Lifestyle

நீண்ட கால திருமண உறவில் கணவனும், மனைவியும் அன்பு நிறைந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது?

Meena Madhunivas  |  Dec 5, 2019
நீண்ட கால திருமண உறவில் கணவனும், மனைவியும் அன்பு நிறைந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது?

இருக்கும் அனைத்து உறவுகளிலும், கணவன் மனைவி உறவு என்பது தனித்துவம் வானத்தே. ஒரு குடும்பத்தில் இருக்கும் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்று மேலும் சுற்றி இருக்கும் சொந்தகள் அனைத்துமே இரத்த பந்தகளால் ஒரே குடும்பத்திற்குள் உண்டானவை. இதில் ஒருவருக்கொருவர் இறுதி வரை ஒன்றாக பிரியாமல் உதவிக் கொண்டும், அன்பை பகிர்ந்து கொண்டும் வாழ்வது இயற்கை மற்றும் இயல்பே. ஆனால், எங்கோ பிறந்து, முன் பின் ஒருவரை ஒருவர் பற்றி முழுமையாக தெரியாமல், நம்பிக்கையின் பேரில் திருமணம் செய்து கொண்டு ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழ்க்கையில் பயணிப்பது என்பது இறைவனின் அருளே. இந்த உறவை தனித்துவம் வாய்ந்தது என்று கூறுவது மிகையாகாது.

ஆனால், இன்றைய விரைவாக அழுத்தத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், கணவன் மனைவி உறவு என்பது சட்டென்று முடிந்து விடுகின்றது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் முன்னரே, விவாகரத்தில் போய் நின்று விடுகின்றனர். இது அவர்களை மட்டும் பாதிக்காமல், இரு குடும்பங்கள் மற்றும் முக்கியமாக குழந்தைகளையும் பாதித்து விடுகின்றது. ஆனால், அதுவே அவர்கள் நல்ல அன்யுனியதோடும், அன்போடும், பலமான பந்தத்தோடும் வாழும் போது அனைவரும் மகிழ்ச்சியாக இருகின்றனர்.

இப்படி அழகான திருமண வாழ்க்கையை நீங்களும் நீண்ட காலம் (long term marriage) உங்கள் ஆயுள் உள்ளவரை உங்கள் வாழ்க்கை துணையோடு வாழ எண்ணினால், உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்:

1. ஒருவரை ஒருவர் மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு நாள், ஒரு முறை, சில நிமிட அறிமுகம் மட்டும் பத்தாது. உங்கள் திருமணத்திற்கு பிறகும், நீங்கள் இருவரும் மீண்டும் மீண்டும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருவருக்கும் என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, விருப்பங்கள் என்ன என்று மேலும் பல விடயங்களை பற்றி ஒரு நல்ல புரிதல் வரும் வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி புரிந்து கொள்ளுங்கள்.

2. கருணையோடும் அன்போடும் இருங்கள்

Pixabay

ஒருவருக்கொருவர் கருணையோடும், அன்போடும் எப்போதும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கோபத்தை சட்டென்று வெளிகாட்டி விடாமல், ஒரு வினாடி உங்கள் கோபத்தை தள்ளிப் போட்டு விட்டு, சிந்தித்து பின்னர் செயல்படுங்கள் அல்லது பதில் அளியுங்கள். இதனால் உங்கள் புரிதல் அதிகரிப்பதோடு, உங்கள் உறவும் பலமாகும்.

3. அதிக நேரத்தை செலவிடுங்கள்

இருவரும் தினமும் எத்தனை வேலைகள் இருந்தாலும், அந்த 24 நேரத்திற்குள் உங்களுகென்று தரமான சில மணித் துளிகளை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்களை பற்றி மட்டுமே பேசுங்கள். உங்கள் அலுவலகம், குடும்பத்தினர்கள், உறவினர்கள், ஏன் உங்கள் குழந்தைகளை பற்றியும் பேசாதீர்கள். உங்கள் இருவரை மட்டுமே பற்றி பேசி உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.

4. குறை கூறாதீர்கள்

Pixabay

ஒருவர் மற்றொர்வர் மீது எப்போதும் குறை கூறாதீர்கள். அப்படியே ஒருவர் மீது தவறு இருந்தால், மற்றோருவர் அதனை பெரிய குறையாக நினைத்து பேசத் தொடங்காமல், அதனை எப்படி அன்பாக அணுகி சரி செய்வது என்று கருத்துகளை பகிர்ந்து சரியான தீர்வை காண முயற்சி செய்யுங்கள். குறை கூறுவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை.

5. விட்டுகொடுங்கள்

எப்போதும் நான் முன்னரே சொல்லி விட்டேன், நான் அப்படி தான் என்று வீராப்பாக இருக்காமல், சூழல் மற்றும் நேரத்திற்கு தகுந்தவாறு விட்டு கொடுத்து நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதோடு, சேர்ந்து செயல்படுவதோடு, உங்கள் உறவையும் பலப்படுத்திக் கொள்வீர்கள்.

மேலும் படிக்க –  பொறாமையில் இருந்து விலகி உறவைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி?

6. பாராட்டுங்கள் / புகழுங்கள்

Pixabay

உங்கள் வாழ்க்கை துணை ஏதாவது சாதனை செய்து விட்டால், அது சிறியதோ, பெரியதோ, அவரை பாராட்டுங்கள். மேலும் ஒரு சபையில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில், அவரை பற்றி புகழ்ந்து பேசுங்கள்,. இழிவாகவோ, மட்டம் தட்டியோ பேசாதீர்கள். அவருக்கு நீங்கள் எதிர் பார்த்த பண்புகள் இல்லை என்றாலும், அவரிடம் இருக்கும் திறனையும், பண்புகளையும் பாராட்டுங்கள். இதனால் அவருக்கு உங்கள் மீது நம்பிக்கையும், மரியாதையும் அதிகரிக்கும்.

7. விட்டு கொடுக்காதீர்கள்

 பிற உறவுகள் முன் உங்கள் வாழ்க்கை துணையை எந்த காரணமும் இல்லாமல் பிறர் இழிவாக மற்றும் திட்டும் படியாக பேச இடம் கொடுக்காதீர்கள். உங்கள் முன்னரோ அல்லது நீங்கள் இல்லாத இடத்திலோ, உங்கள் வாழ்க்கை துணையை பிறர் குறை கூறும் படி பேச அனுமதிக்காதீர்கள்.

8. தினமும் நன்றி கூறுங்கள்

Pixabay

தினமும் உங்கள் வாழ்க்கை துணைக்கு அன்புடன் நன்றி கூறுங்கள். அவரால் தான் நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்கின்றீர்கள், மகிழ்ச்சியாக இருகின்றீர்கள் மற்றும் வெற்றி பெறுகின்றீர்கள் என்று கூறி அவருக்கு உங்கள் நன்றியை தெரிவியுங்கள். இது அவரை மகிழ்ச்சி அடைய செய்வதோடு, உங்கள் மீதான அன்பையும் அதிகரிக்கும். 

மேலும் படிக்க – உறவுகள் – உங்கள் உறவை வெளிபடுத்த சில பொன்மொழிகள்!

பட ஆதாரம்  – Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle