உறவுகள் – உங்கள் உறவை வெளிபடுத்த சில பொன்மொழிகள் Relationship Quotes For Whatsapp In Tamil

உறவுகள் – உங்கள் உறவை வெளிபடுத்த சில பொன்மொழிகள் Relationship Quotes For Whatsapp In Tamil

ஒவ்வொரு உறவும் அழகானது. ஒரு உறவை மற்றொன்றோடு என்றுமே ஒப்பிட முடியாது. நம் வாழ்க்கையில் நாம் கடந்து வரும் உறவுகள், நம் வாழ்க்கையின் அந்த காலகட்டத்தை நிரப்புவதோடு, வாழ்க்கைக்கான அர்த்தத்தத்தையும் தந்து விடுகின்றனர். எத்தனை எத்தனை உறவுகள். ஒவ்வொரு மனிதரும், தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் தங்களுக்கு கிடைக்கும் உறவை எண்ணி நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.

நீங்கள் உங்கள் அன்பார்ந்த உறவுகளுக்கு சில அழகான கவிதைகளையும், பொன்மொழிகளையும் (relationship quotes) பகிர விரும்பினால், இங்கே உங்களுக்காக ஒரு தொகுப்பு!
தொடர்ந்து படியுங்கள்!

Table of Contents

  காதலர்களுக்கான வாட்ஸ் ஆப் பொன் மொழிகள் (Couple Quotes For Whatsapp Status)

  1. நான் கடவுளிடம் கேட்கிறேன் என் கனவினை நினைவாகி கொடுக்குமாறு,
  உன் வாழ்வின் அங்கமாக இருக்க விளைகிறேன்,
  உன் காதல் எனக்கு சுகமாக இருக்கின்றது,
  என் காதல் மிகவும் ஆழமானது!

  2. அன்பே,
  நீ எனது அழகிய கனவென்று சொல்லுவேன்,
  நீ என் வாழ்நாளின் வெற்றி என்று உறுதியாக கூறுவேன்,
  நீ கடவுள் எனக்கு கொடுத்த மிகச்சிறந்த பரிசாக நம்புகிறேன்,
  நான் உன்னை முற்றிலும் உண்மையாக காதலிக்கிறேன்!

  3. ஒரு சிறு அறிமுகத்துடன் எங்கேயோ தொடங்கியது,
  நட்பாக வளர்ந்து,
  வலிமையான உறவு கொண்டு இப்பொழுது நாம் காதலர்களாக,
  இதுவே என் காதல் கதை அன்பே!

  4. என் காதலுக்கு எல்லை கிடையாது,
  என் நம்பிக்கைக்கு வரைமுறை கிடையாது,
  என் பாசத்திற்கு விளக்கம் கிடையாது,
  என் நேசத்திற்கு பிரிவினை கிடையாது.

  5. உனது காதல் நிலவு அல்ல வளர்ந்து தேய,
  நான் உன் மீது வைத்திருக்கும் காதல் உயர்ந்து நிற்கும் வானத்தை போல!

  6. என் காதலைச்சொல்ல வார்த்தைகள் கூட உதவவில்லை,
  வேறேதும் வழி உள்ளதா என் காதலை வெளிபடுத்த?

  7. என்ன மாயம் செய்தாயோ தெரியவில்லையே!
  உன்னுடைய கண் சிமிட்டும் வித்தையில் மயங்கி உன் முன்னே இன்று
  அடங்கி தானே போனேன் என்னவளே…

  8. நான்கு திசைகள் இருப்பது தெரியும்
  நான்கு திசைகளிலும் நீ இருப்பது தெரிகிறதே...
  அது ஏன் என்று தான் தெரியவில்லை...
  இது தான் காதலா?
  இல்லை இதுவும் காதலா?

  9. பூங்காற்று புதிதாய் தந்த வாசம் தான் எண்ணை கடந்து வந்த உன் நேசம்
  வானவில் தண்ட வண்ணங்கள் தான் உன் மீது நான் கொண்ட எண்ணங்கள்
  இயற்கை தந்த இன்பம் தான் எனக்குள் இம்சை செய்யும் இவள்
  இவள் என் காதலி!

  10. நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லை
  ஆனால் உன் கண்களும் என் கண்களும் சந்திக்கும் போது உண்மை மட்டுமே பிறக்கிறது....

  அழகான உறவுகளுக்கான பொன்மொழிகள் / கவிதைகள் (Cute Relationship Quotes)

  Instagram

  11. எளிமையான அழகே என்னை உன்னிடம் கவர வைத்தது,
  உன் எளிமையும், அடக்கமும் மிக அழகு,
  உன்னுடைய வெட்கத்தை கூட நான் ரசிப்பேன்,
  நீ எனக்கு கடவுள் கொடுத்த வரம்!

  12. அழகு – இந்த வார்த்தை உன்னை கொண்டே உருவானது,
  நடனமிடும் மயிலும், கூவும் குயிலும், பேசும் கிளியும் கூட உன்னை கண்டு வெட்கி ஓடும்,
  நீ என் இனிய செல்ல தேவதை ஆவாய்,
  உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்!

  13. நான் உன்னுடன் இருந்தால் அதிர்ஷ்டம் என்னுடையது ஆகிறது,
  நான் உன்னுடன் இருந்தால் வாழ்க்கையே அழகாகிறது,
  நான் உன்னுடன் இருந்தால் காதல் தெய்வமாக தெரிகின்றது,
  நான் உன்னுடன் இருந்தால் என்னையே எனக்கு பிடிகின்றது!

  14. நாம் உயிர் வாழ சுவாசிப்பது காற்றை என்றால்
  என் இதயம் உயிர் வாழ நான் சுவாசமாய் நேசிப்பது உனது காதலை!

  15. பார்வைகள் என்பது பார்ப்பதற்கு தானே என்றிருந்தேன்
  சில சமயம் பைத்தியமும் ஆக்கும் என்று அழகே உன்னை பார்த்த பின்பு
  தானே எனக்கும் புரிந்தது...!

  16. திரும்பிக் கூடா பார்க்காத உன்னை திரும்பத் திரும்ப பார்க்கிறேன்...
  ஒரு நாள் எண்ணை திரும்பிப் பார்ப்பாய் என்று....
  நீ திரும்பிய போது தான் தெரிந்தது
  என் எதிர்காலமே திரும்பியதென்று....

  17. கல் நெஞ்சுக்காரி
  கல்லென்று நினைத்தாயோ என் இதயத்தை..?
  உளி கொண்டுடைக்க?
  உன் விழிக் கொண்டுடைத்தாலே போதும்
  விதியென்று மடிவேனடி...!

  18. நீ என்னைக் காணும் போதெல்லாம் நினைத்துப் பார்கிறாயா என்று தெரியவில்லை!
  ஆனால், நான் உன்னைக்காணும் போதெல்லாம் நனைந்து விடுகிறேன் கண்ணீரால்
  உன் நினைவுகளுடன்...!

  19. உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் பேச தெரியாத குழந்தை போல ஆகிறது என் மனம்
  இப்படி இருக்க எப்படி சொல்லுவேன் என் காதலை உன்னிடம்...!

  20. உனக்காக ஒவ்வொன்றையும் விட்டுக் கொடுக்கத் தெரிந்த எனக்கு
  உன்னை விட்டுக் கொடுக்கத் தெரியவில்லை....

  புது உறவுக்கான பொன்மொழிகள் (New Relationship Quotes)

  21. நீ விரும்பினால் உன் வாழ்வின் இறுதி வரை உனக்கு துணையாக வர எனக்கு சம்மதம்,
  தேவைப் ட்டால் என் உயிரையும் உனக்காக கொடுப்பேன்,
  நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்!

  22. நான் உன்னுள் என் சுவர்க்கத்தை கண்டேன், வாழ்க்கை அழகாகே தெரிகின்றது,
  நான் உன்னுள் என் வாழ்கையை கண்டேன், வாழ்க்கையின் அழகிய நிறம் கூடுகின்றது!

  23. அன்பு கள்வனே காதல் என்ற ஒற்றை வைத்தை தானே என் மனதில்
  நீ விதைத்தாய்
  இன்று இடைவிடா உன் நினைவுகள் என் இதயத்தில் மரமாகி என் உயிரில் கலந்து
  தீராத சுமக்க முடியாத சுகமாக பாரமாகி விட்டாயே...!

  24. காரணங் கருதாமல் கண்டிட்ட உறவுகள்
  காலங் கடந்தும் கைகோர்த்துக் கலகலக்கும்...
  காரணங் கண்டிங்கு கலந்திட்ட உறவுகள்
  காரனமழிய உடனிணைந்து உடன்கட்டை ஏகிச்சாகும்....

  25. கள்ளமில்லா புன்னகையை எப்போதும் அணிகலனாக
  அணிந்து கொண்டால்
  காலத்திற்கும் அழியாத கபடமற்ற உறவுகள் பல தேடிவரும்....

  26. நம் வாழ்வில் சில உறவுகள் புதிய புதையலை போல
  நமக்கு கிடைத்து, சிறிது காலத்திற்குள் ஒரு புரியாத புதிராகவே புதைந்து விடுகிறது...

  27. பல வருடங்கள் கட்டி காத்த உறவுகளையும் தரத்து எரியும் வில்லாமை...
  தேவை இல்லாமல் வெளிப்படும் ஒரு வார்த்தைக்கும், தேவை பட்ட போது வெளிப்படாத மௌனத்திற்கும் உண்டு...!

  28. இன்பத்தில் மட்டுமல்ல
  துன்பத்திலும் துணை நிற்கும் உறவையே உள்ளம் தேடுகிறது

  29. எடுத்து கொள்ள முடியா சில உரிமைகளுக்கும்
  கொடுத்து விடப்படாத சில உரிமைகளுக்கும் இடையே
  உழன்று தவிக்கின்றன சில உண்மை உறவுகள்...
  சில உண்மை உணர்வுகள்...

  30. பதில் அற்ற ஊம்மையல்ல நான்...
  எந்தன் தெளிவான பதில் நிச்சயம் பொசுக்கி விடும் உங்கள் உணர்வையும்
  என் உறவையும்....

  சுவாரசியமான உறவுகளுக்கான பொன்மொழிகள் (Interesting Relationship Status )

  Instagram

  31. நான் உன் இதய வீட்டில் வசிக்க விரும்புகிறேன், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, என் வாழ்நாள் முழுவதும் அங்கு தங்கிட ஆசைபடுகிறேன்!

  32. உன்னை ரசிப்பதே எனக்கு சுகமாக இருக்கிறது,
  என் முன்னே எப்பொழுதும் நீ இருப்பாயாக வாழ்நாள் முழுதும்!

  33. நொடிக்கு ஒரு முறை தான் இந்த இதயம் துடிக்கும்
  அந்த ஒரு நொடிக்குள் கூட பல முறை இந்த துடிக்கும் இதயம்
  உன் பெயரையே கூறும்!

  34. சிறைக் கைதிக்கு கூட அல்லவா விடுதலை உண்டு
  ஆனால் காதல் என்ற ஒன்றுக்காக உன்னிடம் சிறைபட்ட என் மனதை நித்தமும் தீண்டி
  உன் பாச வலைகளில் மயக்க செய்த கொடுமையான இந்த சிறைத்தண்டனையை கூட
  இனிமையான கனங்கலாக்கி என் மனதை குளிர செய்து விட்டாயே
  என் ஆருயிரே...!

  35. உன்னை பற்றி நினைக்கும் போது, என் மனதில் ஆயிரம் பூக்கள் பூத்தது
  போன்று உள்ளது
  அந்த பூக்கள் ஒவ்வொன்றிலும் உன் முகம் மட்டுமே எனக்கு தெரிகின்றது!

  36. கருவிழியின் இருவிழியால் எண்ணை ஒரு வழியாக்கினாள்...
  கானல் நீர் எனத் தெரிந்தும் காதல் எண்ணில் உன்னைக்
  காணும் அந்த நொடிகளில்... !

  37. உன் சிரிப்பில் நான் மயங்கவில்லை...
  உன் பார்வையில் நான் தொலையவில்லை...
  இருந்தும் என் மனம் உன்னையே தேடுகிறது ஏன்....?

  38. பார்க்கக் கூடாது என்று நானும், பார்க்கக் கூடாது என்று நீயும் நினைத்துக் கொண்டே பார்த்து விட்டோம்
  நான் பார்கிறேனோ என்று நீயும், நீ பார்க்கிறாயா என்று நானும்....!

  39. என் வாழ்வில் வர்ணங்கள் காட்டும் வானவில்லாய் வந்தவள் நீ!
  ஆதலால் தானோ உன்னை வர்ணிக்கும் முன்பே மறைந்து போனாய்.... !

  40. விழி மூடும் நேரம் எல்லாம் வீணாக போனதில்லை!
  விண்ணை தொடும் உன் நினைவு உள்ளுக்குள் உட்கார்ந்து எண்ணை
  தினமும் தாலாட்டுதடி...!

  உறவுகளுடன் மனக் கவலையை வெளிப்படுத்தும் பொன்மொழிகள் (Sad Relationship Status)

  41. துன்பம் கூட எனக்கு மகிழ்ச்சியாய் தோன்றுகிறது உன் காதல் என்னுடன் இருந்தால்,
  என் மனம் இன்பத்தை கூட ஏற்க மறுக்கிறது நம் காதல் உடைத்தெரியபட்ட பொழுது!

  42. நீ இல்லாத காதல், துடிப்பு இல்லாத இதயம் போன்றது,
  நீ இல்லாத காதல், நினைவு இல்லாத மனதை போன்றது,
  நீ இல்லாத காதல், வார்த்தைகள் அற்ற வாக்கியம் போன்றது,
  நீ இல்லாத என் வாழ்வு, வாழ்வே அன்று!

  43. எனது வாழ்க்கையில் நான் கண்ட கஷ்ட நஷ்டங்களை கூட
  என்னவளே உன்னிடம் மனம் விட்டு உரையாடும் மணிப் பொழுதில்
  அனைத்தும் நீ என்னோடு இருக்கும் தருவாயில் சமாளித்து விடும் திறனை என்னுள் நீ உட்புகுத்தி விடுகிறாயே...!

  44. பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல...
  அவர்களை அதிகமாக நினைப்பதற்கே....!

  45. உன் குரலை கேளாது என் மனதில் ஏனோ தயக்கம்
  எனது இமைகளை மூடி ஏங்குகிறேன், என் மார்பில் உன் முகம் பதித்து
  உன் மூச்சு காற்றை என்னுள் வாங்கிக் கொள்ள உதடுகள் சொல்லாத
  ஏக்கங்களை என் இதயம் சொல்ல துடிக்கிறது
  ஆனால் என் இதயத் துடிப்பின் ஓசையை நீ உணராது போனது ஏனோ!

  46. எவ்வளவு தான் நீ எண்ணை விளக்கி வைத்து காயப்படுத்தினாலும்
  மீண்டும் மீண்டும் நான் உன்னிடமே வருவது என் பலவீனம் அல்ல
  நம் உறவின் மீது வைத்துள்ள நம்பிக்கை!

  47. எண்ணை பிரிவதும் மறப்பதும் உன்னால் முடியும் என்பது எனக்குத் தெரிந்தது தான்....
  என்னால் இயலாது என்பது உனக்கும் தெரிந்தது தானே
  பிறகு எதற்க்காக கொடுத்தாய் இந்த பிரிவை...?

  48. இத்தனை வருடங்களில் உனக்காக நான் இழந்தது மட்டுமே அதிகம்
  நீ எமாட்ட்ருகின்றாய் என்று தெரிந்தும் கூட
  தொடர்ந்து ஏமாறுகின்றேன், ஏமாற்றுவது நீ என்பதால்....

  49. உன்னை நினைக்கும் மனதை கொடுத்த ஆண்டவனை மறக்கவே மாட்டேன்...
  உன்னை மறக்க நினைக்கும் மனதை கொடுக்க நினைத்தால் அந்த ஆண்டவனை நான் நினைக்கவே மாட்டேன்....

  50. உன்னிடம் காதல் சூழ ஓர் ஆயிரம் முறை ஒத்திகை பார்க்க நான் தயார்...
  ஆனால், ஒத்திகை பார்க்க நீ என்னுடன் இல்லையே...!

  சிறந்த உறவுகளுக்கான பொன்மொழிகள் (Best Relationship Quotes)

  Instagram

  51. சொற்களை விட அது புரிந்து கொள்ளப்படும் விதமே உறவுகளை பதம் பார்க்கிறது...
  தேவையான இடங்களில் தேவைப்பட்ட வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துங்கள்!

  52. நெருக்கமானவர்களை விட்டு தூரத்தில் இருந்தால் மட்டுமே,
  உறவு நீண்ட நாள் மனக்கசப்பு ஏதுமின்றி நிலைக்கும்!

  53. பின் தொடரும் போது போதிய இடைவெளி அவசியம்...
  வாகனங்களுக்கு மட்டும் அல்ல...
  அன்பான உறவுகளுக்கும் தான்....

  54. சில உறவுகள் நம்மை வேண்டாமென விலகிப் போனாலும்
  நாட்காட்டிகள் அவர்களை நினைவு படுத்துகின்றன
  பிறந்தநாள் நினைவுகளாய்...

  55. சில விஷயம் புரிந்தால் தான் பிடிக்கும்...
  சில விஷயம் பிடித்தால் தான் புரியும்
  வாழ்க்கையில் சில உறவுகளும் அது போலத் தான்...
  பிடித்தும் புரியாத பல உறவுகள்....!

  56. எனக்கான சிறிய உலகத்தில் நான் அமைத்துக் கொண்ட மிகப் பெரிய உறவு நீ மட்டுமே என்பதால்
  என்ன நினைப்பாய் என்று தயக்கம் எனக்கில்லை...!

  57. நீ நீயாக மட்டும் நிலையாக இருக்கும் நொடியிலே
  உன் உள்ளம் தேடும் உறவே உன் அன்புக்கான நிலையான உறவு...!

  58. இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் துணை நிற்கும் உறவையே உள்ளம் தேடுகிறது!
  நெஞ்சத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உறையும் உறவையே மனம் நாடுகிறது....

  59. மீண்டும் சிந்திப்போம் என்ற நம்பிக்கையில் தான் பாதி உறவுகள் பிரிந்து செல்கிறது....
  அது உண்மையான உறவானால் உனக்காக கல்லறை வரை காத்திருக்கும் நம்பிக்கையுடன் பிரிந்து செல்....

  60. தொலைவில் தெரிந்த உறவு இனிக்கவே செய்தது...
  அருகிலே சென்றவுடனே தெரிந்தது அதுவும் கானல் நீராகி போனதென்று....

  உண்மையான உறவுகளுக்கான பொன்மொழிகள் (True Relationship Quotes)

  61. உறவுகளிடம் சற்று விலகி இருக்க கற்றுக் கொண்டேன்
  நெருங்கி பழகியதால் ஏற்பட்ட வலியை விட விலகி இருப்பதால் ஏற்படும் வலி குறைவு என்பதால்.....

  62. சில சமயங்களில், காலடி வரை வந்து விட்டு காலை நனைக்காமல் நம்மை ஏமாற்றி பின் செல்லும் கடல் அலைகள் போல தான் உறவுகளும்...
  நாம் அதிகம் நேசம் கொள்ளும் உறவும்... உறவு ஆழமாகும் சமயத்தில் நம் கனவுகளை எல்லாம் உடைத்து காயமாக்கிவிட்டு சென்று விடுகிறது....

  63. அன்பெனும் கனியை எதிர்பார்த்து ஏமாந்தேன்...
  மனதில் ஒன்றும் புறமொன்றும் பேசி மனதில் ஆறாத வடுக்களை உண்டாக்கி கண்டும் காணாத உறவுகளாகி போவதேனோ....
  வடுக்களை சுமக்க செய்த அவ்வுறவுகள் இருந்தென்ன பயன்....

  64. தாகம் தீர்க்கும் தண்ணீர் என பருக சென்றேன் அது கானல் நீர் என அருகே சென்ற போது தான் தெரிந்தது.....
  சில உறவுகளின் அன்பும் கானல் நீரை போல் மாயை காட்டுகிறது....

  65. உரிமைகளின் அளவை நிர்ணயிக்கும் உரிமையை கொடுக்கும் உறவுகள் தான்
  பின்னாளில் உரிமையின் எல்லையை கற்றுக் கொடுக்க கொடுக்கிறார்கள்....

  66. நம் மீது கொண்ட எதிர்பார்ப்பில் ஏமாற்றமே வந்தாலும்...
  எல்லாவற்றையும் மறந்து விட்டு எதார்த்தமாக எப்போதும் போல் அன்புடன் (பாசம்) பேசும் உறவுகள் கிடைப்பது எல்லையிலாத சந்தோசம்....

  67. இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை புரிது கொள்ளாத உறவுகளை விட நம்மை புரிந்து கொள்ளும் நட்பே வாழ்வில் நமக்கு கிடைத்த பொக்கிஷம்..!

  68. இத்தனை உறவுகள் எனக்காய் நீ கொடுக்க நான் கொடுப்பது மரியாதை மட்டுமே
  உறவுகளுக்கு மட்டுமல்ல, உறவுகளின் உணர்வுக்கும்...!

  69. எண்ணில் தேவை உள்ள போது இருந்த உறவுகள் எனக்கு தேவைகள் ஏற்படும் போது காயப்படுத்தி பார்ப்பதில் என்ன ஆனந்தமோ
  நானறியேன்....

  70. உறவுகளிடம் சற்று விலகி இருக்க கற்றுக் கொண்டேன்
  நெருங்கி பழகியதால் ஏற்பட்ட வலியை விட இந்த இடைவெளி தந்த வலி குறைவு என்பதால்....!

   

  மேலும் படிக்க - நீங்கள் அதிகம் நேசிப்பவருக்கு சுவாரசியமான காதல் கவிதைகள்!மேலும் படிக்க - காதலர்களிடையே பிரச்சனைகளின்றி அந்யோநியமாக இருக்க பின்பற்ற வேண்டிய முக்கிய கட்டளைகள்!

  பட ஆதாரம்  - Instagram

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!