Lifestyle

யாருக்கு பவுலிங் கொடுக்கணும்னு ‘அட்வைஸ்’ கேட்காத?.. தெறிக்கும் மீம்ஸ்கள்!

Manjula Sadaiyan  |  Mar 22, 2019
யாருக்கு பவுலிங் கொடுக்கணும்னு ‘அட்வைஸ்’ கேட்காத?.. தெறிக்கும் மீம்ஸ்கள்!

இந்தியா-பாகிஸ்தான் மேட்சுக்கு இணையாக நாளை நடைபெறப்போகும் சென்னை(CSK)-பெங்களூர்(RCB) அணிகளின் ஆட்டத்தை சொல்லலாம்.

நடப்பு கேப்டன் vs முன்னாள் கேப்டன் இருவரையும் கேப்டனாகக் கொண்ட அணிகள் மோதும் ஆட்டம், நடப்பு சாம்பியன் சென்னை(CSK) அணி சொந்த மண்ணிலேயே தனது முதல் போட்டியை ஆடுவது, சொந்த மண் பலம், அன்பான ரசிகர்கள் என ஒட்டுமொத்த சென்னையுமே(CSK) இந்த போட்டியை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறது.

தோனி

தோனி(Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) அணி இதுவரை 2010,2011, 2018 என மூன்றுமுறை மொத்தம் கோப்பை வென்றுள்ளது. இதுதவிர 4 முறை இறுதிப்போட்டி வரை வந்து 2-வது இடம் பெற்றுள்ளது. வேறு எந்த அணியும் செய்யாத ஒரு மிகப்பெரிய சாதனை இது.இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும் கூட கடந்த ஆண்டு களத்தில் குதித்து சென்னை அணி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

விருப்பம்

இதனால் இந்த ஆண்டும் சென்னை(CSK) அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சிஎஸ்கே(CSK) ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 11 ஆண்டுகளில் இதுவரை சென்னை அணியின் கேப்டனாக தோனி(Dhoni) தவிர வேறு யாரும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் கேப்டனாக நடப்பு இந்திய அணியின் கேப்டன் கோலி(Kohli) இருக்கிறார். கோலி(Kohli), டிவிலியர்ஸ் தொடங்கி ஏராளமான நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட அந்த அணி கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அரை இறுதிக்கு கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) தகுதி பெறாமல் போனதுதான் இதில் உச்சகட்டம்.

கோப்பை வெல்லுமா?

இதனால் இந்த வருடம் அந்த அணி கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடும் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தரும் கோலி(Kohli) தன்னுடைய பெங்களூர் அணிக்கு இந்த வருடம் கோப்பையை பரிசளிப்பாரா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாளை நடைபெறப்போகும் சென்னை-பெங்களூர் போட்டியையொட்டி சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்து இருக்கின்றன. நாளை இது இன்னும் உச்சக்கட்டத்தில் இருக்கும். அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே தொகுத்துக் கொடுத்து இருக்கிறோம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle