Health

இந்த ‘டாப் 10’ உணவுகள் உண்மையிலேயே ‘ஆரோக்கியமானது’ என்பது உங்களுக்குத் தெரியுமா?

Manjula Sadaiyan  |  Mar 1, 2019
இந்த ‘டாப் 10’ உணவுகள் உண்மையிலேயே  ‘ஆரோக்கியமானது’ என்பது உங்களுக்குத் தெரியுமா?

சிலவகை உணவுகளை நாம் ஆரோக்கியமற்றது என ஒதுக்கி வைத்திருப்போம். ஆனால் அதுபோன்ற உணவுகள் நமக்கு
உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியதாகவே இருக்கும். அதுகுறித்த உண்மையினை அறியும்போது அடடா இவ்ளோ நாள் இது தெரியாம இருந்துட்டோமேன்னு நம்மள நாமே லைட்டா திட்டிப்போம். ஆரோக்கியம் இல்லன்னு சொல்ற ஒரு உணவு எப்படி ஆரோக்கியமா இருக்க முடியும்னு யோசிக்கிறீங்களா? இத கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்கங்க.

பாப்கார்ன் (Popcorn)

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் தியட்டரையும், பாப்கார்னையும் என தாராளமாக சொல்லலாம். அந்தளவுக்கு அனைத்து தியேட்டர்களிலும் ஸ்நாக்ஸ் அயிட்டத்தில் மதிப்பு மிகுந்த முதலிடத்தை பாப்கார்ன் பிடித்துக் கொண்டுள்ளது. இதேபோல கலோரிகள் அளவும் இதில் குறைவாகவே இருக்கும். முழு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன்(Popcorn) ஆண்டி-ஆக்ஸிடண்கள் சேர்த்து பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. உங்களுக்குத் தெரியுமா? பாப்கார்ன்(Popcorn) சாப்பிடுவது நமது வாழ்க்கைமுறை தொடர்பான பிரச்சினைகளின் தீவிரத்தைக் குறைப்பதுடன் உங்கள் செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக பாப்கார்ன்(Popcorn) சாப்பிடலாம். ஆரோக்கியமற்ற உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானது தான் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பாப்கார்னை(Popcorn) சொல்லலாம்.

முட்டையின் மஞ்சள் கரு

கொழுப்புச்சத்து அதிகமுள்ளது என்பதால் பெண்கள் முட்டையின் மஞ்சள் கருவை அதிகம் சாப்பிட வேண்டாம் அது ஆரோக்கியமற்றது என கூறுவர். இதனால் பெரும்பான்மையான முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்கிவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவர். உண்மை என்னவெனில் முட்டையின் மஞ்சள் கருவை நியுட்ரிஷனல் (Nutritional) பவர்ஹவுஸ் என தாராளமாக சொல்லலாம். அந்தளவுக்கு அதில் பாஸ்பரஸ், வைட்டமின் டி, கனிமம், செலினியம், கொழுப்புகள் நிறைந்துள்ளன. எனவே ஒதுக்கி வைக்காமல் இனி முட்டையின் மஞ்சள் கருவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பால் பொருட்கள்

கொழுப்புச்சத்து நிறைந்தது என வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பால் பொருட்களை நாம் ஒதுக்கி வைத்திருப்போம். உண்மையில் இது தவறான செயல் ஆகும். ஓட்ஸ், பாதாம், அரிசி, தேங்காய்ப்பால் ஆகியவற்றில் 1 கிராம் அளவு மட்டுமே புரோட்டின் சத்து உள்ளது. இதனை ஒப்பிடும்போது ஒரு கிளாஸ் பாலில் 8 கிராம் அளவுக்கு புரோட்டின் சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பால் பொருட்களில் உள்ள கால்சியம் சத்து நமது எலும்பின் உறுதியை அதிகரித்து நீண்ட நேரம் நிற்பதற்கான வலிமையை அளித்திடும். அதனால் உங்கள் வீட்டில் பால் தொடர்பான பொருட்களுக்கு இனிமேல் தடா சொல்லாதீர்கள்.

காபி

உண்மையில் காபி பிரியர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்திதான். காபி அருந்துவது புற்றுநோய், இதயநோய் மற்றும் நீரிழிவு தொடர்பான நோய்களின் அபாயங்களை குறைக்கிறது. உங்கள் செல்கள்களுக்கு வயதாவதைத் தடுப்பதுடன், உங்களது எனர்ஜி மற்றும் மெமரி பவரினை உடனடியாக அதிகரிக்க செய்திடும் ஆற்றலும் காபிக்கு உண்டு. நல்லது தான் எனினும் ஒருநாளைக்கு 2-3 முறைக்கு மேல் காபி குடிப்பது நல்லதல்ல என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சாக்லேட்

டார்க் சாக்லேட்(Chocolate) அதிகம் சாப்பிடுகிறோம் என குற்ற உணர்ச்சிக்கு யாரும் ஆளாக வேண்டும். கோகோ பீனில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் அதிகளவில் உள்ளன. இது உங்கள் ஞாபக சக்தியையும், உணர்திறனையும் அதிகரிக்க செய்யும். உங்கள் மனநிலையை மேம்படச் செய்வதுடன் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் இது உதவிடும். அதனால் பெண்களே இனிமேல் சாக்லேட்(Chocolate) சாப்பிட யோசிக்காதீர்கள்.

பீனட் பட்டர் (Peanut Butter)

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் பீனட் பட்டர் உண்மையில் ஆரோக்கியம் மிகுந்தது. இதில் விட்டமின், நார்ச்சத்து, மினரல்கள் என ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.இதயம் மற்றும் இரத்தக்குழாய் சம்பந்தமான பாதிப்புகளை வெகுவாகக் குறைத்திட உதவும். எளிதில் ஜீரணமாகக் கூடியது.

உருளைக்கிழங்கு

அடுத்தமுறை யாராவது உங்களிடம் உருளைக்கிழங்கு சாப்பிடாதீர்கள் என கூறினால் அதனை புறக்கணியுங்கள். உண்மையில் உருளைக்கிழங்கில் விட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. சமைக்கும்போது உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விடாதீர்கள். அதில் தான் மேற்கண்ட சத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அழுக்கு மற்றும் பூச்சிக்கொல்லிகள் இருக்கும் என்பதால் உருளைக்கிழங்கின் தோலை நன்கு அலசி, கழுவிவிடுங்கள். வேகவைத்து சமைத்தால் அதில் உள்ள சத்துக்கள் குறையக்கூடும் என்பதால் முடிந்தவரை ரோஸ்ட் அல்லது பேக்கிங் முறையில் சமைக்க முயற்சி செய்யுங்கள்.

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்களா அல்லது பிரஷ் பழங்களா? என்ற சூழ்நிலை வந்தால் அனைவரும் பிரஷ் பழங்களைத் தான் தேர்வு செய்வோம். ஆனால் உலர்ந்த பழங்களில் தான் ஃபோலேட், பொட்டாசியம், நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் விட்டமின்கள் ஏராளமாக உள்ளன. வறுத்த திண்பண்டங்களை ஒப்பிடும்போது உலர் பழங்கள் சிறந்தவை. உலர்திராட்சை, அப்ரிகாட் உள்ளிட்ட பழங்களை ஓட்ஸ், யோகர்ட் மற்றும் பாலில் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது.

உறைந்த காய்கறிகள்

பிரஷ் காய்கறிகள் அல்லது உறைந்த காய்கறிகள் இரண்டில் எது சிறந்தது? என்ற விவாதம் இன்று வரைக்கும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் உறைந்த காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பிரஷ் காய்கறிகளுக்கு இணையானவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கலோரிகள் இதில் ஏராளமாக உள்ளன. உறைந்த காய்கறிகளில் பிரசர்வேட்டிவ்ஸ் மற்றும் சோடியம் அதிகளவில் சேர்க்கப்படுகிறது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் பெரும்பாலான உறைந்த காய்கறிகளில் இவை சேர்க்கப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அவகடோ

அவகடோ என நினைத்தவுடன் அது ஒரு கொழுப்பு நிறைந்த உணவு என்பதுதான் நம் அனைவரது ஞாபத்திற்கு வரும். அது உண்மைதான். ஆனால் அதில் நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ளன. அவகடோ நிச்சயம் ஒரு ஆரோக்கியமான உணவுதான். இது நமது உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரித்திட செய்யும், அதேநேரம் உங்களை பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திடவும் உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Health