Celebrity Life

நடிகை ஹன்சிகாவிற்கு தீபாவளி பரிசாக கிடைத்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் : விலை இவ்வளவா!

Swathi Subramanian  |  Oct 30, 2019
நடிகை ஹன்சிகாவிற்கு தீபாவளி பரிசாக கிடைத்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் : விலை இவ்வளவா!

நடிகை ஹன்சிகா 2011ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்த இவர் குறுகிய காலகட்டத்திலையே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

அவரது கொழு கொழு தோற்றதால் ரசிகர்கள் மனதை வென்றார். இதனால் அவரை சின்ன குஷ்பு என்றே அவரது ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துள்ளார். 

twitter

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் புத்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் – ஹரீஷ் நாரயணன் இயக்கவுள்ள இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கவுள்ளது. இந்நிலையில் ஹன்சிகா தீபாவளி பண்டிகையை தனது  குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது ஹன்சிகாவை ஆச்சரியப்படுத்தும் பரிசு ஒன்றை அவரது அம்மா அளித்துள்ளார். அவருக்கு 12 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். 

திருமணத்திற்கு பின் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா! இன்ஸ்டாக்ராமை கலக்கும் ஆல்யா!

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்த கம்பெனி மற்ற கார் கம்பெனிகளிலிருந்து சற்றே வித்தியாசமானது. கார் கேட்டு விண்ணப்பிப்பவரின் பின்னணியை ஆராய்ந்து அதில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே காரை வழங்க அந்த கம்பெனி அனுமதி வழங்கும். பல முன்னணி நடிகை நடிகர்களின் விண்ணப்பங்கள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளன. 

twitter

தமிழ்நாட்டில் நடிகர் சந்தானம் கூட இந்த கார் வாங்க விண்ணப்பித்திருந்தார் ஆனால் கம்பெனி நிராகரித்து விட்டது. தமிழ்நாட்டில்  நடிகர் விஜய் தனுஷ் இயக்குனர் சங்கர் ஆகியோரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய் கார் உள்ளது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கு இந்த கார் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன் : படப்பிடிப்பு பூஜைகள் தொடங்கியது!

ஹன்சிகாவின் தாயார் டாக்டர் மோனா மோத்வானி மகளுக்கு ரோல்ஸ் ராய் கார் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதை கார் நிறுவனம் ஏற்றுக்கொண்டு வழங்கியுள்ளது. இவருக்கு நீண்ட நாட்களாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். 

twitter

அதனால் அவரது அம்மா, ஹன்சிகாவுக்கு தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த கார் ரோல்ஸ் ராய் பேந்தோம் 8 சீரிஸ் வகை கார் ஆகும். நடிகர்கள் சிரஞ்சீவி, நாகர்ஜுனா,அமிதாப் பச்சன், மோகன்பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும் புன்னகை அரசி சினேகா : வளைகாப்பு புகைப்படங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity Life