
இன்றைய அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் உலகத்தில், அனைவருக்கும் தங்களது உடலை கவனித்துக் கொள்ள போதிய நேரம் கிடைப்பதில்லை. என்னதான், தான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நல்ல உடல் வாகோடு இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அது எண்ணியபடி நடப்பதில்லை. மேலும் அப்படி இருக்க வேண்டும் என்றால், அதற்கு நாம் கடினமாக உடற் பயிற்சி (exercise) செய்ய வேண்டும், உணவில் அதிக கட்டுபாடுகளை வைக்க வேண்டும், என்றும் ஒரு பெரிய பட்டியால் போடப்படும்.
இப்படி நீங்கள் பல கட்டுபாடுகளுடன் இருந்து கடினமாக உடற் பயிற்சி செய்து விட்டால் மட்டும் நல்ல உடல் வாகை பெற்று விட முடியுமா?
நிச்சயம் இல்லை!
உங்களுக்கு உதவ, இங்கே சில இரகசிய குறிப்புகள். இனி நீங்கள் கடினமாக உடற் பயிற்சி செய்ய வேண்டாம், உணவில் கட்டுபாடுகளை திணிக்க வேண்டாம். இந்த சில குறிப்புகளை (health tips)பின்பற்றினாலே, உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் கண்கூடாக உணரலாம்.
உங்களுக்காக இங்கே:
1. நன்கு மென்று உண்ண வேண்டும்
எந்த உணவாக இருந்தாலும், நீங்கள் நன்றாக மென்று, உமிழ் நீருடன் உணவு நன்கு கலந்து, பற்களால் உணவை நன்கு அரைத்து பின் முழுங்க வேண்டும். இப்படி சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான சர்க்கரை மற்றும் சக்தி சீராக கிடைக்கும், ஜீரணமும் சீராக நடக்கும். மேலும் தேவையற்ற கொழுப்பும் வயிற்று பகுதியில் சேராது. இதனால், நாளடைவில் நீங்கள் நல்ல மாற்றத்தை உங்கள் உடலில் காணலாம். உங்கள் உடல் எடையும் குறைந்து சீரான அளவிற்கு வரும்.
Also Read About பெண்களுக்கான சுகாதார குறிப்புகள்
2. சிறிய தட்டுகளை பயன்படுத்துங்கள்
Pexels
நீங்கள் பெரிய தட்டுகளை பயன்படுத்தும் போது, அதில் அதிக அளவு உணவு இருந்தாலும், கொஞ்சமாக இருப்பது போலத் தெரியும். இதனால் உங்கள் மனதில் நீங்கள் போதுமான உணவு உண்ணவில்லை, அதனால் மேலும் சிறிது உணவு உண்ண வேண்டும் என்று எண்ணி மேலும் அதிகமாக உன்னுவீர்கள். மாறாக, சிறிய தட்டில் உணவை போட்டு உண்ணும் போது, கொஞ்சம் இருந்தாலும், அதிகமாக இருப்பது போலத் தெரியும். இதனால் உங்கள் மனம் நீங்கள் அதிகம் உண்ணுவதாக கருதிக் கொண்டு, உங்கள் பசியை விரைவாக போக்கி விடும். இதனால் உங்கள் உணவின் அளவும் ஒரு கட்டுபாட்டிற்குள் வரும்.
இதையும் படியுங்கள்: டெங்கு நோய்க்கான வீட்டு வைத்தியம்
3. அதிக நார் சத்து இருக்கும் உணவை உண்ண வேண்டும்
நார் சத்து இருக்கும் உணவில் கொழுப்பு குறைந்த அளவு இருக்கும், மேலும் நார் சத்து பசி இன்மையை உண்டாக்கி, எப்போதும் உங்கள் வயிற்றில் சிறிது உண்டாலும், நிறைந்து இருப்பது போன்ற உணர்வைத் தரும், மேலும் நார் சத்து அதிக சக்த்தியைத் தருவதால், உங்கள் உடலுக்குத் தேவையான சக்தி கிடைத்து விடும். இதனால் நீங்கள் சோர்வடையவும் மாட்டீர்கள். அதனால் முடிந்த வரை வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ, கீரை, பீன்ஸ், போன்ற நார் சத்து அதிகம் இருக்கும் கைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. தேவையான நீர் அருந்துங்கள்
Pexels
எப்போதும் தேவையான நீரை அருந்த வேண்டும், ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளுவு நீர் தான் அருந்த வேண்டும் என்ற கணக்கு இல்லை, ஒருவரின் நீரின் தேவை அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். எனினும், தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது, மேலும் தாகம் எடுக்கும் போது முடிந்த வரை அதிக அளவு நீரை குறைவில்லாமல் தாகம் தீரும் வரை குடிக்க வேண்டும். தண்ணீர் உடலை தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ள உதவும். இதனால், உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறி விடும். இதனால் உங்கள் உடலும் நல்ல ஆரோக்கியம் பெறுவதோடு, சீரான எடையோடு நல்ல உடல்வாகோடும் இருக்கும்.
5. நன்றாக தூங்க வேண்டும்
தூங்கும் போது தான் ஒருவரின் உடல், மனம் மற்றும் ஆன்மா தனைத்தானே புதுபித்துக் கொள்கின்றது. மேலும் நல்ல தூக்கம் இருப்பவரளுக்கு எந்த நோயும் வருவதில்லை, இது மன அழுத்தத்தையும் குறைத்து, நிம்மதியான வாழ்க்கையை வாழ உதவுகின்றது, நல்ல தூக்கம் சரியான ஜீரணம் ஏற்பட உதவுகின்றது, இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிகின்றது.
6. மகிழ்ச்சியாக இருங்கள்
Pexels
முடிந்த வரை எப்போதும் மகிழ்ச்சியாக உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு விடயமும் உங்கள் கட்டுபாட்டை மீறி நடந்து விடப்போவதில்லை. நீங்கள் அதிகம் வருத்தப்படுவதாலும், எதுவும் இந்த உலகில் மாறி விடப்போவதில்லை. அதனால் முடிந்த வரை உங்களுக்கு பிடித்த இசையை கேட்டு, உங்களுக்கு பிடித்த வேலைகளை பார்த்துக் கொண்டு, உங்களுக்கு பிடித்த உணவை உண்டு எந்த ஒரு மன அழுத்தமும், கவலையும் இல்லாமல் உங்கள் மனதிர்கிநியவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்யுங்கள்.
இவை மட்டுமல்லாது, ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது, வெள்ளை சர்க்கரை மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.
மேலும் படிக்க – உடல் எடையை குறைக்கும் திராட்சைப் பழங்கள்! எவ்வளவு சாப்பிட வேண்டும் தெரியுமா?
பட ஆதாரம் – Pexels
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.