Lifestyle

‘காலங்காத்தால’ 4 மணிக்கு செம சூடா ‘பிரியாணி’ சாப்பிடனுமா?

Manjula Sadaiyan  |  Feb 12, 2019
‘காலங்காத்தால’ 4 மணிக்கு செம சூடா ‘பிரியாணி’ சாப்பிடனுமா?

நைட் ஷிப்ட் முடிச்சிட்டு விடிஞ்சும், விடியாத கருக்கல்ல வீட்டுக்கு போகும்போது அந்த நேரத்துக்கு டீ,காபி,பால்,பிஸ்கட்,வாழைப்பழம் இந்தமாதிரி அயிட்டங்கள் தான் கெடைக்கும். பசி வயித்தக் கிள்ளுனாலும் வேற வழியில்லாம கெடைச்சத சாப்பிட்டு போய் படுத்துக்க தான் தோணும். ஆனா இதுல ஒரு கஷ்டம் என்னனு பார்த்தீங்கனா அரை கொறையா சாப்பிட்டு போய் படுக்குறதால சீக்கிரமே முழிப்பு தட்டிரும். திரும்ப எந்திரிச்சி சாப்பிட்டு மணி பார்த்தா வேலைக்கு போகவேண்டிய ‘டெட்லைன்’ நெருங்கி இருக்கும்.

என்னடா வாழ்க்கை இது? கஷ்டப்பட்டு சம்பாதிக்குறோம். ஆனா நிம்மதியா சாப்பிட வழி இல்லையேன்னு நைட் ஷிப்ட் போற ஐடி ஊழியர்கள்
பொலம்புறத அடிக்கடி பார்த்திருப்போம். இவங்களோட கொறைய தீக்குறதுக்கு ஒரு முன்னாள் ஐடி ஊழியர் தான் வரணும்னு எழுதி இருந்துருக்கும் போல. எஸ் முன்னாள் ஐடி ஊழியர் மனோஜ் தன்னோட இனமான ஐடி ஊழியர்கள் கஷ்டப்படுறத தாங்க முடியாம சென்னைல(Chennai) ஒரு பிரியாணி(Biryani) கடை திறந்திருக்காரு.

அவரோட கடை பேரு‘ஆட்டோ பிரியாணி’(Auto Biryani). இந்த பிரியாணி(Biryani) கடையில் அதிகாலை 4 மணியில இருந்து 7 மணி வரைக்கும் பிரியாணி(Biryani) விற்பனை கொடிகட்டிப் பறக்குது. சிக்கன் பிரியாணியும், சிக்கன் 65-யும் ஆட்டோ பிரியாணி கடையின் தினசரி மெனுகார்டில் இடம்பெறும் அயிட்டங்கள். தவிர, பிரெட் அல்வா, பீப் பிரியாணி உள்ளிட்ட ஸ்பெஷல் அயிட்டங்களும் அவ்வப்போது விற்கப்படுகிறது. இதில் விஷயம் என்னவென்றால்,அந்த அதிகாலையில் ஒரு பெரும் கூட்டமே கடை முன்னால் நின்றபடி பிரியாணியை ஃபுல் கட்டு கட்டுகிறது என்பது தான்.

எங்கே இருக்கு

சென்னை (Chennai)கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜயா ராஜா கல்யாண மண்டபம் எதிரில் ஆட்டோ பிரியாணி கடை அமைந்துள்ளது. மேடவாக்கத்தில்(Chennai) இருந்து 5 நிமிடங்களில் செல்லலாம். ஓஎம்ஆர் பகுதியில் இருந்து 20 நிமிடங்களில் செல்லலாம். அதிகாலை பிரியாணியா? என ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், காலையில பிரியாணி(Biryani) சாப்பிட்டா என்ன ஆகுறது? என எதிர்ப்பாளர்களும் கிளம்ப ஆரம்பித்துள்ளனர்.

வீட்டு சமையல்

இதுகுறித்து கடை உரிமையாளர் மனோஜ் கூறும்போது,” பிரியாணிக்கு தேவையான பொடிகள் எல்லாவற்றையும் நாங்களே வீட்டில் தயாரிக்கிறோம். குறைந்த எண்ணெய் பயன்படுத்தி வீட்டில் சமைப்பது போலத்தான் செய்கிறோம். மத்தவங்களுக்கு தான் அது அதிகாலை ஆனா, ஐடி ஊழியர்களுக்கு அது நள்ளிரவு போலத்தான். அந்த நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் தூங்குவதற்கு பிரியாணி சாப்பிட்டு தூங்குவது எவ்வளவோ மேல்,” என்கிறார்.

என்னென்ன அயிட்டங்கள்

ஆட்டோ பிரியாணி(Auto Biryani) கடையில் மறுநாள் என்னென்ன அயிட்டங்கள் கிடைக்கும் என்பதை முதல்நாளே தங்களது பேஸ்புக்(Facebook) பக்கத்தில் சொல்லி விடுகின்றனர். அதுபோல மறுநாள் அதிகாலை சரியாக 4.20 மணிக்கு விறகு அடுப்பில் வேகவைத்த சிக்கன் தம் பிரியாணி ரெடியாக உள்ளது. இதுதவிர பீப் பிரியாணி, சிக்கன் லாலிபாப், சிக்கன் 65, சிக்கன் புல் லெக், பன்னீர் சோடா, பிரெட் அல்வா ஆகியவை சுடச்சுட சுவையாக கிடைக்கிறது. உங்களுக்கு பிரியாணி சாப்பிட ஆசையாக உள்ளது என்றால் போன் வழியாகவும் உங்கள் பிளேட்டுகளை புக்கிங் செய்து கொள்ளலாம்.

ஆரம்பத்தில்

கடை திறந்த ஆரம்பத்தில் பெரிதாக வியாபாரம் இல்லை. மிஞ்சிய பிரியாணியை தினசரி வீட்டுக்கு எடுத்து செல்லும் நிலையே இருந்துள்ளது.
தொடர்ந்து பேஸ்புக்(Facebook) பக்கம் ஒன்றைத் தொடங்கி தங்களது பிரியாணி குறித்து போஸ்டுகள் போட ஆரம்பித்துள்ளனர். மேலும் யூ-டியூப்
சேனல்களிலும் ஆட்டோ பிரியாணி(Auto Biryani) குறித்த வீடியோக்கள் பரவ தற்போது இந்த பிரியாணி கடைக்கு ஐடி ஊழியர்கள், பிரியாணி ரசிகர்கள்
மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஐடி தவிர்த்து

ஐடி மக்களுக்காக தொடங்கப்பட்ட கடை என்றாலும் தினசரி அந்த வழியாக செல்லும் பிற தரப்பினரும், இந்த பிரியாணியை விரும்பி வந்து சாப்பிட்டு
செல்கின்றனர். இதுதவிர பிரபல புட் டெலிவரி ஆப்களில் ஒன்றான சொமாட்டோவிலும்(Zomato) இந்த பிரியாணியை நீங்கள் ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடலாம்.ஆட்டோ பிரியாணிக்கு(Auto Biryani) மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து சென்னையில் மேலும் 3 இடங்களில் விரைவில் கிளைகளை திறக்க மனோஜ் திட்டமிட்டுள்ளார்.

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

Read More From Lifestyle