கரும்புள்ளிகளை நீக்கி களையான முகம் பெற சில பெஸ்ட் குறிப்புகள் !

கரும்புள்ளிகளை நீக்கி களையான முகம் பெற சில பெஸ்ட் குறிப்புகள் !

முகம் என்பது நம் அகம் காட்டும் கண்ணாடிதான். ஆனால் அழகாக தோற்றமளிப்பது என்பது அதன் பொருள் அல்ல. மகிழ்வான தெளிவான முகமே அகம் காட்டும் கண்ணாடி ஆகும். ஆனாலும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் (Pigmentation) நமது நம்பிக்கையை கொஞ்சம் அசைத்துதான் பார்க்கிறது.       

குறிப்பாக 40 வயதுக்கு மேலானவர்களுக்கு வரும் பிக்மென்டேஷன் எனப்படும் சிக்கல்கள் இது நாள்வரை அவர்கள் வாழ்வில் கொண்டிருந்த தன்னம்பிக்கையை சற்றே தகர்க்கின்றன. அத்தகைய கரும்புள்ளிகளை (Pigmentation) நீக்க சில பெஸ்ட் குறிப்புகளை தேர்ந்தேடுத்து உங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறோம்.                         

pixabay, pexels

ஆரஞ்சு தோல்களை நிழலில் உலர வைத்து அதனை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அடிக்கடி இந்தப் பொடியை எடுத்து சிறிதளவு பால் மற்றும் ரோஸ்வாட்டர் சேர்த்து பசைபோல கலக்கி முகத்தில் பேக் போடுங்கள். சில நிமிடங்களில் கழுவி விடுங்கள். சில வாரங்களில் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகளுக்கான சுவடுகளே இருக்காது.                                                

முழு எலுமிச்சம்பழ சாறை தயிருடன் கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி உலரவைத்து பின்னர் வெந்நீர் மூலம் கழுவி வர முகம் பொன்னென மின்னும். கரும்புள்ளிகள் (pigmentation) காணாமல் போகும்.

 

pixabay, pexels

ஜாதிக்காயை நன்கு கழுவிய பின்னர் சுத்தமான குடிதண்ணீரில் நான்கு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதனை நன்கு அறைக்கு பேஸ்ட் பதத்தில் எடுக்கவும். இந்தக் கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும். இப்படி செய்தால் ஒரே வாரத்தில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் கவர்ச்சிகரமாக மாறும்.                             

சிறிதளவு மலைத்தேனை எடுத்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் ஆயின்மென்ட் போலத் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். தேன் சருமத்தை இறுக்கமாக்கி கரும்புள்ளிகளை அகற்றும்.

pixabay, pexels

தூங்க போகும் நேரத்தில் இரண்டு ஸ்பூன் கருவேப்பிலை சாறுடன் அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவி விட்டு காலையில் எழுந்ததும் முகம் கழுவுங்கள். தழும்புகள் இருந்தால் அதன் மீதும் தடவலாம். உங்கள் முகம் கரும்புள்ளிகளில் இருந்து விடுதலை பெறுவதை கண்டு மகிழ்வீர்கள்.

அரிசிமாவு 3 ஸ்பூன் அல்லது நான்கு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பால் சேர்த்து நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் இந்தக் கலவையை மையாக அரைத்து முகத்தில் தடவுங்கள். அரிசிமாவு முகத்தில் உள்ள கருந்திட்டுக்களை மறைய செய்யும்.

பிரெஷ்ஷான கொத்தமல்லி தழைகளை கொஞ்சம் மஞ்சள் சேர்த்து அரைத்து பசைபோல மாற்றி முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் என்றால் என்ன என்று உங்கள் முகம் உங்களைக் கேட்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.