Dating

உங்க ஆளோட ‘லிவிங் டு கெதர்’ல இருக்க போறீங்களா?.. இத கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க!

Manjula Sadaiyan  |  Feb 26, 2019
உங்க ஆளோட ‘லிவிங் டு கெதர்’ல இருக்க போறீங்களா?.. இத கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க!

என்னதான் காதலித்தாலும் ஒருவரை ஒருவர் நன்கு பழகித்தெரிந்து கொள்ள வேண்டும் என ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்கும் லிவிங் டு கெதர்(living
together) வாழ்க்கைமுறை சென்னை போன்ற பெருநகரங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காதல், திருமணம், பிரேக்கப் போல லிவிங் டு
கெதர்(living together) குறித்த தெளிவான புரிதல்கள் இங்கு பலரிடத்திலும் இல்லை.இது சரியா? தவறா? என்பது அவரவர்கள் மனநிலையைப் பொறுத்தது என்பதால், அதுகுறித்த விவாதங்களை இங்கே நிகழ்த்த வேண்டாம்.

அதே நேரம் திருமணம் போல லிவிங் டு கெதர்(living together) வாழ்க்கை முறையிலும் சில விஷயங்களை நீங்கள் கரெக்டாக செய்தால், உங்கள்
இருவருக்கும் இடையிலான உறவானது எப்போதும் உயிரோட்டமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். நீங்களும் உங்களவரும்(Partner) ஒரே வீட்டில்
வசிக்கும்போது சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது தொடங்கி பல்வேறு விஷயங்களையும் நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டியது இருக்கும். அது என்னென்ன மாதிரியான விஷயங்கள் என்பதை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

காதலியுடன் விளையாட வேடிக்கையான குறுஞ்செய்தி விளையாட்டுகளையும் படிக்கவும்

பொறுப்புகளை

ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கும்போது அந்த வீடு உங்கள் இருவருக்கும் சொந்தமானதாக இருக்கும். அதே நேரம் நீங்கள் இருவரும் சில பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். யார் யார் என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும்? என்பதை இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுங்கள். வீட்டுக்கு அட்வான்ஸ்,வாடகை கொடுப்பது போன்ற விஷயங்களையும் இந்த நேரத்தில் மனந்திறந்து பேசிவிடுங்கள். காய்கறி
வாங்குவதில் தொடங்கி கரெண்ட் பில் செலுத்துவது வரை இருவருக்குமான வேலைகளை சரிசமமாக பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் வீடு
தொடர்பான வேலைகள் உங்களுக்கு ஒரு சுமையாக இருக்காது.

சேர்ந்து ஷாப்பிங்

இந்த வாழ்க்கை முறையில் யாரும் உங்களுக்கு வந்து அதை செய், இதை செய் என அறிவுரை கூறிக்கொண்டு இருக்க மாட்டார்கள். அதனால்
ஜன்னல்களுக்கு தேவையான திரைச்சீலைகள் தொடங்கி உங்கள் இருவருக்கும் வாழ்வதற்குத் தேவையான தலையணை, சமைக்கும் பொருட்கள், மளிகை சாமான்கள், காய்கறி,பழங்கள் என வீட்டுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிட இருவரும் சேர்ந்து ஷாப்பிங் சென்றிடுங்கள். இது ஒருவரை நன்றாகப் புரிந்து கொள்வதற்கு மட்டுமின்றி, உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை மற்றவர் தெரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ஒருவருக்காக மற்றவர் சமைப்பது

இருவரும் சேர்ந்து சமைப்பதை விட ஒருவருக்காக மற்றவர் சமைப்பது எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல் தான். ஏனெனில் இதில் நீங்கள் என்ன
சமைக்கப் போகிறீர்கள் என்பது பெரும்பாலான நேரங்களில் உங்கள் ஆளுக்குத்(Partner) தெரியாது. டைனிங் டேபிளில் அவருக்கு பிடித்த
அயிட்டங்களுடன் உங்களது பேவரைட் டிஷ்களும் இடம் பெறலாம். இது உங்கள் இருவருக்குமான அன்பை அதிகரிப்பதுடன், நீண்ட காலத்திற்கு உங்கள் காதலை உயிரோட்டமாக வைத்திடவும் உதவும்.

பிடிக்காத விஷயங்களை

எந்தவொரு உறவிலும் தகவல் தொடர்பு என்பது ரொம்பவும் அவசியம். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதனை
உடனுக்குடன் பேசித் தீர்த்து விடுங்கள். அதை விட்டுவிட்டு அவன் வந்து பேசட்டும் என்று இருவரும் முறுக்கிக்கொண்டு திரிய வேண்டாம். பெட்ரூமில் ஈரமான துண்டை அப்படியே போட்டு வருவது தொடங்கி உங்கள் இருவருக்கும் இடையில் எந்தெந்த விஷயங்கள் டிஸ்டர்ப் ஆக உள்ளது என்பதை பேசுங்கள். மவுனமாகத் தொடங்கும் இந்த உரையாடல், கடைசியில் இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து சிரிப்பதில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பொருட்களை சுத்தமாக வைத்திடுங்கள்

சேர்ந்து வாழும்போது இது ரொம்பவே முக்கியம். பேச்சுலராக இருந்தபோது நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து இருக்கலாம். ஆனால்
ஒருவருடன் சேர்ந்து வாழும்போது சுத்தமாக இருப்பது ரொம்பவே முக்கியம். பாத்திரங்களை கழுவாமல் சிங்கில் அப்படியே போட்டு வைப்பது,
துணிகளை கண்ட இடத்தில் போடுவது, படுக்கை விரிப்புகளை எடுத்து வைக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் உங்கள் இருவரில் யாரிடம்
இருந்தாலும் மாற்றிக்கொள்ளுங்கள். அதேபோல வீட்டை அடிக்கடி ஒட்டடை அடித்தும், தரையை மாப் போட்டும் சுத்தம் செய்திட பழகுங்கள். காலணிகளை ஸ்டாண்டில் விட்டு பழகுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் இந்த பழக்கங்கள் உங்கள் நன்மைக்காக என்பதை கருத்தில் கொண்டால் நாளடைவில் உங்களுக்கு இது சுலபமாகி விடும்.

மாற்றத்திற்கு தயாராக இருங்கள்

நீங்கள் புதிதாக ஒருவருடன் ஒரே வீட்டில் வசிக்கும்போது ஆரம்பத்தில் உங்களுக்கு சில குழப்பங்கள் ஏற்படலாம். அதனால் எப்போதும்
மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். உங்களுக்கு தோசை பிடித்தால் அவருக்கும் தோசை பிடிக்க வேண்டும் என கட்டாயமில்லை. அவர் சப்பாத்தி
செய்தாலும் சாப்பிட தயாராக இருங்கள். நாளடைவில் இதேபோல அவரும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்திட முன்வருவார்.

பாத்ரூம் விதிகள்

உங்கள் புதிய வீட்டில் பாத்ரூம் விதிகள் முக்கியமாக இருக்கட்டும். ஹீட்டர் தொடங்கி வெஸ்டர்ன் டாய்லெட்டா? இந்தியன் டாய்லெட்டா? பாத்ரூமில்
ஷவர் கண்டிப்பாக வேண்டுமா? கதவுகளில் கொக்கிகள் அவசியம் வேண்டுமா? என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். முதன்முறையாக நீங்கள் ஒரு பையனுடன் சேர்ந்து வசிக்கப் போகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

தனிமை அவசியம்

இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்தால்(living together) எந்நேரமும் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதில்லை. உங்களவர் சற்று தனிமையாக இருக்கவும் இடம் கொடுங்கள். அந்த நேரத்தை அவர் புக் படிக்க பயன்படுத்துகிறாரா? இல்லை ஓய்வெடுக்க பயன்படுத்துகிறாரா? நண்பர்களுடன் அரட்டை அடிக்க பயன்படுத்துகிறாரா? என்பது அவசியமில்லை. ஆனால் இருவருக்கும் சற்று தனிமை வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ரொமான்ஸ்

ஒரே வீட்டில் வசிக்கும்போது உங்கள் இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் செய்ய நிறையவே நேரம் இருக்கும். அதனால் இருவரும் சேர்ந்து
இருக்கிறோமே என அசட்டையாக இருந்து விடாதீர்கள். உங்கள் உறவை உயிரோட்டமாக வைத்திட அவருக்கு அடிக்கடி சின்னச்சின்னதாக சர்ப்ரைஸ்
கொடுத்துக்கொண்டே இருங்கள். கிரீட்டிங் கார்டு, டீ-ஷர்ட், பூக்கள், சாக்லேட் என உங்கள் அன்பை ஏதாவது ஒரு வழியில் அவருக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள். இது உங்கள் இருவருக்குமான அன்பை மென்மேலும் அதிகரித்திட உதவிடும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Dating