Lifestyle

ஆபாச படங்கள் பார்க்காம இருக்க முடியலயா?.. அப்போ இது உங்களுக்குத்தான்!

Manjula Sadaiyan  |  Feb 6, 2019
ஆபாச படங்கள் பார்க்காம இருக்க முடியலயா?.. அப்போ இது உங்களுக்குத்தான்!

தங்களின் வருகையால் இன்று உலகையே உள்ளங்கைக்குள் இருப்பது போன்ற நிலையை ஸ்மார்ட்போன்கள்(Smart Phone) உருவாக்கி விட்டன. நினைத்த நேரத்தில் நினைத்த நபர்களுடன் பேச வீடியோ கால், ஆடியோ கால் என எக்கச்சக்க வசதிகள் உள்ளன. சக நிறுவனங்களின் போட்டி, மக்களின் ஆர்வம், மார்க்கெட் போன்ற பல்வேறு காரணங்களால் சந்தையில் தாக்குப்பிடிக்க ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு யுக்தியை
கையாளுகின்றன.தங்களது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்யும் பொருட்டு டெலிகாம் நிறுவனங்களும் போட்டியில் குதிப்பதால் ஸ்மார்ட் போன்(Smart Phone) வைத்திருப்பவர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

போட்டி போட்டுக்கொண்டு டெலிகாம் நிறுவனங்கள் அளிக்கும் டேட்டா வசதியால் நெட்டில் எதையாவது பார்த்து பொழுதுபோக்குவது இன்றைய
தலைமுறையினர் மத்தியில் சகஜமாகி வருகிறது. குறிப்பாக ஆபாச படங்களை(Porn Videos) பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆபாச தளங்களின் எண்ணிகையும் புற்றீசல்கள் போல பெருகி வருகின்றன. முன்பெல்லாம் மது குடிப்பது, ஆபாச படங்கள்(Porn Videos) பார்ப்பது போன்றவை குற்றமாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று எங்கும் எதிலும் ஆபாசம் நிறைந்து கிடக்கிறது. பத்திரிகைகளில் கூட இதுபோல செய்திகள் அதிகளவில் வர ஆரம்பித்து விட்டன. தொலைக்காட்சி, கேம் ஷோக்கள், சினிமாக்கள் தொடங்கி அனைத்திலும் குப்பையைப் போல ஆபாசம் குவிந்து கிடக்கிறது. முன்பெல்லாம் இலைமறைகாயாக காட்டிவந்த ரொமான்சை இன்று நேரடியாகவே காட்ட ஆரம்பித்து விட்டனர். இதில் சமூக வலைதளங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில் ஆபாச வீடியோக்களை(Porn Videos) தொடர்ந்து பார்ப்பவர்கள் ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாகி விடுவதாக கூறப்படுகிறது. இங்கு ஆபாச தளங்களால் ஏற்படும் தீமைகளையும் அவற்றில் இருந்து விடுபடும் வழிகளையும் காண்போம்.

இந்தியா சாதனை

உலகளவில் ஆபாச படம்(Porn Videos) பார்ப்பவர்கள் பட்டியலில் 3-வது இடம் இந்தியாவுக்கு(India) கிடைத்துள்ளது.125 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால் உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா(India) திகழ்கிறது. இதனை வைத்து மற்ற நாடுகள் தங்கள் வருவாயை பெருக்கிக்கொள்கின்றன. இதேபோல ஆபாச தளங்களும் இந்தியாவை(India) வைத்து பெருமளவு லாபத்தை ஈட்டிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

அதிக டேட்டா ஆபத்து

உங்கள் ஸ்மார்ட் போனில்(Smart Phone) டேட்டா ரீசார்ஜ் செய்யும்போது அதிக டேட்டா பிளானை தேர்ந்தெடுக்காதீர்கள்.டேட்டா மிச்சம் இருந்தால் கண்ட சைட்டுகளுக்கும் செல்லத் தோன்றும். இது நடைபெறாமல் இருக்க வேண்டும் எனில் குறைவான டேட்டா பிளானை தேர்ந்தேடுங்கள். சமூக
வலைதளங்களில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம்.உருப்படியாக உங்களுக்கு என்ன விஷயம் தேவையோ அதனை மட்டும் பாருங்கள். டேட்டா மிச்சம் இருந்தால் பதறாமல் விட்டுவிடுங்கள். சாப்பாடு வீணாகிறதே என தினந்தோறும் மிச்சப்படும் சாப்பாட்டை உங்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் நாளடைவில் உடல் எடை தொடங்கி பல்வேறு பிரச்சினைகளுக்கும் அது காரணமாகி விடும். அதுபோல தான் இதுவும்.

ஆபாச தளங்கள்

ஆபாச தளங்களுக்கு அடிக்கடி சென்று அதற்கு அடிக்ட் ஆகிவிட்டீர்கள் என்றால் உடல்,மனம் என இருவழிகளிலும் உங்களுக்கு பிரச்சினை ஏற்படும். ஒருவேளை இது உங்கள் வேலையில் எதிரொலித்தால் வேலையை விட்டு நீங்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலையும் வரலாம். உங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற தளங்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதுபோன்ற வீடியோக்களை பார்க்கிறீர்கள் என தெரிந்தால் பிறர் மத்தியில் உங்கள் மதிப்பும், மரியாதையும் வெகுதூரம் கீழிறங்கக் கூடும் என்ற நிதர்சனத்தை உணருங்கள்.

ஏன் பார்க்கிறீர்கள்?

ஏன் இதுபோன்ற தளங்களைப் பார்க்கிறீர்கள்? என யோசியுங்கள். ஒருவேளை நீங்கள் தனித்து வாழ்பவராக இருந்தால் மற்றவர்களுடன் இணைந்து அறையை பகிர்ந்து கொள்ளுங்கள். தனிமை விரும்பியாக இருந்தால் புத்தகம் படிப்பது, டான்ஸ் ஆடுவது,சமைப்பது என உங்களுக்குப் பிடித்த செயல்களில் மனதை செலுத்துங்கள். உங்களுக்கு அதிக தனிமை கிடைக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். திருமணமாகி தனியாக வசித்தால் சேர்ந்து வாழ்வதற்கு வழி தேடுங்கள். இல்லை திருமண வாழ்வு தோல்வியில் முடிந்து இருந்தால் மற்றொரு உறவில் நுழைவதற்கு முயற்சி செய்யுங்கள்.

சினிமா போல தான்

ஆபாச படங்களும்(Porn Videos) சினிமா போல மாசக்கணக்கில் திட்டமிட்டு எடுக்கப்படுவது தான். என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அவர்கள்
பணத்திற்காக இதுபோன்ற படங்களில் நடிக்கிறார்கள். உங்களுக்கு இதனை பார்ப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை
பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றால் சிறிது சிறிதாக அதனை பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.தேவைப்பட்டால் இதுபோன்ற
சைட்களை உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப் அல்லது கம்யூட்டரில் இருந்து பிளாக் செய்திடுங்கள்.

குடும்பத்துடன்

முடிந்தவரை உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். உங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிடுங்கள். அடுத்த 5 வருடங்களுக்குள் நான் இப்படி
இருப்பேன் என கற்பனை செய்து பாருங்கள். வெறும் கற்பனையோடு நின்றுவிடாமல் அதற்காக கடுமையாக உழையுங்கள். உலகம் பரந்து விரிந்து
கிடக்கிறது, அதனால் கிணற்றுத்தவளையாக இராமல் வீட்டைவிட்டு வெளியில் வந்து இந்த உலகத்தை கண்டு ரசியுங்கள்.மனதார மகிழ்வுடன்
வாழுங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle