அற்புதமான ஜோடிகளாக நிகழும் 8 பொருத்தமான ராசி ஜோடிகள் இவைதான்!

 அற்புதமான ஜோடிகளாக நிகழும் 8 பொருத்தமான ராசி ஜோடிகள் இவைதான்!

திருமணம் என்னும் செயல்முறை ஆரம்பம் ஆகும்போது, முதலில் தயார் செய்வது ஆண் பெண் ஜாதகம். தெரிந்த பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பத்து பொருத்தம் பார்த்து, சரியாக இருந்தால்தான், இருவீட்டாரும் அடுத்த படியை எடுத்து வைப்பார்கள். எப்படிப் பொருத்தம் பார்த்தாலும், சண்டை இல்லாத கணவன், மனைவி உண்டோ?  எப்போதும் அன்பை பரிமாறிக் கொண்டே இருந்தால் நன்றாகவா இருக்கும்? ஒரு சண்டை, பின் சமாதானம், அப்படி இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். பெரும்பாலும், பத்துப் பொருத்தம்(zodiac compatible)  பார்த்து திருமணம் செய்தாலும், கணவனுக்கு பிடித்தது மனைவிக்கு பிடிக்காது, அதுபோல மனைவிக்கு பிடித்தது கணவனுக்கு பிடிக்காது. இது ஒரு பெரிய விஷயம் இல்லை. எத்தனை முரண்பாடுகள் வந்தாலும், இருவரின் அன்பு மாறாமல், ஒருவர் மற்றவரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து, இருவரும் சேர்ந்து வாழ்க்கை சக்கரத்தை ஓட்டினால் தான் வாழ்க்கை ஜம் என்று இருக்கும். 

சரி, விஷயத்திற்கு வருவோமா? அப்படி உறுதியான ஜோடி (perfect couple)சேரக்கூடிய ராசிகளின் பட்டியல் இதோ:

1. மேஷம் - தனுசு

துணிச்சல் மிக்க, சக்திவாய்ந்த மேஷ ராசிக்கார்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருப்பபவர்கள். இவர்களுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தும் ராசி தனுசு. மேஷ இராசிக்கும், தனுசு இராசிக்கும் உள்ள ஒற்றுமையை பார்க்கலாம்.

 • மிகவும் இணக்கமான இந்த உறவு எப்போதும் மற்றவரின் ஆற்றலை பாராட்டும் விதமாக அமையும்
 • இவர்கள் வாழ்க்கையில் சளிப்பு என்பதே இருக்காது. ஏன்னெனில், ஸ்கை டைவிங், பாறையேற்றம் போன்ற துணிகர செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள்.
 • கொஞ்சம் முன்கோபம் உள்ள மேஷ ராசிக்கார்களை, தனுசுதான் கையாள முடியும்

2. ரிஷபம்- மகரம்

Pixabay

பொறுமைமிக்க, நம்பிக்கையான நல்ல மனம் கொண்ட உறுதியான ரிஷப ராசிக்கு  பொருந்தும் ராசி மகரம்.

 • இருவருமே வாழ்க்கையை நடைமுறை தன்மையோடும், அர்த்தமுள்ளதாகவும்  பார்க்கக் கூடியவர்கள்
 • இருவரும் துணிந்து அபாய வலைக்குள் செல்ல மாட்டார்கள். அதனால் ஒருமுறை உறவு ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் அதற்காக அர்ப்பணித்து விடுவார்கள். 
 • இருவரும் மிகவும் தீவிரமானவர்களாக இருந்தாலும், அவ்வப்போது தங்கள் சவுகரியமான இடத்தை விட்டு வெளியில் வந்து செல்வார்கள்.

3. மிதுனம் - கும்பம்

மிதுன ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்களோடு இணங்கி இருப்பார்கள், பல துறையிலும் திறமையானவர்களாக இருப்பார்கள், சரசமாய் பேசிக்கூடியவர்கள், நல்ல பேச்சு சாதுர்யம் மிக்கவர்கள், எப்போதும் இளமையாக உணரக்கூடியவர்கள், சுறுசுறுப்பானவர்கள். இவர்களுக்கு  ஏற்ற ராசி கும்பம். மிதுன இராசிக்கும், கும்ப இராசிக்கும் உள்ள ஒற்றுமையை பார்க்கலாம்.

 • மற்றவர்  என்ன நினைக்கிறார் என்பது  இன்னொருவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்
 • படைப்புகளைத் தேடி இந்த உறவு பயணிக்கும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட இலக்கை நோக்கி பயணிக்க இருவருமே ஊக்குவித்துக் கொள்வார்கள்
 • விடுமுறை நாட்களை சாகசங்கள் செய்து குதூகலமாக இருப்பார்கள்
 • இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடி!

4. கடகம் - மீனம்

Pixabay

எளிதில் உணர்ச்சிவயப்படக் கூடிய கடக ராசிக்காரர்கள், அன்பானவர்கள், விவேகமுள்ளவர்கள் மற்றும் எச்சரிக்கையானவர்களும் கூட. தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் கடக இராசிக்கு பொருத்தமான ஜோடி மீனம். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை பார்க்கலாம்.

 • கடக இராசிக்காரர்கள் பொருட்களை வகை வகையாக வாங்குவதில்  மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். மீன இராசிக்காரர்கள்தான் அதை ஆமோதித்து வரவேற்பார்கள். 
 • பரஸ்பரம் நல்ல மரியாதை கொண்டவர்கள்
 • உயர்ந்த எதிர்பார்ப்புகள் இருந்தாலும், ஒருவர் மற்றவர்மீது வைத்திருக்கும் அன்பு வாழ்நாள் முழுவதும் மிகவும் உறுதியாக இருக்கும் இந்த இரண்டு ரசிக்கும்.

5. சிம்மம் - தனுசு

பெருந்தன்மை உள்ளமும், பரந்த மனமும்  கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், பிரமாண்டமான சிந்தனையாளர்கள். பகட்டும், அதிகாரத்தன்மையும்  கொண்டவர்களை புரிந்துகொள்ள தனுசு ராசிக்காரர்கள்தான் சரியான தேர்வு.

 • இருவருமே ஒருவரை ஒருவர் பாராட்டி வாழ்க்கையை சந்தோகமாக கொண்டாடுவார்கள். மற்றவர்களும் இவர்களை பாராட்டும் வாழ்க்கை வாழ்வார்கள்.
 • அன்பும், அர்ப்பணிப்பும் கொண்டவர்கள். ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை வழங்கி ஊக்குவிப்பர்.
 • உறுதியான பிணைப்பு மற்றும் உறுதியான சக்தி இவர்களுக்கிடையே இருக்க்கும்.

6. கன்னி - ரிஷபம்

Pixabay

கன்னி  ராசிக்காரர்கள் அடக்க குணமும், கூச்ச சுபாவமும்  உள்ளவர்கள். அவர்கள் தெளிவற்ற நிலையை போக்க ரிஷப இராசிகாரர்கள் சரியான மேட்ச்:

 • இருவருமே வாழ்க்கையை நடைமுறை தன்மையோடு  பார்க்கக் கூடியவர்கள். 
 • அவர்களுடைய  பிரச்சனையை அவர்களாகவே  சரி செய்து கொள்வார்கள்.
 • அமைதியான நீண்டநாள் உறவு இவர்களுக்குள்  இருக்கும். 
 • இவர்களுடைய  வலிமை, இருவரும்  உண்மையாக இருந்து  பரஸ்பரம் தங்கள் மதிப்புகளை பகிர்ந்துகொள்வதுதான். 

7. துலாம்- மிதுனம்

பண்பட்ட துலா ராசிக்காரர்கள், அழகானவர்கள், எளிதாக பழகக் கூடிய நேசமானவர்கள், சமாதானம் செய்பவர்கள். இவர் மிதுன இராசி உள்ளவரோடு சேர்ந்தால் நீண்ட ஆழமான உறவு இருக்கும்.

 • பறந்து விரிந்த அவர்களது ஆர்வம் அவர்களை நீண்ட நேரம் பேசத்தூண்டும்
 • பரஸ்பரம் மிகுந்த அன்பு கொண்டவர்கள், இருவரும் மற்றவரின் துணையை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்

8. விருச்சிகம் - கடகம்

Pixabay

உள்ளுணர்வு கொண்ட சக்திவாய்ந்த விருச்சிக ராசிக்காரர்கள், உற்சாகமானவர்கள். கடக ராசிக்காரர்கள் இவர்களால்  ஈர்க்கப்படுவார்கள்.

 • இருவருமே வாழ்க்கையில் மிகுந்த வேட்கை கொண்டவர்களாக இருப்பார்கள்
 • உணர்ச்சியால் தீவிரமாக ஒன்றுபட்டவர்கள் இவர்கள்
 • இருவருக்கும் நிறைய விஷயங்கள் பொதுவானதாக இருக்கும் 
 • பொறாமை குணம் உண்டென்றாலும் ஆழமான காதல் வேட்கை மனதில் உள்ளவர்கள்
 • எல்லையில்லாத உண்மையான மனம் உள்ளவர்கள்
 • ஒருவரை ஒருவர் தீவிரமாக விரும்புபவர்களாக விளங்குவார்கள் 

இந்தப் பட்டியலில்  உங்கள் ராசி இடம் பெற்றிருக்கிறதா? இந்த இராசி ஜோடிகள் காதலின் நம்பகத்தன்மை, உறவில் இருக்கும் வேட்கை, தன்மையான குணம் போன்ற குணாதியங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்டிருக்கிறது. இது மட்டுமல்ல வேறு சில ஜோடிகளும் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பொருந்துவார்கள். இனி தேர்ந்தெடுக்க போகிறவர்களுக்கு இது ஒரு துணையாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். ஏற்கனவே துணையோடு (relationship) இருப்பவர்கள், அவர்களது குணாதிசயம் தெரிந்துகொண்டு, அதற்குத் தகுந்தவாறு சின்ன சின்ன மாற்றங்களை வாழ்க்கையில் செய்து, இனி ஒரு சந்தோசமான வாழ்வை தொடருங்களேன்!

 

மேலும் படிக்க - ராசியின் ரகசியங்கள் : உங்கள் ராசியைப் பற்றி மக்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் !

பட ஆதாரம்  - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!