இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும் புன்னகை அரசி சினேகா : வளைகாப்பு புகைப்படங்கள்!

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும் புன்னகை அரசி சினேகா : வளைகாப்பு புகைப்படங்கள்!

தென்னிந்திய சினிமா திரை உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. முதன் முதலில் மலையாளத்தில் ‘இங்கனே ஒரு நீல பக்சி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து  2001ம் ஆண்டு ‘என்னவளே’ என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானர்.

இந்த படத்தின் மூலம் அவர் மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து மம்முட்டியுடன் ஆனந்தம் திரைப்படம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராஃப், புன்னகைதேசம், சிலம்பாட்டம், பவானி ஐபிஎஸ், பிரிவோம் சந்திப்போம் என பல படங்களில் நடித்துள்ளார்.

இருபது வயதிலேயே திருமணம் - நீலிமா ராணியின் வெளிவராத குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக !

முன்னணி நடிகர்களான கமல் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளது மட்டுமின்றி விளம்பர மாடலிங் கூட செய்து வந்தார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். இவருக்கு கோலிவுட் சினிமாவில் தற்போது வரை  மிகபெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. 

twitter

சினிமா திரையுலகில் உள்ள நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த வரிசையில் பாக்கியராஜ்- பூர்ணிமா, அஜித்- ஷாலினி, சூர்யா- ஜோதிகா ஆகியோர்களை  தொடர்ந்து பிரசன்னா-சினேகாவும் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

2009ம் ஆண்டு சினேகா - பிரசன்னா இணைந்து ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில்  நடித்தார்கள். இந்த படத்தில் தான் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி திருமண பந்தத்தில் இணைந்தார்கள். 

twitter

கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2015ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை சினேகா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிவி ரியாலிட்டி ஷோக்களில் வலம் வந்தார். 

திருமணத்திற்கு பின் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா! இன்ஸ்டாக்ராமை கலக்கும் ஆல்யா!

இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.  தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சினேகா தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

twitter

இரண்டாவது குழந்தைக்காக குடும்பமே காத்திருக்கும் நிலையில் நடிகை சினேகாவுக்கு தற்போது வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. எளிமையாக நடந்த இந்த விழாவில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. 

மேலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சினேகா-பிரசன்னாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினேகாவை குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னால் நம்ப முடியாது என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் தற்போதும் சினேகா அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

முதல் முத்தத்தின் போது என் உதடுகள் உறைந்து விட்டன.. 'தலைவி' கங்கணாவின் காதல் அனுபவங்கள் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!