Health

நாவூரும் ருசியான சிறுதானிய உணவு ரெசிபிகளை நீங்களும் ஈசியாக செய்யலாம்!

Swathi Subramanian  |  Jul 31, 2019
நாவூரும் ருசியான சிறுதானிய உணவு ரெசிபிகளை நீங்களும் ஈசியாக செய்யலாம்!

இன்றைய தலைமுறையினர் பாஸ்ட் புட் விரும்பிகளாகவே உள்ளனர். எனினும் தற்போது சிறுதானிய உணவுகளின் (foods) மீது அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல உணவகங்களின் ஸ்பெஷல் லிஸ்டில் காண முடிகிறது. பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை சிறுதானிய உணவுகள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு  போன்றவையே சிறுதானிய உணவுகள் (foods) ஆகும். இந்த சிறுதானியங்களை பயன்படுத்தி சத்தான உணவு ரெசிபிகள் எப்படி செய்வது என இங்கே காணலாம். 

கொள்ளு சூப்

தேவையான பொருட்கள் :

ஊற வைத்த கொள்ளு – 100 கிராம், 
பூண்டு – 2 பல், 
பட்டை, லவங்கம் – தலா ஒன்று, 
வெண்ணெய் – சிறிது, 
மிளகுத்தூள், சர்க்கரை – தலா ஒரு சிட்டிகை, 
கேரட், கோஸ் நறுக்கியது – தலா ஒரு டேபிள் ஸ்பூன், 
உப்பு – தேவைக்கேற்ப.

கரு உயிராக மாறி குழந்தையாகின்ற அற்புதம் ! இறைவனை விட சிறந்த படைப்பாளி வேறு யார் !

youtube

செய்முறை : 

கொள்ளு, பூண்டு, பட்டை, லவங்கம் நறுக்கிய காய்கள் இவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேக வைக்க வேண்டும்.  பின்னர் இந்த சூப் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்து கிண்டவும். மிதமான சூட்டில் இருக்கும் போது பரிமாறுங்கள். 

வரகரிசி அடை

தேவையான பொருட்கள் :

வரகரிசி – 100 கிராம், 
கொள்ளு – 25 கிராம், 
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – 50 கிராம், 
காய்ந்த  மிளகாய் – 8, சீரகம், 
பெருங்காயம் – தேவையான அளவு, 
ஓமம் – சிறிதளவு, 
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு, 
துருவிய கேரட் / கோஸ் /முருங்கைக் கீரை – ஒரு கப், 
உப்பு – தேவையான அளவு.

youtube

செய்முறை :  

வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். இவை அனைத்தும் ஊறியவுடன் கொரகொரவென அரைக்கவும். 2 மணி நேரம் கழித்து துருவிய கேரட் அல்லது நறுக்கிய கோஸ் /முருங்கைக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து தோசை மாவு  பதத்திற்கு கலக்கவும். இந்த மாவை தோசைக்கல்லை சூடாக்கி தேங்காய் எண்ணெய் விட்டு அடைகளாக சுட்டெடுக்கவும்.

சாமை டிலைட்

தேவையான பொருட்கள் :

சாமை – 200 கிராம், 
பால் – அரை கப், 
தயிர் – ஒரு கப், 
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, 
உப்பு – தேவையான அளவு,
துருவிய மாங்காய், கேரட் மற்றும் வெள்ளரி – ஒரு டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு 

தாளிக்க : 

கடுகு மற்றும் பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் – 2, 
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

youtube

செய்முறை : 

சாமையுடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேக விட வேண்டும்.  வெந்தவுடன் ஆற வைத்து அதனுடன் தயிர், வெண்ணெய் சேர்க்கவும். பின்னர் மற்றொரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சாமை கலவையில் ஊற்ற வேண்டும். இதன் மேலே மாங்காய், கேரட், வெள்ளரி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

எப்போதும் ஃப்ரெஷ் லுக் விரும்பும் பெண்களுக்கான பாதாம் பேஸ் பேக் !

கம்பு பணியாரம்

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – ஒரு கப், 
பச்சரிசி மாவு – அரை கப், 
பனை வெல்ல நீர் – ஒன்றரை கப் 
வறுத்த வேர்க்கடலை – ஒரு டீஸ்பூன், 
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், 
சுக்குப் பொடி – கால் டீஸ்பூன், 
எண்ணெய் – தேவையான அளவு, 
சோடா உப்பு – சிட்டிகை.

youtube

செய்முறை :  

கம்பு மற்றும் பச்சரிசி மாவுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, வேர்க் கடலை, சோடா உப்பு, பனைவெல்ல நீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். அரை மணி நேரம் கழித்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு ஒவ்வொரு குழியிலும் அரைக்குழி அளவுக்கு மாவு விட்டு வெந்த பின் திருப்பி வேக விட்டு எடுக்கவும். 

ராகி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

ராகி மாவு – ஒரு கப், 
பொடித்த வெல்லம் – முக்கால் கப், 
ஏலக்காய்த்தூள், நெய் – தலா ஒரு டீஸ்பூன், 
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்.

youtube

செய்முறை : 

முக்கால் கப் வெல்லத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொதிக்க வைத்து இறக்கி ஆற விடவும். இந்த வெல்லப் பாகுடன் நெய், ஏலக்காய்த்தூள் மற்றும் துருவி  தேங்காய் சேர்க்கவும். இதில் சிறிது சிறிதாக ராகி மாவைத் தூவி, கட்டி படாமல் கிளறவும். இந்த கலவையை இறக்கி ஆற விடவும். ஆறிய மாவை சிறு சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து 5 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆரோக்கியம் கலந்த ருசியில் இருக்கும் இந்த கொழுக்கட்டை இரண்டு நாட்கள் வரை கெடாது.

கொள்ளு பொடி

தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்த கொள்ளு – 200 கிராம், 
மிளகு – 20 கிராம், 
காய்ந்த மிளகாய் – 10, 
பூண்டுப்பல் – 10, 
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், 
நெய் – 2 டீஸ்பூன், 
உப்பு – தேவைக்கேற்ப.

youtube

செய்முறை :  

கொள்ளை வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். நன்றாக சிவக்க வறுபட்டவுடன் ஆற விடவும். இதனுடன்  2 டீஸ்பூன் நெய்யில் பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒருசேர வறுத்துக்கொள்ளவும். இந்த கலவையை ஆறவைத்து வறுத்த கொள்ளுடன் சேர்த்து மிக்சியில் போட்டுப் பொடிக்கவும். கொள்ளு பொடி ரெடி. இந்த பொடியை சூடான சாதத்தில் நெய் விட்டு கலந்து ருசிக்கலாம். இட்லி மற்றும் தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

குதிரைவாலி கிச்சடி

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – ஒரு கப்,
கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – ஒன்று,
பச்சை மிளகாய் – 4 கீறியது,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

பட்டை, லவங்கம் – 2,
பிரியாணி இலை – 2,
மராத்தி மொக்கு – ஒன்று,
எண்ணெய் – தேவையான அளவு.

youtube

செய்முறை :

குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டுத் தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை தாளித்து அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரிசி 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு நெய்விட்டு கிளறி சூடாகப் பரிமாறவும்.

தினை புலாவ்

தேவையான பொருட்கள் :

தினை அரிசி – ஒரு கப்,
தேங்காய் பால் – ஒரு கப், 
வெங்காயம் – ஒன்று,
தண்ணீர் – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி – அரை கப்,
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

பட்டை – 2,
சோம்பு – கால் டீஸ்பூன்,
பிரியாணி இலை – ஒன்று,
ஏலக்காய் – ஒன்று.

கிளிக்! கிளிக்!உங்கள் திருமண நிகழ்வுகளுக்கான சிறந்த வெட்டிங் போட்டோகிராபர்ஸ்

youtube

செய்முறை :

தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு  தாளிக்கவும். அதனுடன் பட்டை, சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு ஒரு விசில்விட்டு இறக்கி பரிமாறவும். 

கேழ்வரகு சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1/2 கப்,
கோதுமை மாவு – 1/2 கப்,
வெந்தயக்கீரை – 1/2 கப்,
கடலை எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு

youtube

செய்முறை : 

கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெந்தயக்கீரை ஆகியவற்றை சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் தேய்த்து  இரண்டு பக்கமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். சாதாரணமாக கோதுமையில் மட்டும் செய்யும் சப்பாத்தியை வித்தியாசமாக கேழ்வரகு, வெந்தயக்கீரை சேர்த்து செய்ய வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும், இரும்பு சத்துக்களும் கிடைக்கும். சுவையும் பிரமாதமாக இருக்கும்.

சிறுதானிய மசாலா ரொட்டி

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 1/4 கப்,
ராகி மாவு – 1/4 கப்,
வரகு, சாமை, தினை, கோதுமை மாவு – தலா 2 தேக்கரண்டி,
தேங்காய் கொப்பரை துருவல் – 2 தேக்கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி,
கருப்பு எள்ளு – 1/2 தேக்கரண்டி,
சீரகம் – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – 1/4 தேக்கரண்டி,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
பெருங்காயம் – சிறிதளவு,
கடலை எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு

youtube

செய்முறை : 

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவுகளையும் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். சிறிது நேரத்திற்கு பின்னர் உருட்டிய மாவை தேய்த்து மெல்லிய சப்பாத்திகளாக  எண்ணெய் விட்டு சுடவும். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் பரிமாறவும். கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம். இதனை தனியாகவும் அல்லது கார சட்னியுடனும் சாப்பிடலாம். உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான சிறுதானிய வகைகளையும் விதமாக சமைத்து பரிமாறுங்கள். சுவையுடன் கூடிய சிறுதானிய உணவுகள் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் வழங்க வல்லது என்பதால் சமைத்து பயனடையுங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Health