோர்களினால், அவருடைய உறவுகளினால் உங்களுக்கு எந்த மனக்கசப்பு வந்தாலும், அவர்களுடன் மரியாதையாக பழகுங்கள். அவர்களைப் பற்றி உங்கள் துணையிடம் அவதூறாக பேசாதீர்கள். அவர்களை அப்படியே உங்கள் துணையோடு சேர்த்து ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை முறையும், அவர்களுடையதும் வேறு வேறுதான். அதற்காக மனம் வருந்தி, அவர்களை அவமானப்படுத்த நினைக்காதீர்கள். 

உங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை (பார்ட்னர்) இல்லாமல் எத்தனைபேர் அவதிப்படுகிறார்கள் என்று நினைத்துப்பாருங்கள். ஒரு உறவு கெடுவதும், வளருவதும் உங்கள் வார்த்தைகளில் உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள். எதிர்மறையான காயப்படுத்தும் வார்த்தைகளை எப்போதும் திரும்ப எடுக்க முடியாது. அது உங்கள் உறவை அளிக்க ஆரம்பிக்கும். இதுவரை நீங்கள் மேலே சொன்ன வார்த்தைகள் ஏதாவது பயன்படுத்தி இருந்தால், இனிமேல் செய்யாதீர்கள். அவ்வளவுதான்! சிம்பிள்! 

மேலும் படிக்க – ஆண்கள் பெண்களில் கவனிக்கும் முதல் விஷயம் இவைதானா?! தெரிந்து கொள்ளுங்கள் !

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle