தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ரஜினிகாந்த், அர்ஜுன், சுதீப், பிரகாஷ்ராஜ், அனுஷ்கா, ஐஸ்வர்யா ராய் இவர்கள் 6 பேரையும் மிகவும் சக்தி வாய்ந்த நடிக,நடிகையர் என சொல்லலாம். அதிலும் ரஜினி(Rajini), ஐஸ்வர்யா ராய் போன்றோர் தங்கள் நடிப்பால் உலகப் பிரசித்தி பெற்றவர்கள். நடிப்பு தவிர்த்து இவர்கள் ஆறு பேருக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. ஆமாம்.இவர்கள் 6 பேருமே கர்நாடகா(Karnataka) மாநிலத்தின் புதல்வர்கள். சாண்டல்வுட் நகரம் என்று அழைக்கப்படும் கர்நாடகா(Karnataka) மாநிலத்தில் பிறந்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் இவர்கள் அறுவரைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
ரஜினி(Rajini)
ரஜினி(Rajini) பற்றி இங்குள்ள அனைவருக்குமே தெரியும், புதிதாக நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழின் சூப்பர் ஸ்டார், ஆசியாவின் சக்தி வாய்ந்த நடிகர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு புகழுக்கு சொந்தக்காரரான ரஜினி(Rajini) பிறந்தது கர்நாடகாவில்(Karnataka) தான், தமிழ் தவிர்த்து தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,இந்தி மற்றும் ஆங்கில மொழிப்படங்களிலும் ரஜினி நடித்திருக்கிறார். பைரவி தொடங்கி பேட்ட வரை பல்வேறு மெகா ஹிட்களைக் கொடுத்த ரஜினி(Rajini) போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மகனாகப் பிறந்தவர். இன்று இவர் அடைந்திருக்கும் உயரம் கனவில் கூட யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. சினிமாவிற்கு வந்து 44 வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் இன்றும் இளம் நடிகர்களுக்குப் போட்டியாக காலா, 2.O, பேட்ட என வரிசையாக படங்களை வெளியிட்டு, அவர்களுக்கு டப் கொடுத்து வருகிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி(Rajini) நடித்துவரும் படம் அவரது 166-வது படமாக உருவாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராய்
கர்நாடக(Karnataka) மாநிலத்தின் மிகவும் ஆச்சாராமானதொரு குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராய் 1997-ம் ஆண்டு இருவர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பச்சையும் ஊதாவும் கலந்த இவரின் கண்களே இவரின் தனித்துவம் என்று கூறும் அளவிற்கு ஐஸ்வர்யாராயின் கண்கள் தனித்துவம் வாய்ந்தவை. அறிமுகமானது தமிழில் என்றாலும் பாலிவுட் உலகில் தற்போது ஐஸ் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். அபிஷேக்கை மணந்து கொண்ட இவருக்கு ஆராதனா என்ற அழகிய மகள் இருக்கிறார்.ஐஸ் நடிப்பில் தமிழில் வெளியான ஜீன்ஸ், எந்திரன், ராவணன் மற்றும் இருவர் ஆகிய படங்களில், தனது முழு நடிப்புத்திறமையையும் வெளிக்கொணர்ந்திருப்பார் இந்த உலக அழகி.
அர்ஜுன் சார்ஜா
கர்நாடக(Karnataka) மாநிலம் மைசூரில் பிறந்த அர்ஜுன் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்திருக்கிறார். முக்கியமாக போலீஸ் வேடங்களில் அர்ஜுனின் நடிப்பு பார்க்கும் ரசிகர்கள் நெஞ்சையும் தொட்டுப் பார்க்கக் கூடியது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுதுபவர் என்று பன்முகங்கள் கொண்ட அர்ஜுன் இன்றும் இளம் நாயகர்களுக்கு சவால் அளிக்கக் கூடிய கம்பீரமான உடற்கட்டுடன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன், ரிதம், மங்காத்தா,கடல், இரும்புத்திரை போன்ற படங்கள் அர்ஜுனின் நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்த சிறந்த படங்களாகும்.
பிரகாஷ் ராஜ்
‘செல்லம் ஐ லவ் யூ’ முதன்முதலாக தமிழ் சினிமாவில் வில்லன் ஒருவர் பேசிய வசனம் தமிழர்களின் பேவரைட்டாக மாறிய அதிசயம் ‘கில்லி’ திரைப்படத்தின் மூலம் நிகழ்ந்தது. தமிழ் சினிமாவில் பல்வேறு வில்லன்கள் வந்து போயிருக்கின்றனர் ஆனால் பிரகாஷ் ராஜின் நடிப்பைப் பார்த்து அவரின் வில்லத்தனத்தை ரசித்த அளவிற்கு, வேறு எந்த வில்லனையும் தமிழர்கள் ரசித்தார்களா என்பது தெரியவில்லை. பெங்களூரில் பிறந்த பிரகாஷ் ராஜ் 1993 ம் ஆண்டு டூயட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜீத், மதுபாலா நடிப்பில் வெளியான ‘ஆசை’ திரைப்படம் திரையுலகில் பிரகாஷ் ராஜைத் தூக்கி நிறுத்தியது. கில்லி, என் சுவாசக் காற்றே, அறிந்தும் அறியாமலும், அபியும் நானும், போக்கிரி, சிங்கம், ஓ காதல் கண்மணி போன்ற படங்கள் பிரகாஷ் ராஜின் நடிப்பை தத்ரூபமாக வெளிக்காட்டிய படங்கள். சொல்லாததும் உண்மை என்று தனது கேரியர் உச்சத்தில் இருந்தபோது தொடரொன்றை முன்னணிப் பத்திரிக்கை ஒன்றிற்காக எழுதினார், இன்றளவும் பலபேரின் விருப்பமான புத்தகமாக அந்த நூல் உள்ளது.
சுதீப்
சூர்யாவின் ரத்த சரித்திரம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் சுதீப், தொடர்ந்து வெளியான நான் ஈ திரைப்படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தார். விஜய்யின் புலி படத்தில் வில்லனாக நடித்த சுதீப் தொடர்ந்து முடிஞ்சா இவனப் புடி என்னும் படத்தில் முழுநீள ஹீரோவாக நடித்தார். தற்போது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழுக்கு வருவார் என நம்புவோம்.கன்னடத்தில் பிரபலமான முன்னணி நடிகராக இருந்த போதிலும் கூட, தமிழில் வில்லன் நடிப்பை சுதீப் தொடர்வது நடிப்பின் மீதான அவரது காதலை வெளிப்படுத்துகிறது.
அனுஷ்கா ஷெட்டி
ராணியைப் பற்றி புதிதாக கூற எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன, அவற்றில் முக்கியமானது கர்நாடக(Karnataka) மாநிலம் மங்களூரில் பிறந்த அனுஷ்கா இதுவரை ஒரு கன்னடப் படம் கூட நடிக்கவில்லை என்பது தான். தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளிலும் ராணியாக நடித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், அருந்ததி, பாகுபலி, தெய்வத் திருமகள்,இஞ்சி இடுப்பழகி, ருத்ரமா தேவி போன்றவை அனுஷ்காவின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்களாகும். நடிகர்களின் ஆதிக்கங்களுக்கு மத்தியில் அனுஷ்காவை மனதில் கொண்டு கதை எழுதும் அளவிற்கு சக்தி வாய்ந்த நடிகையாக அனுஷ்கா திகழ்கிறார். அடுத்ததாக தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் பாகமதி திரைப்படத்தில் அனுஷ்கா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi