Acne

கொளுத்தும் வெயிலில் உங்கள் முகத்தை குளுகுளுன்னு வைத்துக்கொள்ள சூப்பர் டிப்ஸ்

Mohana Priya  |  Apr 1, 2019
கொளுத்தும் வெயிலில் உங்கள் முகத்தை குளுகுளுன்னு வைத்துக்கொள்ள சூப்பர் டிப்ஸ்

கொளுத்தும் வெயிலில் உங்க முகத்தை(skin) எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்களை உங்களுக்கு தருகின்றோம். வெளியில் இருந்து வந்ததும் அப்பாடா என்கிற உணர்வு நாம் அனைவருக்கும் தோன்றுகின்றது. என்ன செய்யலாம் இந்த வெயிலை, எனக்கு மட்டுமே விஷேட சக்தி இருந்தால் இந்த உலகத்திலிருந்தே வெயிலை துரத்திவிடுவேன் என்று சொல்லாம். ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாதே. சரி அதுக்கு நாம் என்ன செய்யலாம், எப்படி காத்துக்கொள்ளலாம் என இங்கு பார்ப்போம்.

பாதுகாப்பு முறைகள்
வெயிலில் வெளியே செல்ல போகிறீர்கள் என முடிவு செய்து விட்டால் தேவையான பாதுகாப்புடன் செல்வது நல்லது. உங்கள் முகத்தில் சூரிய வெளிச்சம் படும்படியாக செல்லாமல் அதற்கு ஏற்றார் போன்று துணியினை முகம் மற்றும் தலை முழுவதும் மறைக்கும் படி நன்கு கட்டிக்கொண்டு செல்லுங்கள். துணியால் உங்கள் முகம் மற்றும் தலை மறைக்கும் படி நன்கு கவர் செய்த பிறகு வெளியில் செல்லுங்கள். தண்ணீர் பாட்டில் எப்போதும் கையில் எடுத்து செல்லுங்கள். ஒரு குடை கட்டாயம் கையில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் சுத்தமான சின்ன டவல் வைத்திருப்பது நல்லது. வெயிலில் செல்லும் போதும் அதிக வாசனை திரவியங்கள் பயன்படுத்த வேண்டாம். அது மேலும் உங்க உடலிற்கு அலர்சியை ஏற்படுத்தும்.

Also Read How To Remove Warts From Face In Tamil

இரவு நேர பராமரிப்பு
தினமும் வெளியில் வெயிலில் செல்பவராக நீங்கள் இருந்தால் இரவு நேரத்தில் உங்க முகத்தை(skin) பராமரிப்பது கட்டாயம் அவசியமான ஒன்றாக உள்ளது. காரணம் காலையில் இருந்து மாலை வரை அல்லது இரண்டு முறையாவது தினமும் வெயிலை சந்திக்க நேரிடுகின்றது. இதிலிருந்து வரும் பரஊதா கதிர்கள் நம் சருமத்தை கட்டாயம் பாதிக்கும். மேலும் இந்த கதிர்கள் நம் சருமத்தில் அப்படியே தங்கிவிட்டால் ஒரு வித கருமை நிறத்தை நமது சருமத்தில் பெற்றுவிடும். தினமும் இதை சரிசெய்தால் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். அப்படியே விட்டு விட்டால் நாட்கள் செல்ல செல்ல இதனை சரி செய்வது கடினமாகிவிடும்.

இந்த மாஸ்கை தொடர்ச்சியாக பின்பற்றுவதால் நாளடைவில் முற்றிலும் இந்த கருமை மறைகிறது. இந்த மாஸ்கை தடவும்போது தயிர் பயன்படுத்துவதால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
1. 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு
2. ஒரு ஸ்பூன் தயிர்
3. ஒரு ஸ்பூன் பன்னீர்

செய்முறை
1. வெள்ளரிக்காயை நறுக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
2. அந்த வெள்ளரிக்காய் சாற்றில் தயிர் சேர்க்கவும்.
3. பிறகு பன்னீர் சேர்க்கவும்.
4. இந்த கலவையை உங்கள் மூக்கில் தழும்பு இருக்கும் இடத்தில் தடவவும்.
5. பத்து நிமிடம் இந்த கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும். 6. பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக்(skin) கழுவவும்.

இப்படி தினமும் செய்து வந்தால் வெயிலால் ஏற்படும் தாக்கம் குறைந்து உங்கள் முகம் பழைய நிலையை அடையும்.

ஆரஞ்சு தோல் மாஸ்க்
முகத்தை(skin) இயற்கையான முறையில் வெண்மையாக்க ஆரஞ்சு தோல் பயன்படுகிறது. இதன் சிறப்பை நம்மில் பலரும் அறிந்திருக்க முடியும். ஆரஞ்சு தோலுடன் இதர இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஏற்பட்டுள்ள அடர் தழும்புகளைப் போக்க முடியும்.

தேவையான பொருட்கள்
காய்ந்த ஆரஞ்சு தோல், ஒரு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய்

செய்முறை
1.  காய்ந்த ஆரஞ்சு தோலை எடுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
2. இந்த ஆரஞ்சு தூளுடன் பால் சேர்க்கவும்.
3. இந்த கலவையில் தேன், பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.
4. இந்த கலவை ஒரு பேஸ்ட் ஆகும் வரை கலக்கவும்.
5. இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அடர் தழும்பில் தடவவும்.
6. 20 நிமிடங்கள் இந்த கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும்.
7. பிறகு தண்ணீரால் முகத்தைக்(skin) கழுவவும். முகத்தில் தழும்பு மறையும் வரை இதனைச் செய்து வரலாம்.

வினிகர் மற்றும் பன்னீர் வினிகர் கலவை
தேவையான பொருட்கள்
1/2 ஸ்பூன் வினிகர், 1/2 ஸ்பூன் பன்னீர்

செய்முறை
1. வினிகர் மற்றும் பன்னீரை ஒன்றாகக் கலக்கவும்.
2. இந்த கலவையில் ஒரு காட்டன் பஞ்சை நனைக்கவும். 3. பஞ்சை அந்த கலவையில் நனைத்து தழும்பு இருக்கும் இடங்களில் தடவும்.
4. 15 நிமிடங்கள் காயவிடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக்(skin) கழுவவும். 7-10 நாட்கள் தொடர்ந்து இந்த முறையைப் பின்பற்றுவதால் நல்ல பலன் கிடைக்கும். விநிகர் இருப்பதால் தினமும் இதனை பயன்படுத்த வேண்டாம்.

பெண்கள் சருமத்தை பராமரிக்க மற்றும் அழகு படுத்துவதற்கான எளிய குறிப்புகள்

முகத்தில் இருக்கும் மருக்களை முற்றிலுமாக நீக்க சிறந்த முறைகள்

கருப்பு நிறமாக இருக்கிறீர்களா… கவலை வேண்டாம் உங்களுக்கான சிறப்பு பதிவு!

பட ஆதாரம் – gifskey,pexels,pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறுபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.

Read More From Acne