கரு உயிராக மாறி குழந்தையாகின்ற அற்புதம் ! இறைவனை விட சிறந்த படைப்பாளி வேறு யார் !

கரு உயிராக மாறி குழந்தையாகின்ற அற்புதம் ! இறைவனை விட  சிறந்த படைப்பாளி வேறு யார் !

தாய்மை என்பது பெண்மையின் அற்புதமான குணம். பெண்கள் எல்லாம் உயிர்களை உருவாக்கப் பிறந்தவர்கள் என்பதே அவர்கள் பிறப்பிற்கான பெருமை. இது கடவுளின் வரம்.

ஒரு உயிரை சுமக்க வேண்டும் என்றால் எத்தகைய மனவலிமை மற்றும் உடல் திடம் ஆகியவை பெண்ணிற்கு தேவைப்படும்? அது அத்தனையும் நம்மிடம் இருப்பதாலேயே இறைவன் நம்மை ஒரு உயிரை சுமக்கத் தகுந்த உயிர் இனமாக நம்மைப் படைத்திருக்கிறார்.

ஒரு பெண் ஆணுடன் கூடிய உடன் கரு உருவாகி விடுவதில்லை. கூடல் என்பதே உயிர்களை அதிகரிக்க இயற்கை செய்த மாயம். ஆகவே ஒரே கூடலில் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை. அதற்கான பலபடிகள் உள்ளன.

ஒவ்வொரு பெண்ணிற்கும் கர்ப்ப காலம் என்பது 10 மாதங்கள் அல்லது 40 வாரங்கள் எனக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் கடைசி மாதவிலக்கு நாளின் முடிவில் இருந்து 14 நாட்கள் கழித்து பெண்ணின் கருமுட்டைகள் கருப்பையில் இருந்து வெளியே வருகிறது. 

தாம்பத்யத்தில் சிக்கலா ! வீட்டில் உள்ள இந்தப் பொருள் ஆண்மையை அதிகரிக்கும் என்பது தெரியுமா!

pinterest

அது பெலோப்பியன் ட்யூப் வழியாகப் பயணித்து அங்கு சென்று இனப்பெருக்கத்திற்காகக் காத்திருக்கிறது. இந்த நேரத்தில் ஆணின் கோடிக்கணக்கான விந்தணுக்கள் அந்த முட்டையைத் தேடி நீந்தியபடி வரும் சமயம் அந்தக் கோடிக்கணக்கான விந்தணுவில் ஏதாவது ஒரு விந்தணுவை கருமுட்டை உள்வாங்கிக் கொள்ளும் சமயம் கருத்தரித்தல் என்பது நிகழ்கிறது.

கருத்தரித்தல் நிகழும் முதல் வாரத்தில் கருவானது கருப்பையின் (womb) சுவர்களைப் பற்றி பிடித்து தனது உயிரை வளர்க்க ஆயத்தம் ஆகிறது. அப்போது சிசு மூன்று பாகங்களாகத் தெரியும்.

அதிலிருந்து நான்காவது வாரத்தில் முதன் முதலாக ஒரு உயிரில் இருந்து உருவாகும் முதல் உறுப்பு இதயம்தான். நினைத்துப் பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கிறது.

பின்னாளில் இந்த இதயம்தான் நம்மை எல்லா உணர்வுகளுக்கும் ஆட்பட வைக்கிறது. நேசிக்கிறது. அன்பாய் இருக்கிறது. யாரேனும் துரோகம் செய்கையில் நொறுங்கி போகிறது. பின்னர் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் வெட்டுப்பட்ட பல்லியின் வால் போல தன்னைத் தானே எல்லாவற்றில் இருந்தும் மீட்டெடுத்துக் கொள்கிறது.

pinterest

இப்படிப்பட்ட அதிசய உறுப்பான இதயம்தான் முதன் முதலில் நம் உடலில் தோன்றும் உறுப்பு. அதற்கடுத்ததாக 6வது வாரத்தில் மூக்கு வாய் மற்றும் காதுகள் அதற்கான வடிவத்தைப் பெற ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் குடல் மற்றும் மூளை ஆகிய பகுதிகள் வளர ஆரம்பிக்கின்றன.

9ம் வாரத்தில் குழந்தை என்ன பாலினம் என்பதை முடிவு செய்யும் இனப்பெருக்க உறுப்புகள் வளர ஆரம்பிக்கின்றன. 10ம் வாரத்தில் நாசிகளின் வாசனை அறியும் உறுப்புகள் முழுமையாக உருவடைந்து விடுகிறது. அதே நேரத்தில் இதயத்தின் முழுமையான வளர்ச்சியும் அப்போது நடந்து முடிகிறது.

11ம் வாரத்தில் எலும்புகள் உறுதித் தன்மையைப் பெற ஆரம்பிக்கின்றன. 16 வாரத்தில் கழுத்து மற்றும் முதுகெலும்புகள் வலிமையாக ஆரம்பிக்கின்றன. 18ம் வாரம் முதலே குழந்தை தாயின் வயிற்றுக்குள் தனது முதல் அசைவுகளை ஆரம்பித்து விடுகிறது. உதைக்கிறது உருள்கிறது பிரள்கிறது என எல்லாம் இப்போதுதான் ஆரம்பம் ஆகிறது.

30ம் வாரம் மூளையின் கோடிக்கணக்கான நியூரான்கள் வேக வேகமாக வளரத் தொடங்குகின்றன. குழந்தை அப்போதில் இருந்தே மூளையை உபயோகிக்க ஆரம்பிக்கிறது.

"ஹெலிகாப்டர் பெற்றோர்" - உலகின் மிக நீண்ட தொப்புள் கொடி பற்றி அறிந்ததுண்டா ?

pinterest

35ம் வாரம் குழந்தை தன்னை வளர அனுமதித்த தாயின் குரலை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறது. 40வது வாரத்தில் குழந்தையின் நகங்களும் முடியும் இன்னும் வளர்ச்சியை நீட்டிக்கின்றன. மண்டையின் எலும்புகள் இன்னும் முழுவளர்ச்சியை எட்டவில்லை.

40 வாரம் 6 நாட்கள் குழந்தை இப்படியே தாயின் வயிற்றுக்குள் வளர்கிறது. அதன் பின்னர் தான் முழுமையான வளர்ச்சிக்கு வந்து விட்டோம் என்பதை அறிந்த குழந்தை இந்த பூமிக்குள் விஜயம் செய்யும் நாளன்று கருப்பையில் இருந்து தானாக நகர்ந்து வெளியே வர ஆரம்பிக்கிறது.

மருத்துவரின் உதவியுடன் வெளியே வரும் குழந்தை முதன் முதலில் தன்னுடைய உணர்வுகளைத்தான் வெளிப்படுத்துகிறது. இதுவரை பாதுகாப்பாக இருந்த இடத்தில் இருந்து வெளியேறிய வித்யாசம் அறிந்த குழந்தை தன்னையும் அறியாமல் அழத் தொடங்குகிறது.

இறைவனின் அருகாமையை வெகு தூரம் நகர்ந்து வந்த ஆத்மாக்களின் ஏக்கத்தை போலவே தான் இருந்த இடம் நோக்கித் திரும்ப குழந்தை வாழ்நாள் முழுதும் முயற்சி செய்த வண்ணம் இருக்கிறது. அதற்கான அறிவியலை நாம் வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இத்தனை அழகான வடிவமைப்பை அனுபவித்து அனுபவித்து படைத்த படைப்பாளி இறைவனை விடவும் சிறந்தவர் வேறு யாராக இருக்க முடியும்? இந்த வானம் முழுதும் தூரிகை கொண்டு எழுதினாலும் போதாத சிறப்புகளை கொண்டது இறைவனின் தன்மை. அந்த இறைவனை நன்றியுடன் கொண்டாட இடையறாது அவனை நேசிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்.

ஆன்மீகத் தேடல் கொண்டவர்களின் வாழ்நாள் கனவாக காசி இருப்பது ஏன் ? அறிவோம் வாரணாசி

 

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.