ஆண்கள் பெண்களில் கவனிக்கும் முதல் விஷயம் இவைதானா?! தெரிந்து கொள்ளுங்கள் !

ஆண்கள் பெண்களில் கவனிக்கும் முதல் விஷயம்  இவைதானா?! தெரிந்து கொள்ளுங்கள் !

பொதுவாக ஆண்கள் பெண்களின் புற அழகை மட்டும்தான் ரசிக்கிறார்கள் என்று பெண்கள் உறுதியாக நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. பெண்களின் நடை, உடை, பாவனை, சிரிப்பு, பார்வை, சைகை, கூந்தல் அழகு, மற்றவர்களிடம்  பழகும் விதம் இப்படி பலவற்றையும் ரசிப்பார்கள்(கவனிப்பார்கள்). அப்படி அவர்களை முதலில் எதுவெல்லம் எப்படி எப்படி கவர்கிறது என்று பார்க்கலாம்.

 

1. சிரிப்பு

நீங்கள் ஒருவரைப் பார்த்தவுடன்(ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பைப் பார்த்துத்தான் அவரிடம் நெருங்கலாமா, வேண்டாமா என்று முதலில் முடிவு செய்கிறோம். அதுபோலத்தான் ஆண்கள் உங்கள் முக பாவத்தைப் பார்த்து உங்களிடம் பேச்சுக் கொடுப்பார்கள். உங்கள் முகம் பொலிவாக ஒரு புன்னகை பூத்தாற்போல தோன்றினால் அவர்கள் தொடர்வார்கள். உங்களுக்கு அவரிடத்தில் தொடர்ந்து பழக ஏதோ ஒன்று பிடித்திருக்கிறது என்று கருதி, பேச துவங்குவார். நீங்கள் சிரிப்பை, ஒரு புன்முறுவல் கூட இல்லாமல் இறுக்கமான முகத்துடன் இருந்தீர்களானால், உங்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்று புரிந்து கொள்வார்.

2. ஆளுமை

உங்கள் தனித்தன்மை என்ன, நீங்கள் எப்படி ஒரு இடத்தில் தனியாகத் தெரிகிறீர்கள் என்பதில் இருந்து ஆரம்பித்து, ஒரு விஷயத்தை எப்படி புரிந்து கொள்கிறீர்கள்; மற்றவர்களிடம் எப்படி பழகுகிறீர்கள்; இப்படி உங்கள் குணத்தை ஆராயா ஆரம்பிப்பார்கள். உங்களுக்கென தனி உலகம் இருக்கிறதா, நீங்கள் பொதுவாக எவ்வளவு உற்சாகமான நபர் என்பதையும் கவனிப்பார். 

3. கண்கள்

கண்கள் ஆயிரம் வார்த்தைகள் பேசிவிடும் என்பார்கள். ஒரு ஆண் முதலில் உங்கள் கண்ணைத்தான் கவனிப்பார். கண்கள் உங்கள் உணர்வுகளை உடனே பிரதிபலிக்ககூடியது. அது பொய் சொல்லாது. உடலில் வேறு எந்த பாகத்தையும்விட காண்களின் ஈர்ப்பு மிகவும் அதிகம். நீங்கள் ஒரு ஆணுடன் உரையாடும்போது சாந்தமாக பார்த்தால், அவரும் சாதாரணமாக உணர்ந்து உங்கள் கண்கள் மேலும் என்ன சொல்லப்போகிறது  என்று பார்த்துக்கொண்டே (notice) உரையாடுவார். மந்தமாக, குறும்புத்தனமான யோசனையில் கண்களை வைத்திருந்தால், உங்களுக்கு அவரை பிடித்திருக்கிறது என்று அறிந்து கொள்வார். இன்னும் அவர்மீது அதிகமாக ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள் என்றால், குறும்பாக லேசாக கண் அடித்துக் காண்பிப்பீர்கள். உங்கள் பார்வை வேறு பக்கம் சென்றால், உங்களுக்கு அவர்மீது வெறுப்பாக இருக்கிறது என்று புரிந்து கொள்வார். கண்கள் உங்கள் உள்மனத்தின் ஜன்னல்.

4. நகங்கள்

உங்கள் நகங்களை நீங்கள் எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்கு உங்கள் மீது எவ்வளவு அக்கறை கொண்டவராக இருக்கிறீர்கள் என்று உங்கள் அவர் (men) எடை போடுவார். அழகிய நகங்கள், உங்கள் அக்கறையை வெளிப்படுத்தும்.

5. கூந்தல்

கூந்தல் அடர்த்தியாக கருமையாக, நீளமாக இருந்தால்தான் ஆண்களுக்கு பிடிக்கும் என்றில்லை. பொதுவாக உங்கள் முக அமைப்பிற்குத் தகுந்தவாறு உங்கள் கூந்தலை ஸ்டைல் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பெரிய முக அமைப்பு இருந்தால், கூந்தலை விரித்து நயன்தாரா போல ஒரு வேவி ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்ளுங்கள். பெரிய தோடு அணிந்துகொள்ளுங்கள். அதுவே சின்ன முகமாக இருந்தால், கூந்தலை வைத்து மறைக்காமல் உங்கள் முக பாவம் தெரியுமாறு கூந்தலை படிய வாரி அழகாக வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் உங்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையை காண்பிக்கும்.

6. சந்தோஷம்

நீங்கள் கோவக்கார பெண்ணா(women); நம்பிக்கை இல்லாமல் முகத்தில் எப்போதும் ஒரு இருக்கத்தை வைத்துக்கொண்டிருப்பவரா? உங்கள் பக்கத்தில் எந்த ஆணும் நெருங்க மாட்டார்கள். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் இந்த யுக்தியை கையாளலாம். வாழ்க்கையை சந்தோசமாக எதிர்கொள்கிறீர்களா என்றும் கவனிப்பார்.

7. ஸ்டைல்

பெண்களுக்குத்தான் இந்த ஃபேஷன் உணர்வு அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறோம். அப்படி இல்லை. ஆண்கள் மிக கூர்ந்து நீங்கள் எப்படிப்பட்ட உடை அணிந்திருக்கிறீர்கள், எவ்வாறு அதைக் கையாளுகிறீர்கள் என்று கவனிப்பார்கள். உங்கள் உடையின் நிறம், டிசைன், அதை நீங்கள் எவ்வளவு பொருத்தமாக உடுத்துகிறீர்கள் என்பதிலிருந்துகூட உங்களை எடை போடுவார்கள். ஒரு சிலருக்கு யோகா பாண்ட், ஹை ஹீல்ஸ், லெக்கிங்ஸ் அணிந்திருக்கும் பெண்கள் என்றால் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். எந்த உடையாக இருந்தாலும், அதை நம் உடல் வாகிற்கு ஏற்றதாக தேர்ந்தெடுத்து, அழகாக கையாண்டால், அனைவர்க்கும் பிடிக்கும்.

8. வாசனை திரவியம்

இது நீங்கள் அவர் அருகில் செல்வதற்கு முன்பே உங்களை காட்டிக்கொடுத்துவிடும். உங்களுக்கென்று ஒரு ஸ்பெஷல் வாசனை இருப்பதை விரும்புவார்கள் ஆண்கள்.

9. தெரியாத நபரை எப்படி கையாளுகிறீர்கள்?

நீங்கள் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக பழகுறீர்களா? டாக்ஸி டிரைவர், அனாதை,  பணியாளர் என நீங்கள் அறியாதவரிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதையும் கவனிப்பார். பொதுவாக ஆண்களுக்கு எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக, ஸ்டேட்டஸ் மறந்து பழகும் பெண்களைத்தான் மிகவும் பிடிக்கும்.

10. உங்களுக்கு என்று தனி கருத்து இருக்கிறதா?

ஒவ்வொரு விஷயத்திலும், ஆண்கள் சொல்வதை பின்பற்றாது, அவர்களுக்கென தனி கருத்து இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்கு பிடிக்கும். ஆண்களிடம் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்களை சேலஞ் செய்யும் பெண்களை தான் ஆண்கள் விரும்புவார்கள். மேலும், அப்படிப் பட்ட பெண்களைத்தான் ஆண்கள் அவர்களுக்கு சமமாக கருதுவார்கள்.

இயற்கையாகவே, பெண்ணுக்கு ஒரு ஆணைப்பிடித்துவிட்டால், அவருடைய கூந்தல் முதல் பாதம் வரை, அந்த ஆணை ஈர்க்கும் பண்பு தானாக வந்து விடும். மேலே கூறியவை காலந்தொட்டு பெண்கள் இப்படித்தான் ஆண் நினைப்பார் என்று எண்ணி பல விஷயங்களில் எதிர்மறையாக செய்யக் கூடும். உங்களுக்காக ஒரு சின்ன வழிகாட்டல். பிடித்திருக்கிறதா?! 

 

மேலும் படிக்க - நிலையற்ற உறவுகள் விட்டு செல்லும் தனிமை, எப்படி கையாள்வது?

மேலும் படிக்க - காதலர்களுக்கு இடையேயான சண்டையும் நன்மைக்கே : ஆய்வுகளில் நிரூபணம்!

பட ஆதாரம்  - Youtube, Gifskey

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!