இப்படித்தான் என் வாழ்க்கையை என் இஷ்டம் போல் முழுவதுமாய் மாற்றிக்கொண்டேன் !

இப்படித்தான் என் வாழ்க்கையை என் இஷ்டம் போல் முழுவதுமாய் மாற்றிக்கொண்டேன் !

வாழ்க்கையில்  ஒரு கட்டத்தில் நாம் நினைத்தது எதுவுமே நடக்காது, நடப்பது எதுவும் நமக்கு பிடிக்காது. இதுபோல் எனக்கும் நடந்திருக்கிறது. அதனால் பல இரவுகள் தூங்காமல், மன அமைதியின்றி தவித்திருக்கிறேன். என்ன தவறு நடந்திருக்கும், என்ன செய்வது, நான் ஒரு சுய பரிசோதனைக்கு செல்ல வேண்டுமா இல்லை இது சாதாரணமானதா இப்படி பல கேள்விகள்  என்னை வாட்டி எடுத்திருக்கிறது. உண்மையான நண்பர்கள் இல்லாமல், புலம்பல்கழும், கேள்விகளும், வெறுப்புகளும் நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நான் கடந்து வந்த பாதையின் வாயிலாக நான் என்னுள் எனக்காக என்னை மாற்றிக்கொண்ட சில பழக்கங்களைப் பற்றியும் அவை எவ்வாறு வாழ்க்கையில் விரைவில் சந்தோஷத்தை(happy life) அளித்தது என்றதையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

1. மனநிலை மாற்றம்

‘ஒருவனை மனிதனாக ஆக்குவது உதவிகளும் வசதிகளும் அல்ல; அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களுமே ஆகும்’

முற்றிலும் வேலைக்கான வாய்ப்பு இல்லாத போதும், நீண்ட நாள் வேலைக்கான எந்தவித  பாதுகாப்பும் இல்லாத போதும் நான் நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தேன். நான் பயந்து போயிருந்தேன். உலகம் இவ்வளவு மோசமானதா என்று நினைத்து வருந்திக்கொண்டிருந்தேன். ஆனால் எப்போது நான் என்னைச் சுற்றியுள்ள சந்தர்ப்பங்களை பார்த்து நேர்மறையாக யோசிக்க ஆரம்பித்தேனோ அப்போது எல்லாமே விரைவாக மாறியது. முதலில் நான் யார் , எனக்கு என்ன வேண்டும் என்பதில் என் மனதை உறுதி படுத்திக் கொண்டு, தெளிவாக கனவு காண ஆரம்பித்தேன். நான் கற்பனை செய்ததைவிட விரைவாக என் இலக்கை அடைந்தேன்! நம்பமுடியவில்லை என்றால் முயற்சித்து பாருங்களேன்! 

 • மனதில்தான் முதலில் எல்லாமே ஆரம்பமாகிறது. மனதில் ஒரு மாற்றம் வந்துவிட்டால், உடலிலும் அது வந்துவிடும்
 • மெது மெதுவாக எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே மனதில் தோன்றச் செய்ய வேண்டும்.
 • எப்போதும் உங்களுக்கு நல்லதே நடக்கும் என்று நம்ப வேண்டும்.
 • ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், ஒவ்வொரு தோல்வியையும் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து உங்களை வளர்த்துக்கொள்ள பயன்படுத்த ஆரம்பிக்கலாம்
 • சொல்வது எளிது, ஆனால் எந்த திசைக்கு செல்வது என்று அறியாமல், துன்பங்கள் நம்மை தாக்கும்போது, நம்பிக்கையை தளரவிடாமல், நேர்மறையான எண்ணங்களை மட்டுமே விதைக்கவும்

2. மாற்றத்தை அறிந்துகொள்ளுதல்

Shutterstock

‘மாற்றங்கள் ஒன்றே இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி '

எப்போதெல்லாம் நான் மாற்றத்தை சந்திக்கிறேனோ அல்லது ஏதேனும் ஒரு சந்தர்பத்திற்குள் என்னை தள்ளுகிறதோ அப்போது அது  என்னை மேம்படுத்தும் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டேன். மனதிற்குள் நொந்து போவதும், படபடப்பும், மனச்சோர்வும் அவ்வப்போது வந்து போய்க்கொண்டே இருந்தது. பின்னர், உண்மையை சந்திக்க முற்படுகையில், விஷயங்கள் இயல்பாக நகர ஆரம்பித்தது. மேலும், புது விஷயங்களை கற்பதிலும், மாற்றங்களுக்கு ஒத்துழைப்பதிலும் நான் எவ்வளவு திறமையானவள் என்று பார்க்க ஆரம்பித்தேன்.  உங்களுக்குள் இருக்கும் வலிமை மற்றும் திறன்களை உங்களால் மட்டுமே அடையாளம் காண முடியும்!

 • சவால்கள், சந்தர்ப்பங்கள், சந்தோஷங்கள், மன அழுத்தங்கள், பாதை இடையூறுகள், ஆனந்தம், வளர்ச்சி, நெகிழ்ச்சி, தோல்வி போன்றவை மாறி மாறி நெய்யப்பட்ட தொடரே வாழ்க்கை!
 • பயத்தை எதிர்கொண்டு, தோல்வியை ஏற்க கற்றுக்கொள்ள வேண்டும்; மாற்றங்களை வரவேற்று, துன்பங்களை தள்ளி, கெட்ட எண்ணங்களை விளக்கி, உண்மையாக இருக்க வேண்டும்.

3. நன்றி தெரிவித்தல்

காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை, ஒவ்வொரு நாளும் நான் இதை கடைபிடித்தேன். என்னைச் சுற்றியுள்ள சின்ன சின்ன விஷயங்கள் முதல் ஒவ்வொரு விஷயத்திற்கும் நன்றி கூறினேன். உதாரணத்திற்கு, ஒரு ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டால், என் உடம்பில் உள்ள செல்கள் அத்தனையும்  நன்றாக வேலை செய்வதற்கு நன்றி தெரிவித்து, ஆம்புலன்ஸில் செல்லும் நபர் குணம் அடைய வேண்டும் என்றும் வேண்டிக்கொள்வேன். இப்படி ஏற்கனவே என்னிடம் மிகுதியாக உள்ள பல நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லுவேன். இது என் மனதிற்கு நிம்மதி தந்து சந்தோஷத்தை அளித்தது! 

 • எல்லாவற்றிற்கும் நன்றி தெரிவிப்பது நல்ல மாற்றம்.
 • இதுவரை செய்த செயல்களுக்கு நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். எது நம்மிடம் மிகையாக இருக்கிறது. எதை நோக்கி செல்லவேண்டும் என்று விழிப்புணர்வு வர இது உதவும்.
 • முதலில், நமக்கு நாமே நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும் ஏனெனில் அது நம்மீது நமக்கிருக்கும் பாசத்தை வெளிப்படுத்துகிறது!

4. சுய பராமரிப்பு

Pixabay

‘முதலில் உங்களை விரும்ப ஆரம்பியுங்கள், மற்றவை தானாக நடக்கும்!’

என் அன்பும், அக்கறையும், பாசமும் யாருக்கு தேவை இல்லையோ, யார் அதற்கு உகந்தவர்கள் இல்லையோ அவர்கள்மீது என் முழு கவனத்தையும் ஏன் செலுத்தினேன் என்று இப்போது என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இன்று, நான் முழுமையாக மற்றும் சந்தோசமாக இருப்பதற்கான முக்கிய காரணம் - நான் யார் என்று எனக்கு முற்றிலும் தெளிவாக தெரியும் என்று கூறுவேன்!  மேலும் எனக்கு என்ன வேண்டும் / வேண்டாம் என்று எனக்குத் தெரியும். இதுவே முக்கியம்! 

தேவையில்லாத வேலைகளை நீக்கிவிட்டு, நமக்கான ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். இங்கே நமக்காக செய்யக் கூடிய  சில வேலைகளின் பட்டியல்.

 •  சுய பராமரிப்பை ஒரு வழக்கம் ஆக்குதல்.
 • உங்களுக்கான இலக்குகளை அமைப்பது 
 • காலை நேரத்தில் சிறிது உடல் பயிற்சி செய்வது.
 • எப்போதும் நீரோட்டமாக வைத்திருப்பது. 

5. ஆக்கபூர்வமான வழக்கத்தை மேற்கொள்ளுதல்

ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது, சுய கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவியது.ஆரோக்கியமான நல்ல பழக்கங்களை மேற்கொண்டதால் எனது  ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக கழிகிறது

நான் உருவாக்கிய வழக்கங்கள்:

 1. காலையில் எழுந்தவுடன், அன்றைய நாளின் பணிகளை பட்டியலிடுவது
 2. நேர்மறையான எண்ணங்களோடு ஒவ்வொரு நாளையும் துவங்குவது
 3. தியானம் செய்தல்
 4. மனநிறைவோடு மூழ்கியிருப்பது
 5. ஒரு புது பாட்டை பயிற்சி செய்வது, பாட்டின் வரிகளை நினைவு கொள்வது
 6. கிடைக்கும் நேரங்களில் எனக்கு பிடித்த பாடலுக்கு நடனமாடுவது (நம்புங்கள் இது உங்களை முற்றிலும் சந்தோஷப்படுத்தும் !!)

6. தியானம் செய்தல்

Pexels

தியானம் செய்வதால், மன அமைதி, நிதானமாக சிந்தித்தல், சுய கட்டுப்பாடு, வாழ்க்கையில் முன்னேற்றம், மன ஆரோக்கியம் இப்படி  பல பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கீழ்கண்டவாறு, நீங்களும் தியானம்  செய்து என்னைப்போல் பயனடையலாம் 

 • சவுகரியமாக அமர்தல்
 • அமைதியான இடம் 
 • மூச்சை கவனித்தால்
 • நேர்மறையான எண்ணங்களை கவனித்தல்
 • எண்ணங்களை கட்டுப்படுத்தாமல் வந்து செல்ல விடுவது

7. நேரத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுதல்

நாளின் ஒவ்வொரு நிமிடமும் சிறப்பாக செயல்பட    விரும்பினேன்! எனக்குத் தெரிந்ததெல்லாம், நேரம் விலைமதிப்பற்றது மற்றும் நாம் வாழ  ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே இருக்கிறது! 

ஆக்கபூர்வமாக இருப்பது என்றால் அது  ஏதேனும் வேலையை மட்டுமே குறிக்கிறது என்று அர்த்தமல்ல !!  ஆம், உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியையும் பார்க்கலாம். நீங்கள் அனுபவித்து, நிதானமாக இருப்பதால் அதுவும் பயனுள்ளதே!

 • நேர்மறையான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது அவசியம்.
 • எந்த வேலையை எப்போது செய்வது, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
 • நேரத்தை நிர்வகிப்பது ஒரு உந்துதலை தந்து, தள்ளிப்போடும் தன்மையை தவிர்க்கும்.

நேரத்தை சரியாக கையாளும்போது, எனக்கான நேரம் அதிகமாக கிடைத்ததாக உணர்ந்தேன்! 

 

8. பொறுமை

Pixabay

எனக்கு நிறைய கோபம் வரும். அதில் மிகவும் மோசமான விஷயம்  என்னவென்றால், முதலில் நான் பேசி விடுவேன் , அடுத்த நொடியே அதற்கு  வருத்தப்படுவேன். பின்னர் ஒரு கட்டத்தில் இந்த சுழற்சியை நிறுத்த வேண்டும்  என்று உணர்ந்தேன். அதனால் எப்போதெல்லாம் கோபம் வருவதை உணர்கிறேனோ அப்போது ஒரு கற்பனை குமிழிக்குள் சென்று விடுவேன் . அது என்னை அந்த கோவமான நிலையில் இருந்து வெளிக்கொண்டு வர உதவும் . இது எனக்கு நிறைய பொறுமையை வளர்த்துவிட்டது. சில நேரத்திற்கு பிறகு அதை சிந்தித்தால் அதை  எளிதாக தீர்க்கக்கூடியதாக தெரிந்தது. பொறுமைதான் தற்காலத்தில் எல்லோருக்கும் தேவை என்று நினைக்கிறேன். 

‘இயற்கையிடம் இருந்து பொறுமையை கற்றுக்கொள்ள வேண்டும் . பொறுமைதான் அவளது வெற்றியின் ரகசியம்’

 • எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக பலன் கிடைக்க வேண்டும், காத்திருக்க முடியாத நிலை உள்ளது. 
 • பொறுமையாக இருப்பதற்கு செயலற்று இருத்தல் என்று அர்த்தம் இல்லை. அது ஒருமித்த ஆற்றல். 
 • பொறுமை என்னும் அஸ்திவாரத்தின்மீது தான் கனவுக் கோட்டையை கட்ட வேண்டும்.
 • வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பெரிய விஷயம் பொறுமை.

இயற்கை எதையும் அவசரப்பட்டு செய்வதில்லை. ஆனால் செய்ய வேண்டிய நேரத்தை தவற விடுவதில்லை. மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்  என்று நினைக்கிறேன்.

  

மேலும் படிக்க - சிந்தனைக்கான உணவு:வாழ்க்கையில் உங்களுக்கு உத்வேகம் அளிக்க 8 சிறந்த தமிழ் புத்தகங்கள்!

மேலும் படிக்க - உங்கள் வெற்றிக்கு உறமாக இங்கே சில பிரபலங்களின் பொன்மொழிகள்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!