Beauty

நீண்ட சில்கி கூந்தல் உங்கள் கனவா ? முடி உதிர்வால் பாதிப்பா ? கவலைய விடுங்க! இந்த எண்ணெய் இருக்கே !

Deepa Lakshmi  |  May 24, 2019
நீண்ட சில்கி கூந்தல் உங்கள் கனவா ? முடி உதிர்வால் பாதிப்பா ? கவலைய விடுங்க! இந்த எண்ணெய் இருக்கே !

பெண்கள் என்றாலே அவர்களின் அடையாளம் என்பது நீண்ட கூந்தல் தான். இதனை பல நூற்றாண்டுகளாக நாம் சரித்திர கதைகளிலும் சங்க காவியங்களிலும் அறிந்து வந்திருக்கிறோம்.

நீண்ட கருமையான மின்னும் கூந்தல் வேண்டாம் என்று எந்த பெண்ணும் சொல்ல மாட்டார். கூந்தல் உதிர்வுகளை நிறுத்தி முடியை கருமையாக வளர செய்ய ஒரு அற்புதமான தைலம் தான் வெங்காய தைலம். (onion)

வெங்காயம் கூந்தல் உதிர்வு சொட்டை விழுதலையும் கூட சரி செய்கிறது. சில்கியான கூந்தலை நமக்கு வழங்குகிறது. இந்த எண்ணையை தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.

மஞ்சள் பற்கள் உங்கள் அழகை கேள்விக்குறி ஆக்குகிறதா? வெண்மை பற்களை வெகு சுலபமாக பெற சில எளிய குறிப்புகள் !

இதற்கு தேவையானவை

நல்லெண்ணெய் 100மிலி
தேங்காய் எண்ணெய் 100 மிலி
கறிவேப்பிலை 1 கப்
மருதாணி 1 கப்
சின்ன வெங்காயம் 5 அல்லது ஆறு
நெல்லிக்காய் 1/2 கப்
செம்பருத்தி பூ 2 எண்ணிக்கை

நல்லெண்ணெய் கூந்தல் வேர்பகுதிகளை வலிமையாக்கி வளர வைக்கிறது. உடல் சூட்டை தணிக்கிறது. தேங்காய் எண்ணெய் கூந்தலின் வடிவை நேராக்கி கண்டிஷன் செய்கிறது.

கறிவேப்பிலை நரை முடியையும் கறுப்பாக்கும் திறமை கொண்டது. இதில் உள்ள பீட்டா கெரோப்டின் முடியை அடர்த்தியாக வளர உதவி செய்கிறது.

மருதாணி ஆரோக்கியமான கூந்தலை உறுதி செய்கிறது. நிறத்தை கூட்டுகிறது. பளபளப்பு மற்றும் கண்டிஷனிங் செய்கிறது.

முகத்தின் அழகு நகத்திலும் ஒளிரட்டும்! நெய்ல் ஸ்டிக்கர்கள் ஒரு அறிமுகம்!

வெங்காயம் இதில் உள்ள சல்பர் எனும் வேதி பொருள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கூந்தலின் இயற்க்கை தேவைகளில் சல்பரும் ஒன்றுதான். ஆகவே முடி சொட்டையாக அல்லது குறைவாக வளரும் பகுதிகளில் வெங்காயத்தை வெட்டி தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி இருப்பதாய் காணலாம்.

நெல்லிக்காய் நரைமுடியை மாற்றுகிறது. ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தலுக்கு நெல்லிக்காய் இன்றியமையாத ஒன்றாகும்.

செம்பருத்தி பூக்கள் முடியின் பளபளப்பு மற்றும் வழுவழுப்பு தன்மைக்கு உத்திரவாதம் தருகிறது. தேவைக்கேற்றபடி சேர்த்து கொள்ளுங்கள்.

செய்முறை

கனமான வாணலி அல்லது அகன்ற பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் முதலில் நல்லெண்ணெய் ஊற்றவும். மீடியமான வெப்பம் இருக்க வேண்டும். அதன் பின்னர் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

சூடானதும் நசுக்கிய வெங்காயத்தினை போடவும் அது சிவந்து வந்த பின்னர் நெல்லிக்காய்களை சேர்க்கவும். கருகாமல் வதக்க வேண்டியது அவசியம்.

அதன் பின்னர் கருவேப்பிலையை போடவும். அது சற்று வதங்கிய உடன் மருதாணி இலைகளை போட்டு வறுக்கவும். மொறுமொறுவென வறுபட்ட பின்னர் இறுதியாக செம்பருத்தி பூக்களை சேர்க்க வேண்டும்.

மேலும் ஐந்து நிமிடங்கள் அனைத்தையும் வதக்க வேண்டும். அதன் பின்னர் எண்ணெய் இளம் பச்சை நிறத்துக்கு மாறிவிடும். அற்புதமான வாசனை இருக்கும். இப்போது அடுப்பை அணைக்கவும்.

அரை மணி நேரம் எண்ணையை ஆற விடவும்.

அந்த’ இடத்தில் இருக்கும் கருமையால் கவலையா ! இரண்டே வாரங்களில் அதனை போக்கும் எளிய தீர்வுகள் !

அதன் பின்னர் இந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமிக்கவும். வாரம் இருமுறை இந்த எண்ணையை நன்கு தடவி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊற விட்டு பின்னர் குளிக்கவும்.

ஷாம்பூ போதுமானது. வெங்காய வாசனை தலையில் இருப்பதாக உணர்ந்தால் ஆப்பிள் சீடர் வினிகரை தலையில் தடவி குளித்தால் நீங்கி விடும்.

ஒரே மாதத்தில் உங்கள் கூந்தல் உதிர்வுகள் நீங்கி உங்கள் கூந்தல் அடர்த்தியான கருமை நிறம் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Beauty