
பெரும்பாலும் ஒப்பனை என்று வரும்போது நாம் எடுக்கும் முதல் படி பவுண்டேஷன் தான். இதுவே அனைத்து ஒப்பனைக்கான அடித்தளமாகும். இதில் பல வகைகள், பல அமைப்புகள், அதை எவ்வாறு பயன்படுத்துவது, மேலும் அதை கைவிரல்களால் பூசுவதா அல்லது பிரஷ்களை பயன்படுத்தி பூசலாமா என்று பல குழப்பங்கள் இருக்கலாம். இவை அனைத்தையும் மறந்துவிடுங்கள்!
இங்கு நாம் பார்க்க இருப்பதோ பவுன்டேஷன் – கன்சீலர் இவை இரண்டையும் பயன்படுத்தாமல் ஒரு அற்புதமான தோற்றத்தை எவ்வாறு அடையலாம் என்று தான் . ஆம்! இந்த இரண்டு முக்கியமான ஒப்பனை பொருட்கள் இல்லாமலும் ஒரு பொலிவூட்டும் தோற்றத்தை நாம் எளிதில் அடையலாம். மழைக்காலங்களிலும் மேகமூட்டத்துடன் இருக்கும் நாட்களிலும் சோர்வாக எண்ணெய் சருமத்துடன் இல்லாமால் காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடன் தோன்ற கீழ் கூறியிருக்கும் எளிய ஒப்பனை படிகளை பின்பற்றினால் போதும்.
முகம்
1. முதலில் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி துடைத்துக் கொள்ளுங்கள்.
2. பிறகு ஒரு துண்டில் இரண்டு அல்லது மூன்று ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு ஐந்து நிமிடத்திற்கு மிதமாக ஒத்தி எடுங்கள். இது உங்கள் முகத்தை பொலிவுடன் காட்ட உதவும். மேலும் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் பருக்களை மறைக்க உதவும்.
3. இப்போது நீங்கள் தினமும் பயன்படுத்தும் டே- க்ரீம் அல்லது மாய்ஸ்சுரைசரை உங்கள் முகத்தில் பூசிக் கொள்ளுங்கள்.
டிப் – ஜெல் அல்லது நீர் சார்ந்த மிதமான கிரீமை பயன்படுத்தினால் வியர்வையை தவிர்க்கலாம்
POPxo பரிந்துரைப்பது – கிளினிக் மொய்ஸ்ச்சர் ரிப்லேனிஷிங் ஹைட்ரேட்டர் (ரூ 890)
4. அடுத்து முக்கியமாக தேவைப்படும் பொருள் சன்ஸ்கிரீன்.
மழைக்காலங்களில் சன்ஸ்கிரீன் தேவைப் படாது என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். ஏனெனில் இக்காலங்களிலும் சூரியனின் கதிர் ஒளி நம்மீது பயந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் இருந்து பாதுகாப்பு அளிக்க உங்களுக்குத் எஸ் .பி. எஃப் (SPF) 50+ / PA +++ உள்ள சன்ஸ்கிரீன் லோஷன் மிக அவசியமானது.
POPxo பரிந்துரைப்பது – லாக்மே சன் எக்ஸ்பெர்ட் ஜெல் சன் ஸ்க்க்ரீன் (ரூ 313)
மேலும் படிக்க – உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டி !
இதைத்தொடர்ந்து அடுத்தபடியாக பவுண்டேஷனுக்குதான் (foundation) செல்வோம். ஆனால் இங்கே இதை இல்லாமல் எவ்வாறு உங்கள் தோற்றத்தை மேம்படுத்தலாம் என்று பார்க்கலாம் என்றுதானே கூறினோம் ?! ஆகையால் இந்த படியை தவிர்க்கவும்.
5. பவுண்டேஷன் – இதற்கு பதிலாக உங்கள் ப்ரைமரை எடுத்துக் கொள்ளுங்கள். பிரைமர் உங்கள் முகத்தில் இருக்கும் குறைபாடுகளை மறைக்க உதவும்.
டிப் – எண்ணெய் சருமத்திற்கு மேட் பினிஷும் வறண்ட சருமத்திற்கு டியூயி பினிஷ் கொண்ட பிரைமறை தேர்ந்தெடுங்கள்.
POPxo பரிந்துரைப்பது – வெட் அண்ட் வைல்ட் போட்டோ போகஸ் மேட் ப்ரைமர் ( ரூ 499 )
6. அடுத்து உங்கள் முகத்திற்கு ஏற்ற ஒரு சி.சி கிரீமை (CC cream) பயன்படுத்தவும். இதை முகத்தில் தேவைக்கேற்ப பூசிக்கொண்டு, இதற்கு மேல் ஒரு காம்பெக்ட் பௌடரை பயன்படுத்தி மிதமாக பூசவும்.
தேவைப்பட்டால் ப்ளெண்டிங் பிரஷை பயன்படுத்தி நுட் நிற ப்ளஷை உங்கள் தாடை வரிகளில் பூசி முகத்திற்கு வடிவம் குடுக்கலாம்.
POPxo பரிந்துரைப்பது – லக்மே 9 to 5 பேஸ் சி கிரீம் (ரூ 227), மேபியின் நியூ யார்க் சூப்பர் பிரெஷ் காம்பெக்ட் (ரூ 160), மேபியின் நியூ யார்க் கொண்டோர் பாலெட் (ரூ 950)
இத்துடன் முகத்திற்கு தேவையான அடித்தள ஒப்பனை முடிகிறது.
கண்கள்
7. கண்களுக்கு உங்கள் ஆடைக்கு பொருத்தமுள்ள ஏதேனும் ஒரு ஐ ஷாடோவை தேர்ந்தெடுத்து முதலில் பூசிக்கொள்ளுங்கள்.
ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? படிப்படியான விளக்கங்கள் உடன் சில உத்திகள்
8. அதற்கு மேல் ஜெல் ஐ-லைனரை பயன்படுத்தி கேட்-ஐ அல்லது ஏதேனும் ஒரு வடிவத்தை வரைந்து கொள்ளுங்கள்.
9. மஸ்காரா மிக முக்கியமான ஒன்றாகும்! அதிக பரிமாணமுள்ள தோற்றத்தை குடுக்கும் மஸ்காராவை (voluminous mascara)பயன்படுத்தி உங்கள் கண் இமைகளை மேலும் பெரிதாக காட்டலாம்.
புருவங்களுக்கு ஏற்ற ஒரு ஐ-ப்ரோ பென்சில் பயன்படுத்தி மேலும் அடர் நிறமாக மாற்ற அதற்கு தேவையான வடிவத்தை குடுத்து வரைந்து கொள்ளுங்கள்.
உதடுகள்
10. உங்கள் உதட்டிற்கு ஏதேனும் ஒரு மந்தமான உதட்டுச் சாயத்தை பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு முரணாக மிதமான ரெட், கோரல் ,லைட் ஆரஞ்சு , பீச் அல்லது இவ்வரிசையில் சேர்ந்த ஏதேனும் ஒரு நிறத்தை பூசிக் கொள்ளலாம்.
POPxo பரிந்துரைப்பது – எல் 18 கோரல் டோஸ் (ரூ 100)
டிப் – உங்கள் ஐ ஷாடோவும் உதடுகளும் ஒரே நிறத்தில் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
மேலும் ஒரு லிப் கிளாஸை பயன்படுத்தினால் இன்னும் அற்புதமான பளிச்சிடும் தோற்றத்தை நீங்கள் அடையலாம்.
கடைசியாக எந்தவிதமான மேக்கப்பாக (makeup) இருந்தாலும் சரி உங்களுக்கு மிக உதவியாக இருப்பது ப்ளோட்டிங் பேப்பர். இது உங்கள் கைப்பையில் நிச்சயம் இருக்க வேண்டி ஒரு பொருளாகும். ஏனெனில் உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணையை அகற்றி மெட் பினிஷை கொடுத்து மேலும் ஒரு பொலிவூட்டும் தோற்றத்தை எளிதில் அளிக்க உள்ளது.
POPxo பரிந்துரைப்பது – பலாடியோ ரைஸ் பேப்பர் (ரூ 315)
அவ்வளவுதான் ! பவுண்டேஷன் – கன்சீலர் இல்லாமல் ஒரு அற்புதமான தோட்டத்திற்கு தயாரா?!
பட ஆதாரம் – Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.