
பெரும்பாலான தாவர வகைகளில் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன. தாவரங்களின் வேர், இலை, மரப்பட்டை, காய், கனி போன்றவை மருத்துவத்திற்காக பயன்படுகின்றன. சில தாவரங்களின் பூக்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. அதில் ஆவாரம் பூ (avarampoo) மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகை ஆகும். இந்த ஆவாரம் பூ பற்றிய சில பயன்பாடுகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆவாரம் பூவின் மருத்துவ பலன்கள்
- ஆவரம்பூவிற்கு காய்ச்சலை குணப்படுத்தும் சக்தி உள்ளது. பெரும்பாலான காய்ச்சல்கள் ஏதாவது ஒரு வகை நுண்ணுயிரி தொற்றுகள் மூலமே ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை மூன்று வேளை கொடுத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.
pixabay
- சிறுநீரக தோற்று பாதிப்புகள் ஏற்பட்டால் வெகு சீக்கிரமாக குணம் ஆகாது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து (avarampoo) செய்யப்படும் ஜூஸை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும். புதிதாக பறித்த ஆவாரம்பூவுடன், தேன் சேர்த்து ஜூஸ் செய்து அருந்த வேண்டும்.
- நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஆவாரம்பூவை தொடர்ந்து சாப்பிட வேண்டும். ஆவரம்பூக்களை பறித்து நிழலில் காயவைத்து கொள்ள வேண்டும். காய்ந்த பூக்களை எடுத்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர வேண்டும். இதனை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
- மேலும் இதனை அருந்தினால் கல்லிரலில் நச்சுக்களையும் எளிதாக வெளியேற்ற முடியும். கல்லீரலில் தேங்கி இருக்கும் நச்சுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. ஆவரம்பூக்கள் சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்துவதால், நச்சுக்கள் வெளியேறி கல்லீரல் பலப்படும்.
pexels,
- ஆவாரம் பூவிற்கு (avarampoo) இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் உள்ளது. புட் பாய்சன் ஆனவர்களுக்கு ஆவாரம் பூ கஷாயம் செய்து கொடுக்க வேண்டும். புட் பாய்சனால் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கிற்கு ஆவாரம் பூ நல்ல மருந்தாகும்.
- ஆவாரம் பூக்களை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி சூடான பாலில் கலந்து சிறிது சர்க்கரை போட்டு காலை, மாலை குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, பெரும்பாடு மற்றும் வெள்ளைப்படுதல் ஆகியவை குறையும்.
அத்திபழத்தின் நன்மைகள் – சரும மற்றும் உடல் ஆரோக்கியம் பெற அத்திப்பழம்!
- சில பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலியும் குறையும். மேலும் கர்ப்பப்பையில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டுள்ளது.
pixabay
- மெட்ராஸ் ஐ எனப்படும் கண் சம்பந்தமான பாதிப்பு ஏற்படும் காலங்களில் ஆவாரம் பூக்களை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அதனை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் வடி கட்ட வேண்டும். அதன் சாற்றின் சில துளிகளை அவ்வப்போது கண்களில் விட்டு வந்தால் கண்ணில் இருக்கும் கிருமிகள் அழிந்து, கண்கள் மீண்டும் பழைய நிலையை விரைவில் வரும்.
கரும்புள்ளிகளை நீக்கி களையான முகம் பெற சில பெஸ்ட் குறிப்புகள் !
- உடல் சூட்டால் கண்கள் சிவந்து காணப்பட்டால், ஆவாரம்பூவை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையின் படி இதனை செய்யவும்.
- ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும். இதனை சூடான பால் கலந்து குடித்து வர உடம்பு வலுவடையும்.
- ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி அரைத்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
அழகு குறிப்புகள்
- சில பெண்களுக்கு முகத்தில் அதிகமாக முடி காணப்படும். இந்த தேவையில்லாத முடிகளை நீக்க கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்திலுள்ள தேவையில்லாத முடிகள் உதிர்ந்து பார்ப்பதற்கு முகம் வசீகரமாக இருக்கும்.
- ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
pixabay
- ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து வைத்து கொள்ளுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரை தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.
- ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்து அரைத்து கொள்ளுங்கள். வாரம் ஒரு தடவை இந்த கலவையை தலைக்கு தேய்த்து குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும். ஆவாரம் பூ தற்போது நாட்டு மருந்து கடைகளில் பாக்கெட்டுகளாக கிடைக்கிறது. இந்த பூவை வாங்கி பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சிம்பிள் டயட்ஸ்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.