Health

கோபத்தை குறைத்து நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ சில எளிய வழிகள்!

Meena Madhunivas  |  Dec 4, 2019
கோபத்தை குறைத்து நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ சில எளிய வழிகள்!

கோபம் ஒருவரை தன் வாழ்க்கையில் எந்த அளவிற்காயினும் பாதித்து விடக் கூடும். ஒருவரின் கோபம் தன்னை மட்டும் பாதிக்காமல், தன்னை சுற்றி இருப்பவர்களையும் பாதித்து விடக் கூடும். மேலும் கோபத்தில் இருக்கும் போது சரியாக சிந்திக்கவோ, அல்லது முடிவெடுக்கவோ முடியாமல் போகலாம். மேலும் அடிக்கடி கோபப் படுபவர் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் பாதிக்கப்படுவார். இந்த கோபத்தை நீங்கள் எப்படி தவிர்ப்பது ( anger control), அல்லது குறைப்பது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், இங்கே உங்களுக்காக சில எளிய வழிகள்:

1. கோபம் ஒரு பிரச்சனை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

பலரும் கூறலாம், கோபம் ஒரு நல்ல உணர்வு என்று. ஆனால், அளவை மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சாகும் என்பதற்கேற்ப. அளவுக்கு அதிகமாகவும், காரணம் இன்றியும் கோபப்படுவது ஒருவரது வாழ்க்கையை பெரும் அளவு பாதித்து விடக் கூடும். அதனால், நீங்கள் முதலில் உங்களுக்கு வரும் கோபம் உங்கள் வாழ்க்கையை பதித்து விடக் கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

2. தேவையற்ற கோபத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்

Pexels

எல்லாவற்றிகும் கோபப் படாமல், தேவையற்ற விடயங்களுக்கு வரும் கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டோ, அல்லது தவிர்த்து விடவோ முயற்சி செய்யுங்கள். மேலும் இப்படி எடுத்ததற்கெல்லாம் கோபம் வந்தால், அது உங்கள் உடல் மற்றும் மன நலத்தை பாதித்து விடக் கூடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

3. சூழலை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

முதலில் உங்களை சுற்றி என்ன நடகின்றது மற்றும் உங்களுக்கு என்ன நடகின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு நல்லதுக்காகத் தான் அந்த விடயத்தை செய்கின்றார்களா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் நடப்பதை புரிந்து கொள்ள முயற்சித்தாலே, உங்கள் கோபத்தை பெரும் அளவு தவிர்த்து விடலாம். மேலும் இதனால் உங்களுக்கு நன்மைகளே உண்டாகும்.

4. கோபத்தை உண்டாக்கும் இடத்தில், மனிதர்களிடம் இருந்து விலகி விடுங்கள்

Pexels

நீங்கள் ஒரு சபையிலோ, அல்லது அசௌகரியத்தை உண்டாக்கும் சூழலிலோ, இடத்திலோ அல்லது உங்களுக்கு கோபத்தை உண்டாக்கக் கூடிய மனிதர்களுக்கு மத்தியிலோ இருக்க வேண்டிய ஒரு சூழல் உண்டானால், அந்த இடத்தை விட்டு அல்லது மனிதரை விட்டு விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். அந்த இடத்தை விட்டே சென்று விடுங்கள். இதனால் நீங்கள் கோபப்படும் சூழல் தவிர்க்கப் படும். மேலும் உங்கள் மனமும் அமைதியாக இருக்கும்.

மேலும் படிக்க – நேர்மறை சக்திகளை எப்படி அதிகரித்து, மகிழ்ச்சியான மற்றும் வெற்றி தரும் வாழ்க்கையை வாழ்வது?

5. உங்கள் கோபத்தை கவனியுங்கள்

எதற்கெல்லாம் உங்களுக்கு கோபம் வருகின்றது, ஏன் கோபம் வருகின்றது, இது அவசியம் தானா, இந்த கோபத்தில் அர்த்தம் உள்ளதா என்று சற்று கவனியுங்கள். தினமும் இரவில் படுக்க செல்லும் முன் உங்களுக்கு கோபம் வந்ததும், அது ஏன் வந்தது என்றும், அது தேவை தானா என்றும் சற்று நன்கு யோசித்து அலசி பாருங்கள், பின்னர் உங்களுக்கு புரிந்து விடும், நீங்கள் எத்தனை தேவையற்ற விடயங்களுக்கு காரணம் இல்லாமல் கோபப் படுகின்றீர்கள் என்று. இதனால், பெரும் அளவு நீங்கள் கோபப்படுவதை தவிர்த்து விடலாம்.

6. பிடித்த இசை

Pexels

இசை மனதிற்கு ஒரு நல்ல மருந்து. அவ்வப்போது உங்கள் மனதிற்கு பிடித்த இசையை கேளுங்கள். குறிப்பாக தூங்க செல்லும் முன், இனிமையான இசையை கேளுங்கள். இது உங்கள் மனதை அமைதி படுத்தும். இந்த அமைதி உங்கள் கோபத்தை நாளடைவில் குறைத்து விடும்.

7. பிடித்த விடயங்கள்

தோட்டம் அமைப்பது, கலைப் பொருள் செய்வது, சமையல் என்று உங்களுக்கு பிடித்த விடயங்களை செய்யுங்கள். இப்படி உங்களுக்கு பிடித்த விடயங்களில் உங்கள் மனதை செலுத்தும் போது, உங்கள் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். இதனால் உங்கள் கோபமும் குறையும்.

8. த்யானம் / மூச்சு பயிற்சி

Pexels

இது மனம், உடல் மற்றும் ஆன்மா, அனைத்தையும் ஒரு நிலை படுத்தி, அமைதியாகவும், திறன்படவும் செயல்பட செய்ய உதவும். தினமும் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி, உங்களுக்கு தெரிந்து த்யானம் மற்றும் மூச்சு பயிற்சிகளை செய்யுங்கள். இது நீங்கள் நல்ல சிந்தனையை பெற உதவுவதோடு, அமைதியான மனதோடும் இருக்க உதவும். இதனால் உங்கள் கோபமும் குறையும். யோகா மற்றும் உடற் பயிற்சியும் உங்களுக்கு இந்த விடயத்தில் உதவியாக இருக்கும். மேலும் உங்கள் உணவிலும் சில மாற்றங்களை செய்வதால், கோபம் குறைய வாய்ப்பு உள்ளது. எனினும், சைவம் மற்றும் அசைவ உணவிற்கும் கோபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க உங்கள் மனம் சார்ந்த விடயமே.

மேலும் படிக்க – உடல் ஆரோகியம் மேம்பட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற சக்தி யோகா

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Health