Lifestyle

புதியதொரு ஆரம்பம்! 2020 ‘க்கான இலக்குகளை அமைத்து, பின்பற்றி, வெற்றி பெற ஒரு வழிகாட்டி!

Nithya Lakshmi  |  Dec 11, 2019
புதியதொரு ஆரம்பம்! 2020 ‘க்கான இலக்குகளை அமைத்து, பின்பற்றி, வெற்றி பெற  ஒரு வழிகாட்டி!

புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே புது பழக்கங்களை துவக்க உறுதி எடுத்துக் கொள்வது வழக்கம். அப்படி என்னென்ன சங்கல்பங்களை நீங்கள் செய்யலாம் என்று பார்ப்போம்(tips).

அதற்கு முன், உங்களை முன்னேறச் செய்யும் உந்துதல், செயல் நோக்கம், ஆற்றல் ஆகியவை உங்களுக்கு    நிச்சயம் தேவைப்படும் . உங்கள் இலக்கை நிர்ணயிக்க உங்களுக்கு நீங்களே சில கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். 

முதலில், ஐந்து வருடங்களுக்கு முன்னர்,

  1. நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
  2. உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது என்று சிந்தியுங்கள்.
  3. ஆன்மீக ரீதியாக நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
  4. உங்கள் தொழில் முறையில் நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?
  5. பொருளாதார ரீதியாக நீங்கள் எப்படி இருந்தீர்கள்?

இப்படி பல கேள்விகளுக்கு நீங்கள் செய்தவற்றைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இது நீங்கள் செய்தவற்றை நினைவுகூர்ந்து உங்கள் திறமையை புரிந்து கொள்ள உதவும்.

Pexels

பொதுவாக, எனக்கு என்ன வேண்டும் என்று என்னால் முடிவு செய்ய முடியுமா? என்ற கேள்வி பலருக்கு தோன்றலாம். இரண்டு வகையான மக்கள் இருக்கிறார்கள்; ஒன்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக சிந்தித்து அதை நோக்கிப் பயணிப்பது. இரண்டாவது, அவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் குழம்பி எப்போதும் புலம்பி, குறை சொல்லிக்கொண்டிருப்பவர்கள். 

“கனவு காணுங்கள், திட்டமிடுங்கள், செயற்படுங்கள் ” – அப்துல் கலாம் 

அதனால், இந்த 2020 புத்தாண்டில் (new year) இருந்து அடுத்து ஐந்து வருடங்கள் களித்து நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்று சிந்தியுங்கள். வேலை மட்டும் அல்ல, உங்கள் உடல், குடும்பம், உறவுகள், ஆரோக்கியம், ஆன்மீகம் போன்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை 5 வருடங்கள் கழித்து எங்கு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? குறைந்தது மூன்று இலக்குகளை(goals) நிர்ணையுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், அது இப்போது முடியவே முடியாது என்று தோன்றினாலும், 5 வருடங்கள் கழித்து நிச்சயம் நடக்கும். நீங்கள் உங்களையும் அறியாமல் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பீர்கள். 

Pexels

“கண்ணுக்குத் தெரியாத ஒன்றை தெரிய வைக்கும் அமைப்புதான் இலக்கை நிர்ணயிப்பது.”

சரி, இதை எப்படி அடையலாம் என்று பார்க்கலாம். வாழ்க்கையில் உங்களுக்கு முதன்மையான விஷயங்கள் என்ன என்று முதலில் பட்டியலிடுங்கள். பிறகு, இந்த புத்தாண்டிற்கான இலக்குகளாக கீழ்காணும் விஷயங்கள் போல நீங்களும்  உங்களை மாற்றிக்கொள்ள திட்டமிடுங்கள்.

  1. நான் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பேன்
  2. நான் எப்போதும் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பேன்
  3. நான் ஒரு கெட்ட பழக்கத்தை விட்டொழிப்பேன்
  4. நான் ஒரு புதிய திறமையை வளர்த்துக் கொள்வேன்
  5. நான் என் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை தருவேன்
  6. நான் பயமுறுத்தும் விஷயங்களுக்கும் செயல்படுவேன்
  7. நான் பார்த்து ரசிப்பவரை பின் தொடர்வேன்
  8. நான் தினமும் ஏதாவது நல்ல விஷயத்தை வாசிப்பேன்
  9. நான் உயர்ந்த இலக்கு உள்ள பணியில் கவனத்தை செலுத்துவேன்
  10. நான் என் இலக்கை என் முன்னால் வைத்திருப்பேன்
  11. நான் முதல்நாள் இரவே அடுத்த நாளைத் திட்டமிடுவேன்
  12. நான் சக்திவாய்ந்த, ஈர்க்கப்படும் “ஏன்” என்ற கேள்வியை கொண்டிருப்பேன்
  13. நான் புதிதாக ஒன்றை முயற்சி செய்வேன்
  14. நான் துணிச்சலாக எதையும் எதிர்கொள்வேன்
  15. நான் மற்றவர்களை அதிகம் நேசிப்பேன்
  16. நான் மற்றவர்களை குறை சொல்ல மாட்டேன்
  17. நான் எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்வேன்.
  18. நான் எல்லா நேரமும் என் திறமைகளை நம்புவேன்
  19. நான் எதை ஆரம்பித்தேனோ அதை முடித்துவிட்டுதான் அடுத்த செயலில் ஈடுபடுவேன்
  20. நான் எல்லோரிடமும் நன்றி தெரிவிப்பேன்

எந்த விஷயமும், 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் அது ஒரு பழக்கமாக மாறிவிடும் என்பது நியதி. உங்களுக்குள் நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்பும் விஷயங்களை உங்கள் சவுகரியமான நிலையில்  இருந்து வெளியில் வந்தால்தான் செய்ய முடியும்.

மேலும் படிக்க – இப்படித்தான் என் வாழ்க்கையை என் இஷ்டம் போல் முழுவதுமாய் மாற்றிக்கொண்டேன் ! 

 

Pexels

விருப்பங்கள் சாத்தியக்கூறுகள்தான். ஒரு விருப்பத்தை நிறைவேற்ற தைரியம் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு , உங்கள் புத்தாண்டு தீர்மானம் உடல் எடையைக் குறைப்பது என்று தீர்மானித்திருந்தால், உங்களுக்கு உதவ ஒரு ஒர்க்அவுட் ஜிம் போன்ற இடங்களுக்கு சென்று ஒரு உந்துதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் உடல் எடை சற்று குறைந்திருந்தால், உங்களுக்கு நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள ஏதாவது பரிசளித்துக்கொள்ளுங்கள். அது உங்களை மேலும் உற்சாகப்படுத்தி  உங்கள் இலக்கை அடைய தூண்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க –நேர்மறை சக்திகளை எப்படி அதிகரித்து, மகிழ்ச்சியான மற்றும் வெற்றி தரும் வாழ்க்கையை வாழ்வது? 

பட ஆதாரம்  – Shutterstock 

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle